692 products
692 products
692 products
Durogan/துரோகன்-Kesananthan Agaran/கேசநந்தன் அகரன்
Regular price Rs. 160.00
அகரனுடைய எழுத்தின் சிறப்புகளாக சிலவற்றைச் சொல்லலாம்:
தனித்துவமான சொற்கள்; நூதனமான உவமைகள்; விசித்திரமான, கறுப்பு நகைச்சுவை. ஆரம்ப எழுத்தாளர் என்ற தடயமேயற்ற முதிர்ந்த நடை.
போர்ச்சூழல் கதைகள், உளவியல் ஆழம் கொண்டவை, அறிவியல் புனைவு என பல்வேறு வகைமைகள்.
வேளையின் புதிர்களைப் பேசும் கையறுநிலைக் கதைகள். வெளிப்படையாக அரசியலை முன்னிறுத்தாதவை. சொந்த மண்ணில் நிகழ்பவையும் சரி, அந்நிய தேசத்தில் நடப்பவையும் சரி, தீனர்களின் வாதையைப் பேசுகிறவை.
சித்திரங்களின் நுட்பம்வழி நகரும் கதைகள் சில. உணர்ச்சிகளைக் கிளர்த்தி நகர்கிறவை சில. அபுனைவின் சாயல் கொண்டவை ஓரிரண்டு.
சில கதைகள், வாசிக்கும் மனத்தில் பதற்றமூட்டுபவை; அதனாலேயே நிறைவையும் அளிப்பவை. கலையில் பெருகும் துயரம்தான் வாசக மனத்துக்கு எத்தகைய ஆசுவாசத்தை, இன்பத்தை அளிக்கிறது...!
புலம்பெயர் இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத பெயர்களில் ஒன்றாக கேசநந்தன் அகரன் உருவெடுக்கும் காலத்தை முன்னுணர்த்தும் தொகுப்பு இது...
- யுவன் சந்திரசேகர்
Veliaatkkal/வெளியாட்கள்-S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்
Regular price Rs. 250.00
வீட்டுக்கு வரும் வெளியாட்கள் தண்டபாணியிடம் கணக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு நேராக மாடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கண்ணாடியின் முன் நின்று தலை வாருவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறவர்களும் வாரத்திற்கு ஒரு நாள் வருகிறவர்களும் மாதத்திற்கு ஒரு தடவை வருகிறவர்களும் தலைசீவிக் கொள்ளாமல் சென்றதில்லை. அவர்கள் தலைசீவிக் கொள்வதற்காகவே வீட்டிற்கு வருகிறார்கள் என்று தோன்றும். நீலநிறச் சீப்பைக் கையில் பிடித்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பழைய ஞாபகம் ஒன்றைத் தங்களது தலைமுடியின் வழியாகப் பார்ப்பதைப் போல கூர்ந்து நோக்கிய படி தலைவாருவார்கள். யாராவது பெண் வந்து தனது வீட்டில் தலைவாருகிறாளா, ஜடை போட்டுக் கொள்கிறாளா, ஆண்கள் மட்டும் வீட்டிற்கு வருகிறார்கள் என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தனக்கும் தண்டபாணிக்கும் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டுந்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாள், அதுவும் அவள் கொண்டுவந்த சீப்பில் தலைவாரிக் கொண்டாள் என்பதை நினைத்தபோது அவளுக்கு வேதனையாக இருந்தது.
Oru Claustrophobic Pennum Carlos Endru Peyaridapatta Nathaiyum/ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 120.00
“நினைப்பது கமலியா, கார்த்திகாவா? கமலிக்கா
En Thalaikkul Oru Kadal Irukkiradhu/என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 90.00
கார்த்திகாவின் கவிதைகள், கருத்தும் அனுபவமும் முயங்கும் புள்ளியைத் தேடி நகர்கிறவை. காட்சிகளும் அவற்றைப் பற்றிய சிந்தனையோட்டமும் இரண்டறப் பிணைந்திருப்பவை. நனவும் பிரமையும் உருவக மொழியில் பரிவர்த்தனை கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஓவியம்போன்ற துல்லியம் கொண்ட காட்சிகளை முன்னிருத்தி, உணர்வுவீச்சுகளைப் பதிவுசெய்ய முனைகிறவை.
நவீன உலகின் பொருட்களும், நபர்களும், இடங்களும், உணர்வுகளும் சரளமாக வந்துசெல்லும் கவியுலகம் இவருடையது. தட்டி ஆச்சியும் வான்காவும் காளியும் சிந்திக்கும் ஊசியும் இயல்பாக இடம்பெறும் உலகம். ரப்பா நூயியும், டென்னிஸ் வீரர்களும், சாம்பாரில் ஊறிய பூரியும் நிரம்பியிருக்கும் நூதன உலகம்.
இறுக்கமேயற்ற மொழியில், புகாரற்ற தொனியில், அன்றாடத்தின் மறைபுலத்தைத் தெளிவித்துக்கொள்ள முற்படும் கவிதைகள். துளியும் அவநம்பிக்கையோ புலம்பலோ தொனிக்காதவை. அதற்காக, செயற்கையான நம்பிக்கையை, உற்சாகத்தை ஊட்டுவதுமில்லை.
இடங்களும் காலமும் விளிம்புகளின்றிப் பரந்திருக்கும் கவிதைவெளியில், உருவகங்கள், பிரமைகள்வழி சாதாரணக் காட்சிகள் கூர்மை கொள்கின்றன. தினசரியின் அலகுகளை புனைவின் களத்தில் நிறுத்திக் கையாளும் கவிதைகள் இவை.
- யுவன் சந்திரசேகர்
Kanai Yevu Kaalam/கணை ஏவு காலம்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 300.00
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னை சார்ந்து தமிழில் எழுதப்பட்டவற்றுள் முதன்மையான ஆவணமாகக் கருதப்படுவது, பா. ராகவனின் ‘நிலமெல்லாம் ரத்தம்’. பாலஸ்தீன் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்பற்று ஆராயும் அந்த வரலாற்றுப் பிரதியின் இரண்டாம் பாகம் இது.
நிலமெல்லாம் ரத்தம், கிபி இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்க காலச் சம்பவங்களுடன் நிறைவு பெறும். இந்நூல், இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டில் ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கும் காலம் வரையிலான சரித்திரத்தின் அரசியல் பின்புலத்தை அலசுகிறது.
யாசிர் அர்ஃபாத், ஷேக் அகமது யாசின் என்கிற இரு பெரும் பாலஸ்தீனியத் தலைவர்களும் காலமானபின்பு அம்மண்ணின் விடுதலைப் போராட்டமும் அரசியலும் வேறு வண்ணம் கொண்டதன் ஆதாரச் சிக்கல்களைப் பட்டியலிட்டு, இது இன்னமும் தீர்வை நோக்கி முன்னகர முடியாமல் இருப்பதன் காரணங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறார் பாரா.
Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 300.00
முழுக்க முழுக்கக் கடவுளைப் பற்றிப் பேசுகிற இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பிரதியோ, தத்துவப் பிரதியோ, புனைகதையோ இல்லை.
தனது மிகச் சிறு வயதுகளில், மதங்கள் அணிவித்த சட்டைகளுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில், விதவிதமான கதையுருவங்களில் தோன்றிப் பரவசமூட்டிய கடவுளைப் பிறகு திகைப்பு அகற்றி நெருங்கிப் பார்க்க முயற்சி செய்த அனுபவங்களைப் பாரா எழுதியிருக்கிறார்.
உருவங்களிலிருந்து கருத்தாக்கம் என்பது மிக நீண்ட, அபாயங்கள் மிகுந்த அகப்பயணம். அப்பயணத்தில் கண்டடைந்த அனைத்தையும் ஆசிரியர் அச்சமோ, தயக்கமோ, வெட்கமோ இன்றி அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் இந்தப் புத்தகம் ஒரு முன்மாதிரி.
Paravai Yudham/பறவை யுத்தம் -பா.ராகவன் /Pa.Raghavan
Regular price Rs. 160.00
இந்தத் தொகுப்பின் முதல் பதிப்பு 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தப் பதிப்பு.
ஒரு பதிப்பே காணாமல் போய் கால் நூற்றாண்டுக்குப் பிறகு திரும்பக் கிடைத்த கதை, இத்தொகுப்பில் இல்லாத - ஆனால் இருந்திருக்க நியாயமுள்ள கதை.
G Indri Amaiyaadhu Ulagu/G இன்றி அமையாது உலகு- Sivaraman Ganesan/சிவராமன் கணேசன்
Regular price Rs. 210.00
எலான் மஸ்க் ‘நான் பார்த்து பயங்கொள்ளும் ஒரே கார்பரேட் நிறுவனம் கூகுள் மட்டும்தான்’ என்று சொல்லியிருக்கிறார். ஜெஃப் பேசோஸ், ‘கூகுள் என்பது ஒரு மலை போன்றது, அதில் ஏற முயற்சி செய்யலாம், ஆனால் அதை நகர்த்துவது என்பதெல்லாம் குதிரைக்கொம்பு’ என்கிறார். மார்க் ஸூகர்பெர்க், கூகுள் நிறுவனத்தில்தான் உலகின் தலைசிறந்த மூளைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றையாவது என்னுடைய நிறுவனத்திற்குக் கடத்திக்கொண்டு போய்விடவேண்டும் என்று எப்போதும் நினைக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பேட்டி கொடுக்கிறார்.
கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல. இன்று உலகின் சர்வ டிஜிடல் காரியங்களிலும் ஏறி அமர்ந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது கூகுள். நானின்றி அசைவதில்லை அகிலம் என்று அமைதியாகவும், பூடகமாகவும் சில நேரங்களில் பூதாகாரமாகவும் வெளிப்படுகிறது. இந்த அதி நவீன டிஜிடல் காலத்தில் கூகுளை ‘நீயின்றி அமையாது உலகு’ என்று சொல்வதில் ஆழ்ந்த பொருளுள்ளது. அது வளர்ந்து, வேர்கொண்டு இன்று செழித்து நிலைத்திருக்கும் கதையை விரிவாகச் சொல்கிறது இப்புத்தகம்.
சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 வருடக் கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். கணினி, நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலானவற்றைப் பற்றித் தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
Maadheeswari/மாதீஸ்வரி- Shahraj/ஷாராஜ்
Regular price Rs. 290.00
ஷாராஜின் ‘துலுக்குவார்பட்டி ட்ரையாலஜி’ என்னும் மும்மை நாவல்களில் முதலாவது பெருந்தொற்று. இரண்டாவது இந்த மாதீஸ்வரி.
ராணுவ ஒழுங்கு போன்ற கட்டுப்பாட்டில் ஊரை நிர்வகித்து வந்தவர், முன்னாள் ஊர்த் தலைவரான மிராசுதார் சென்ராயன். அவரது மரணத்துக்குப் பிறகு அவரின் விதவையான மாதீஸ்வரி, பிற மிராசுதார்கள், பண்ணையார்களின் எதிர்ப்புக்கிடையே ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், கல்வியறிவற்றோர், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறாள். இந்நிலையில் அவளது குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத அசம்பாவிதங்களாலும், அதன் பின்விளைவுகளாலும் குடும்பம் சிதைந்து, ஊரும் பாதிக்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் அவள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, ஒரு வார காலத்தில் இன்னும் சில எதிர்பாராத சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்தப் பின்புலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தை முன்னிட்டு மாதீஸ்வரி, அவளின் இளைய மகன், பேரன் ஆகியோருக்கிடையே நிகழும் பாசப் போராட்டம் இந்த நாவல்.
Andhi Vaanin Ayiram Velli/அந்தி வானின் ஆயிரம் வெள்ளி- Dhamayanthi/தமயந்தி
Regular price Rs. 120.00
நடுநிசியில் ஏதோ ஒரு பெரிய சுரங்கப்பாதைக்குள் புதைந்துபோய்ச் சிக்குவதை போன்ற கனவுகள் இப்போது எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு உருவகத்தை என்னால் அந்த கனவில் இருந்து மொழிபெயர்த்துக்கொள்ள இயல்கிறது. அப்படி திடுக்கிடும் நேரங்களில் எல்லாம் நான் என் மனதில் தேங்கிக் கிடக்கும் அன்பானவர்களின் முகங்களை நினைவில் இருத்திக் கொள்கிறேன். அது எனக்கு பெரிய பாரமில்லாமல் போகச் செய்கிறது. இத்தொகுப்பில் இருக்கிற அந்தக் கதைகள் எல்லாமே அந்த முகங்களின் பிரதிபலிப்புதான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு பெண் எழுதும் பொழுது எப்போதுமே ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது - இது அவருடைய உண்மையான வாழ்வில் நிகழ்ந்ததா இல்லையா என்ற பெரும் கேள்வி வாசிக்கும் பலருக்கு இருந்தே வருகிறது. ஆமாம். இவற்றில் நிறைய கதைகள் என் வாழ்க்கையில் நடந்த கதைகள்தான் நான் இல்லை என்று மறுக்கவே இயலாது. ஆனால் அவை முழுவதுமாக என் வாழ்க்கையா என்றால் நிச்சயமாக அல்ல. என்னால் ஒவ்வொரு முகங்களின் பின்னால் இருக்கும் மனங்களுள் பிரயாணிக்க முடிகிறது. அதுதான் ஒரு எழுத்தாளருக்கான சவாலாக பார்க்கிறேன். அப்படி பிரயாணிக்கையில் சில முகங்களின் சாயல்கள் ஒன்றுபட்டு இருப்பதை நான் பல காலமாக புலனாய்வு செய்தே வந்திருக்கிறேன்
Pulli Vandugal Prasavikkadha Kaalam/புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம்- P. Kalimuthu/ப. காளிமுத்து
Regular price Rs. 120.00
இன்மையின் அதீத உருவழிதல், விளிம்பு வாழ்வின் சிதிலங்களில் இருந்து தன் மொழிக்கு சாரங்களைப் பெற்றுக் கொள்பவராக, பிரதேச அழகியல் மிளிரும் சொற்களைத் தனது கவிதைகளில் மிகச் சாவகாசமாகக் கையாளும் ஒருவராக இந்தத் தொகுப்பின் வழி தனது புதிய அடையாளங்களுடன் வெளிப்பட்டிருக்கிறார் கவிஞர் காளிமுத்து
மொழிக்குள் விரும்பி ஒளிந்து கொள்ளும் தன்மை அதன் அடர்வில் புதிர்த்தன்மையை ஏற்றி விடுகிறது. வாழ்வில் வெதுவெதுப்பான தண்ணீரை, ஒரு முன்மதிய நேரத்து நிழலை உவமையாக்குவது மாதிரி அதிகப் பிரயத்தனங்களற்ற ஒரு தனி நடையை இவரது கவிதைகளில் காண முடிகிறது.
- நேசமித்ரன்
Claude Monetyin Marathadi Pen/களாட் மோனெயின் மரத்தடிப் பெண்-Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 70.00
நாம் விழித்துக்கொள்ள விரும்பாத கனவொன்றை இக்கவிதைகளால் உருவாக்கி அளித்திருக்கிறார் கார்த்திகா. இங்கே பரபரப்பான மாநகரச் சாலையொன்றின் நடுவே ஒரு சிறிய நீரோடை உலகை சிருஷ்டிக்கிறார். ஓடை போல முன்னோக்கியே ஓடும் காலம், ஊஞ்சல்போல பின்னோக்கியும் வந்தால் என்ன என ஏங்குகிறார். தன் கவிதைகள் மூலம் அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார். கடந்த காலத்தின் திரும்ப முடியாத உலகங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நாம் சாதாரணமாகத் தவறவிடும் உலகங்களையும், தருணங்களையும் தன் கவிதைகளில் உறைய வைத்து விடுகிறார்.
சக மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆமவடைகளையும் பரிவுடன் பார்க்கும் தருணங்கள் வழியாக சாதாரண உலகத்தின் பின்னாலிருக்கும் அதிசாதாரண உலகுக்கு ஒரு பிடி கிடைக்கிறது.
ஆமவடைகளைப் போல அரிய, பரிபூரணமான, எளிய, சின்னஞ்சிறு கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பு படிக்கத் திகட்டுவதில்லை.
- முகுந்த் நாகராஜன்
London Diary/லண்டன் டைரி -Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 200.00
Arpa Vishayam/அற்ப விஷயம்- Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 280.00
எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும் விநியோகிக்க முந்தாநாள் போட்ட இனிப்பும் வாங்கப் பக்கத்து ஹோட்டலுக்கு நடக்கும்போது மனசை அலைக்கழிக்கும் விஷயம், பெயர் வைப்பது. நம்முடைய இலக்கிய, சமூக, அரசியல் சார்புகளின் பின்னணியில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கயல்விழியும், கல்பனாவும், ஜீவபாரதியும் சகலராலும் நிராகரிக்கப்பட, பிறந்திருக்கிற குழந்தை ஸ்வப்னா ஆகிறது. சந்தோஷ் ஆகிறது.
Raayar Coffee Club/ராயர் காப்பி கிளப்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 350.00
விடியோ பஸ் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப் போகிறேன்.
விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக் கடந்து போகிறது.
தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.
எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லைட் வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.
பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து விடலாம்.
Pagal Iravugalai Kondu Varugira Paravai/பகல் இரவுகளைக் கொண்டுவருகிற பறவை-Shahraj/ஷாராஜ்
Regular price Rs. 320.00
2004-ல் வெளியான ஷாராஜின் வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, அதன் மெல்லியல் கதைகளுக்காக சக இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் சிலரின் விருப்பங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அக் கதைகளை இன்னமும் நினைவுகூர்ந்து சிலாகிக்கும் சிலர் அதன் மறுபதிப்பைக் கொண்டுவரவும் விருப்பம் தெரிவிப்பார்கள். அதற்கிணங்க, அத் தொகுப்பில் உள்ள பத்து கதைகளோடு, இடைக் காலத்திலும் கடந்த ஓரிரு வருடங்களிலும் எழுதிய, இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத சில புதிய கதைகளும், ஐந்து நையாண்டிக் கதைகளும் சேர்த்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
Thirakka Mudiyaadha Kottai/திறக்க முடியாத கோட்டை- Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இது ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ரஷ்யா. ஜார் மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்த காலத்திலிருந்தே அவர்களது இலக்கு இதுவே. முன்னேறிய உலக நாடுகளுக்கு முன், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கம்யூனிசத்தின் வழியே நிரூபிக்கப் போராடினார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அதிபரும் இதையே முயற்சி செய்தனர். ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்தனர். இவற்றின் வெற்றி தோல்விகள் அவ்வப்போது மக்கள் புரட்சியில் முடிந்தது. மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தாலும் தங்கள் இலக்கை விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டை மேம்படுத்த அதிபரும், மக்களுமாக மேற்கொண்ட பயணமே இந்தப் புத்தகம்.
அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்று ரஷ்யா. அத்தகைய வலிமையை அவர்களாகவே வளர்த்துக் கொண்டவர்கள். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உருவான புத்தகம் இது. ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்து, தற்போது புத்தகமாகியிருக்கிறது.
Siru Thuli Perum Panam/சிறு துளி பெரும் பணம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 140.00
Vada Korea Private Limited/வட கொரியா பிரைவேட் லிமிடெட்- Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 650.00
சர்வாதிகாரம். பஞ்சம்.
பட்டினிச் சாவு. மிரட்டல். கடத்தல். அரசியல் கொலைகள். அணு ஆயுதங்கள். ஏவுகணைகள். பேரழிவு. இவற்றைத் தவிர
வட கொரியாவில் ஒன்றுமில்லை. வதந்திகள், ஊகங்கள், கிசுகிசுக்களை
முற்றிலும் விலக்கி, வட கொரியாவின்
அத்தனைக் குற்றச் செயல்பாடுகளின் பின்னணியையும் ஆதாரபூர்வமாக
ஆராய்கிறது இந்நூல்.
கிம் ஜாங் உன் என்கிற மனிதர் எப்படி உருவானார்? அவரது தாத்தாவும் தந்தையும் வகுத்த
சர்வாதிகாரப் பாதையை
எவ்வாறு அவர் நவீனமாக்கினார்?
எப்படி அவரால் அமெரிக்காவின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிவைக்க முடிகிறது?
சோற்றுக்கே வழியில்லாத ஒரு நாடு
எப்படி அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது? ஏவுகணைகளைச் செலுத்துகிறது?
இது ஒரு மர்ம தேசத்தின் சோக வரலாறல்ல. எழுபத்தாறு ஆண்டுகளில் ஒரு நிலமே இறுகி
வெடி குண்டாக உருமாறியிருக்கும்
அபாயத்தின் சரித்திரம்.
Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy
Regular price Rs. 180.00
கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள்.
அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்டுமே ஒரே வழி. இதற்கான உத்திகளைச் சொல்லித்தருவதே ‘கத்தியின்றி ரத்தமின்றி.’
ஒரு கதை. அதன் கருவாய் ஒரு சைபர் க்ரைம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்னும் விளக்கம். அக்குற்றத்தில் சிக்காமலிருக்கும் வழிமுறைகள். இவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது கத்தியின்றி ரத்தமின்றியின் ஒவ்வொரு அத்தியாயமும்.
அவ்வளவாய் அறியப்பட்டிராத ஆனால் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விதவிதமான சைபர் குற்றங்களை விவரிக்கிறது கத்தியின்றி ரத்தமின்றி.
AI Or Eliya Arimugam/ஏஐ ஓர் எளிய அறிமுகம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 370.00
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்று நோக்கில் விவரிப்பதோடு, அதன் அடிப்படை அம்சங்களையும் விளக்கும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது.
செயற்கை நுண்ணறிவு கல்வித்துறை துவங்கி காவல்துறை, சட்டம், உளவியல், அகழ்வு, வங்கிச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி பயன்படுகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. துறை தோறும் ஏஐ நுட்பத்தை விவரிப்பதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வரலாற்று நோக்கிலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது. இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் இதழ் மற்றும் தினமலர் பட்டம் இதழில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Paarka Marutha Paravaigal/பார்க்க மறுத்த பறவைகள்-சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian
Regular price Rs. 200.00
“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.”
- அசோகமித்திரன்
Nalam Tharum Vitamingal/நலம் தரும் வைட்டமின்கள்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 210.00
நம்முடைய உடலுக்கு நன்மைகளை அள்ளித் தந்து சிறப்பாகச் செயல்படவைக்கும் வைட்டமின்களைப் பற்றிய விரிவான, விளக்கமான, தெளிவான அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல். எதைச் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், அதனால் என்ன நன்மை, நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மற்ற குறிப்புகள் என்னென்ன என்று உங்களுடைய உணவுப் பழக்கத்தைச் செம்மையாக்குவதற்கான சிறந்த கையேடு இது.
Salman Rushdie/சல்மான் ரஷ்டி-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 130.00
இலக்கியமும் சிக்கல்களும் சரிக்குச் சரியாகக் கலந்த வாழ்க்கை சல்மான் ரஷ்டியுடையது. ஒரு புத்தகத்துக்காக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதில் சில பக்கங்களுக்காகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர் அவர். அதன்பிறகும் பல தொல்லைகள் அவரைத் தொடர்ந்து துரத்திவந்தன. இத்தனைக்கு நடுவிலும் அவர் படைப்பூக்கத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் பெரிய செய்தி, பாடம்.
இந்தியாவைக் கதைகளின் வழியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ரஷ்டியின் பரபரப்பான வாழ்க்கைக் கதை இது, அவருடைய இலக்கியம் தொடங்கிய ஊற்றுக்கண்ணையும், வளர்ச்சியையும், அவர் உண்டாக்கிய தாக்கங்களையும் துல்லியமாக விவரிக்கிறது.
Unnaipol Oruvar/உன்னைப்போல் ஒருவர்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை.
இன்னொருபக்கம், இவற்றில் சில முக்கியமான பாடங்களும் இருக்கலாம், சாதனையாளர்களின் சிறுவயதுப் பண்புகள் அவர்களுடைய ஆளுமையில் எப்படிப் பிரதிபலித்தன என்று நாம் தெரிந்துகொள்ளலாம், முயன்றால் யாரும் பெரிய அளவில் வளரலாம், சாதிக்கலாம் என்பதும் புரியும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள பிரபலங்களின் சிறுவயது நிகழ்வுகளைச் சிறுவர்கள் விரும்பிப் படிப்பீர்கள், இவர்களைப்போல் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
Inikkum Tamil/இனிக்கும் தமிழ்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின்றன.
இந்நூல் சில சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றை விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது, அவற்றின் எழிலையும், அவற்றுள் பொதிந்திருக்கிற தகவல்களையும் எடுத்துக்காட்டி மகிழ்வூட்டுகிறது, மேலும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
Arive Sivam/அறிவே சிவம்- Ram Suresh/ராம் சுரேஷ்
Regular price Rs. 320.00
எல்லாப் போர்களுமே தொழில்நுட்பத்துக்கான போர்கள்தாம். கல்லால் அடித்துக்கொண்டிருந்த காலத்தில் வில்லைக் கண்டுபிடித்த தரப்பு வென்றது. ஈட்டி அம்பு தரப்பை யானையைப் பழக்கக் கற்ற தரப்பு வென்றது. துப்பாக்கி பீரங்கியைக் கண்டுபிடித்த தரப்பு என்று அணுகுண்டு வரை பலமான ஆயுதத்தின் தரப்புதான் வென்றிருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் அறிவே ஆயுதமாகிவிட்ட்து. செய்தித்தாள்களை வைத்து 1940-50களில் ஒரு புரட்சி நடந்தது, 90களில் தொலைக்காட்சி வைத்திருக்கும் கட்சி வென்றது, ஃபேஸ்புக்கைக் கைப்பற்றிய கட்சி
2010களில் முன்னிலை பெற்றது.
மேலோட்டப் பார்வைக்கு ஆயுதமாகத் தெரியாத தொழில்நுட்பத்தையும் ஆயுதமாக்கி அழிப்பதில் வல்லவன்
மனிதன். அவனை நோவதா, அவன் கையில் ஆயுதம் தரும் அறிவை நோவதா? அலசுகிறது இந்த நாவல்.
ChatGPT Saritham/சாட்ஜிபிடி சரிதம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 350.00
சாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. அதோடு, சாட்ஜிபிடியை மையமாக கொண்டு பொதுவாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகிறது. ஏஐ விவாதத்தில் அதன் அடிப்படை அம்சங்கள் தொடர்பான புரிதல் அவசியம் எனும் வகையில், ஏஐ நுட்பங்களை விளக்க முற்பட்டுள்ளதோடு, ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த சிக்கல்களையும், கேள்விகளையும் அலசுகிறது. செயற்கை தரவுகள், பொய் ஆக்கங்கள் உள்ளிட்ட நவீன பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஏஐ பரப்பில் இந்த நூல் தொட்டுக்காட்டும் புள்ளிகள் அநேகம். இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் பதிப்பு மற்றும் தமிழ் யுவர்ஸ்டோரியில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Stay up-to-date about new collections, events, discounts and more