253 products
253 products
253 products
Idhuvum Adhuvum Udhavum/இதுவும் அதுவும் உதவும் - Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 160.00
சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக்கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டுவிடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து நாலு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டான் என்பது போன்ற சிரமமான வாக்கியங்களை இந்தியில் கற்றுக் கொள்வதால் கன்னையாலாலுக்குக் கொல்லைக்குப் போகுமே தவிர இவர்களுக்கு குறிப்பிட்ட பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மும்பையில் வேலை கிடைத்துப் போனால்? போனால் என்ன? அங்கே பெட்டிக் கடையில் வாழைப்பழத்தைக் காட்டிக் கேட்டால் எடுத்துக் கொடுக்க மாட்டானா? என்னத்துக்கு கன்னையாவை இழுக்கணும்?
IIT Dreams- Prabhu Bala
Regular price Rs. 120.00
“Dreaming of joining an IIT? This book is your step-by-step guide to cracking the JEE exams.
Although fewer than 500 students from Tamil Nadu make it to IITs each year, success isn’t about privilege—it’s about persistence. With practical tips and proven strategies, this book shows how anyone can achieve their IIT dream.”
Thalapathy Vs Thalapathy/தளபதி Vs தளபதி - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 290.00
இந்நூல் சமகால அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஸ்டாலின், திருமா, விஜய் என மும்முனைகளைப் பற்றிப் பேசுறது. அது போக, சாதி அரசியல், இட ஒதுக்கீடு, கலப்பு மணங்கள், நீட் தேர்வு போன்ற முக்கியப் பிரச்சனைகளை விரிவாக விவாதிக்கிறது
இந்நூலின் தலைப்பான தளபதி Vs தளபதி என்பது இரு வேறு நபர்களையும் குறிக்கலாம் அல்லது விஜய் தன் போதாமைகளுடன் மோதி ஜெயித்து மேலேறுவது பற்றியதாகவும் கருத இடமுண்டு. இந்நூல் ஒரு கட்சிக்கு ஆதரவான அல்லது இன்னொரு கட்சிக்கு எதிரான பரப்புரை முயற்சி அல்ல. இதில் சாய்வுகள் இருந்தால் அது சமரசமில்லாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என்ன என என் தர்க்கத்தில் வந்தடைந்தது மட்டுமே.
Jeyamogam/ஜெயமோகம் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 230.00
ஜெயமோகன் என் வாழ்நாள் ஆதர்சம். எழுத்திலும் வாழ்விலும். இது வரை படைப்பில் என்னை ஏமாற்றாத ஒரே எழுத்தாளுமை அவர்தான். அவரைப் பற்றி எழுதித் தீராது.
இந்தக் கட்டுரைகள் அவரது இலக்கியப் பங்களிப்பைச் சொல்வதோடு அவர் மீதான அவதூறுகளுக்கும் பதிலிறுக்கின்றன. அது ஒரு கண்மூடித்தன ஆதரவாக அல்லாமல் ஆய்ந்து, தரவு மற்றும் தர்க்கம் சார்ந்து அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றன. அதில் பதற்றமற்ற ஒரு கூறாய்வுத்தன்மை வெளிப்படுகிறது. வெறுமனே அவரை விதந்தோதுவதாக அல்லாமல், அவசியமான இடங்களில் மறுத்தும் எதிர்த்தும் எழுதி இருக்கிறேன். அதை மீறி ஒரு விசிலடிக்கும் ரசிகன் தென்பட்டால் அது அவர் ஆகிருதி!
Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா- Naseema Razak/நஸீமா ரஸாக்
Regular price Rs. 140.00
வெற்றியாளர்களாக இருப்பது அனைவருக்கும் ஒரு கனவு. ஆனால் அதை அடைவது எளிதல்ல. அது ஒரு முறை நடந்து முடியும் சம்பவமும் அல்ல. உண்மையான வெற்றி பெறச் சரியான பாதை தெரிய வேண்டும். வெற்றி பிரமாண்டமானது.ஆனால் அதன் பாதை சிறுசிறு வலிமையான தொடர் பழக்கங்களால் ஆனது. இந்நூல் ஓர் ஆசானைப் போல் ஒவ்வொரு கட்டத்திலும் எதைச் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று மட்டுமில்லாமல் தொடர்ச்சியாகச் செய்யும் திடத்தையும் சொல்லிக் கொடுத்துவிடும்.
இந்தப் புத்தகம் உங்களிடம் முழுதாக ஒப்புவிக்க எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான். வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் சிந்தனை மட்டுமே. ஒரு முறையல்ல நீங்கள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் - Padma Arvind/பத்மா அர்விந்த்
Regular price Rs. 280.00
எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. யாராவது ஒருவர் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டும் ஏன் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது?
2024ஆம் ஆண்டு முழுதும் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரங்களின் தொடக்கப் புள்ளியிலிருந்து, டிரம்ப்பின் வெற்றி வரை நடந்த சம்பவங்கள் ஒன்றையும் விடாமல் அலசி ஆராய்கிறது இந்நூல்.
நவீன உலகின் தலையெழுத்தில் அமெரிக்கா செய்யும் திருத்தங்கள் அநேகம். அமெரிக்காவின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவரை அம்மக்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது இந்நூல்.
டிரம்ப்பின் வெற்றி, இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளிலும் உண்டாக்கவிருக்கும் தாக்கங்களைப் புரிய வைப்பதுடன், அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடுகிறார் பத்மா அர்விந்த்.
இன்றைய அமெரிக்காவைப் புரிந்துகொள்ள இந்நூல் ஒரு சரியான நுழைவாயில்.
Isai Ilaiyaraaja/இசை இளையராஜா-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 240.00
இளையராஜா எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். அந்த அளவுக்கு அவரது கலையுச்சம் பற்றியும் படைப்பூக்கம் பற்றியும் பிரமிப்பு உண்டு. அவரைக் கேளாது, குறைந்தபட்சம் அவரை எண்ணாது எந்நாளும் தீர்வதில்லை எனக்கு. இரண்டுமே செய்த போது இந்தக் கட்டுரைகள் முகிழ்த்தன. நான் இசை தெரிந்தவன் அல்லன். ஆக, தீவிர ரசிகனாகவும் கூரான பொறியாளனாகவுமே பாடல்களை அணுகி எழுதினேன். எனவே இவற்றில் ஒரு மெல்லிய தர்க்கமும் அதை மீறிய உணர்ச்சிகரக் கொண்டாட்டமும் வெளிப்படக்கூடும். இளையராஜா இதைப் படித்தால் ரசிக்க மாட்டார். ஆனால் சக ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
இளையராஜாவின் Symphony No.1-ஐ வரவேற்கும் விதமாக இப்புத்தகம் வெளியாகிறது!
Makkalaagiya Naam/மக்களாகிய நாம்-Nirmal/நிர்மல்
Regular price Rs. 200.00
Bro/ ப்ரோ- Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்
Regular price Rs. 170.00
கம்யூனிசம், சோஷலிசம், பாசிசம், ரொமன்டிசம் என்று நீளும் இசங்களின் வரிசையில் ராஜபக்சேயிசத்தையும் சேர்த்துவிடலாம். 1970ம் ஆண்டு ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராய் அரசியலில் பிரவேசம் கண்டு, படிப்படியாய் பருத்து, அதிபராகி உச்சம் தொட்ட மகிந்த ராஜபக்சே, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் பெரும்பான்மைச் சிங்கள மக்களால் கடவுள் நிலைமைக்குப் பூஜிக்கப்பட்டார். கூடவே அவரின் சகோதரர்களும், புத்திரர்களும், சிறுதெய்வ அந்தஸ்துப் பெற்றார்கள்.
கடவுளர்களின் அமுதவாக்குகளிலும், அற்புத அறிக்கைகளிலும் லயித்து இருந்த மக்களுக்கு ஒரு கட்டத்தில் பக்தியை விட பசிதான் பெரிது என்று ஆனது. பொருளாதாரப் பேரழிவு வாட்டி எடுத்தது. கடவுளர்களால் எந்தவொரு திடீர் வரத்தையும் வழங்கி மக்களைச் சாந்தப்படுத்த முடியவில்லை.
சுதந்திரத்திற்கு முன்னைய காலப்பகுதியில் இருந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்சே குடும்பம் அண்மையில் சரிந்து முற்றாய் நிர்மூலமான பின்புலத்தை 'ப்ரோ ' விபரிக்கிறது. கடந்த வருடம் மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் 'ப்ரோ' தொடர்ச்சியாய் வெளிவந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியின் சமகால சாட்சியாய் அமைந்த 'குற்றவாளிகளின் தேசம்' எழுத்தாளர் ஸஃபார் அஹ்மதின் இரண்டாவது புத்தகம் இது.ஸஃபார் அஹ்மத் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் ஏரோநாட்டிகல் மெனேஜ்மென்ட் பிரிவில் அசிஸ்டன்ட் மேனேஜராய் பணிபுரிபவர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ச்சியாய் அபுனைவுக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் - Kokila/கோகிலா
Regular price Rs. 280.00
பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி, பஞ்சத்தால் மரணமடைந்தனர் மக்கள். ராணுவ ஆட்சிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை. இதன் காரணங்களை ஆராய்ந்து, மக்களாட்சிக்கான பங்களாதேஷிகளின் போராட்டத்தை, அவர்களின் கோணத்தை முதன்மையாக வைத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.
நூலாசிரியர் கோகிலா, மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஒரு மனிதன் ஒரு நகரம், உலரா உதிரம், தொழில்நுட்பம் அறிவோம், தடை அதை உதை உள்ளிட்ட இவருடைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய நூல்கள் அமேசான் கின்டிலிலும் உள்ளன.
Computer Pengal/கம்ப்யூட்டர் பெண்கள் - Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 200.00
உலகின் முதல் புரோகிராமர் அடா லவ்லேஸ், நிலவில் கால் பதித்த
விண்கலத்தை வழிநடத்திய மென்பொருளை உருவாக்கிய மார்கரெட்
ஹாமில்டன், நவீன கம்ப்யூட்டர் மொழிகளுக்கு அடித்தளம் அமைத்த
பார்பரா லிஸ்கோ, மென்பொருள் மகாராணி என அறியப்படும் கிரேஸ்
ஹாப்பர், ஸ்டீவ் ஜாப்சிற்கு ஊக்கமாக அமைந்த அடிலி கோல்ட்பர்க்,
இணையத்தேடலுக்கு அடித்தளம் அமைத்த கரேன் ஸ்பார்க் ஜோன்ஸ் என
கம்ப்யூட்டர் உலகில் முன்னோடிகளாக திகழும் பெண்களின் கதைகளை
சொல்கிறது இந்த புத்தகம். கம்ப்யூட்டர், இணைய வரலாற்றில் தடம்
பதித்த பெண்களை அறிமுகம் செய்வதோடு, கம்ப்யூட்டர் வருகைக்கு
முன்னர் மனித கம்ப்யூட்டர்களாக இருந்த முன்னோடி பெண்களின் அதிகம்
அறியப்படாத கதைகளை விவரிக்கும் கட்டுரைகளை கொண்டுள்ளது.
Pangu Sandhai Sila Kurippugal/பங்குச் சந்தை சில குறிப்புகள்- Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 200.00
பங்குச்சந்தை என்பது, பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கும் இடம். ஆனால், எல்லோரும் போடுகிற பணத்தை எடுப்பதில்லை. சிலர் தொடர்ந்து அங்கே பணத்தை தொலைக்கிறார்கள்.
ஆனால், வேறு சிலர் அதன் நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டு, நிதானமாக, சரியான முடிவுகள் எடுத்து, தொடர்ந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகளில் பலரும் வியாபாரம் செய்கிற பங்குச்சந்தை குறித்து தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. எவ்வளவு தெரிந்து கொண்ட பின்னரும் செய்யக்கூடிய தவறுகளும் இருக்கின்றன.
புகழ்பெற்ர ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து பொருளாதாரம், பணம், வியாபாரங்கள் குறித்து வெளிவரும் நாணயம் விகடன் டிஜிட்டலில், சோமவள்ளியப்பன் 36 வாரங்கள் எழுதிய, ’பொருளாதாரம்- பணம்- பங்குகள்’ என்ற தொடரின் தொகுப்பு. புதிதாக படிப்பவர்களுக்கு ஏற்ற விதம் வரிசை மாற்றி அமைக்கப்பட்ட புத்தகம்.
ஒரு குறிப்பிட்ட ஒன்றரை ஆண்டுகளில் நிகழ்ந்தவை குறித்து எழுதப்பட்டதாக இருந்தாலும், பங்குச்சந்தையில் புழங்குகிறவர்களுக்கு படிப்பதற்கு பலன் உள்ளதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் பல விடயங்கள் கொண்ட நூல். பங்குச்சந்தை குறித்து 10 க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியிருக்கும் சோம வள்ளியப்பனின் எழுத்து நடை, கடினமான விடயங்களை இலகுவாக புரிய வைக்கிறது.
பங்குச் சந்தை சில குறிப்புகள் பல பலன் தரும் விவரங்கள். கூடுதல் வாசிப்புக்கானது.
Dravidam Endraal Enna?/திராவிடம் என்றால் என்ன? - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 270.00
ஒரு பக்கம் திராவிடத்தால் தமிழகத்துக்கு ஒன்றுமே பயனில்லை என்று அப்பட்டமாய் மறைக்கிறார்கள். மறுபக்கம் திராவிடம் இல்லையென்றால் தமிழன் இப்போது வரை கோவணம்தான் கட்டிக் கொண்டிருந்திருப்பான் என மிகைப்படுத்துகிறார்கள். இந்த இரு தரப்பு கோமாளிகளுக்கும் நடுவே திராவிடத்துக்கு மரியாதை தர வேண்டியுள்ளது.
தமிழகத்தின் சரியான எதிர்காலத்துக்கான கருவி திராவிடம்தான். அதை நாம் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அதைப் பற்றிய துல்லியமான புரிதல் அவசியம். திராவிடம் 2.0, திராவிட மாடல் எல்லாம் வந்து விட்ட காலத்தில் உண்மையில் நாமறிந்து கொள்ள வேண்டியது இன்றைய சூழலில் திராவிடத்தின் பொருத்தப்பாடு என்ன என்பது.
எவை திராவிடம் என்பதை மட்டுமின்றி எதுவெல்லாம் திராவிடம் இல்லை என்பதையும் இப்புத்தகத்தின் கட்டுரைகள் பேசுகின்றன. பெரியார் மீதும் கலைஞர் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. திராவிடர்களுக்கு மயிர்க்கூச்செரியும் கணங்கள் இந்நூலில் உண்டு.
Writer/ரைட்டர் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 440.00
இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary!
எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு.
எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், தன்னை முன்வைத்தும் பிறரை முன்னிட்டும், சிறிதும் பெரிதுமாய், தீவிரமும் பகடியுமாய், நல்லதும் கெட்டதுமாய் எழுதப்பட்டவை இவை - அடிப்படையில் ஓர் எழுத்தாளனின் அனுபவங்கள், அறிதல்கள், அபிலாஷைகள். எனவே, எழுத்தை, வாசிப்பை ஆர்வமுடன் அணுகும் எவர்க்கும் இதில் தொடர்புபடுத்திக் கொள்ளத் தருணங்கள் உண்டு. அவை உந்துதலாகவும் திறப்பாகவும் அமையக்கூடும்.
In short, புத்தகங்கள் மீது பிரேமை கொண்டோர் அனைவருக்குமானது இப்புத்தகம்!
Thotralum Vidamatten/தோற்றாலும் விடமாட்டேன் - Naseema Razak/நஸீமா ரஸாக்
Regular price Rs. 210.00
வெற்றி அழகானது. ஆனால் தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை. கற்றுக்கொள்வதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் அவை உதவுகின்றன.
வெற்றியாளர்களின் சாதனைகளைவிட, சறுக்கல்களே நமக்குப் பாடங்களாகும்.
இந்தப் புத்தகம், சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும், தவறுகளைக் கண்டறிந்து, திருத்திக்கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தையும் விவரிக்கிறது.
Kodeeswara Ulagam/கோடீஸ்வர உலகம் -A.Pandiyarajan/அ.பாண்டியராஜன்
Regular price Rs. 270.00
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு கடந்து விடுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த பத்து பேருடைய வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி நின்று பார்த்து அவர்கள் என்ன செய்ததால் இந்த உயரத்தை அடைந்தார்கள்? எந்த சக்தி இவர்களை செலுத்தியது? எது இவர்களை செல்வந்தர்களாக்கியது என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சிதான் இந்த நூல்.
Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி-Lalitharam/லலிதாராம்
Regular price Rs. 200.00
காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல்.
சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும்.
கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.
திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு.
திரும்பிப் பார்த்தேன் – நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார்.
காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன்.
என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.
“கியா?” என்று வினவினேன்.
“இதர் வைன் ஷாப் கிதர் ஹை?”
அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்?
Thorkaadhaval/தோற்காதவள்-Gayathri Y/காயத்ரி ஒய்
Regular price Rs. 220.00
Poridarkaalam/போரிடர்க் காலம்-Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை?
யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத்தப்படும் இந்த யுத்தங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள் தெரியுமா? உத்திகள், படைத்திறன், ஆயுத பலம், திருப்பங்கள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் எவையெனத் தெரியுமா?
அணுகுண்டுக்கு முந்தைய கால யுத்தங்களில் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆளும் யுத்த காலம் வரை என்ன நடக்கிறது-என்னவெல்லாம் இனி நடக்கப் போகிறதென்று அப்பட்டமாக உடைத்துப் பேசுகிறது இந்நூல்.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் பின்னணியை ஆதாரபூர்வமாக விவரிக்கும் ‘யுத்த காண்டம்’ நூலின் ஆசிரியர் வினுலாவின் அடுத்தப் புத்தகம் இது.
நம்மைச் சுற்றியுள்ள பேரபாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வதற்கு இன்னும் சில காலம் மிச்சமிருக்கிறது.
Vaan/வான்-Rumman/ரும்மான்
Regular price Rs. 160.00
Kanai Yevu Kaalam/கணை ஏவு காலம்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 300.00
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னை சார்ந்து தமிழில் எழுதப்பட்டவற்றுள் முதன்மையான ஆவணமாகக் கருதப்படுவது, பா. ராகவனின் ‘நிலமெல்லாம் ரத்தம்’. பாலஸ்தீன் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்பற்று ஆராயும் அந்த வரலாற்றுப் பிரதியின் இரண்டாம் பாகம் இது.
நிலமெல்லாம் ரத்தம், கிபி இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்க காலச் சம்பவங்களுடன் நிறைவு பெறும். இந்நூல், இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டில் ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கும் காலம் வரையிலான சரித்திரத்தின் அரசியல் பின்புலத்தை அலசுகிறது.
யாசிர் அர்ஃபாத், ஷேக் அகமது யாசின் என்கிற இரு பெரும் பாலஸ்தீனியத் தலைவர்களும் காலமானபின்பு அம்மண்ணின் விடுதலைப் போராட்டமும் அரசியலும் வேறு வண்ணம் கொண்டதன் ஆதாரச் சிக்கல்களைப் பட்டியலிட்டு, இது இன்னமும் தீர்வை நோக்கி முன்னகர முடியாமல் இருப்பதன் காரணங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறார் பாரா.
Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 300.00
முழுக்க முழுக்கக் கடவுளைப் பற்றிப் பேசுகிற இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பிரதியோ, தத்துவப் பிரதியோ, புனைகதையோ இல்லை.
தனது மிகச் சிறு வயதுகளில், மதங்கள் அணிவித்த சட்டைகளுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில், விதவிதமான கதையுருவங்களில் தோன்றிப் பரவசமூட்டிய கடவுளைப் பிறகு திகைப்பு அகற்றி நெருங்கிப் பார்க்க முயற்சி செய்த அனுபவங்களைப் பாரா எழுதியிருக்கிறார்.
உருவங்களிலிருந்து கருத்தாக்கம் என்பது மிக நீண்ட, அபாயங்கள் மிகுந்த அகப்பயணம். அப்பயணத்தில் கண்டடைந்த அனைத்தையும் ஆசிரியர் அச்சமோ, தயக்கமோ, வெட்கமோ இன்றி அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் இந்தப் புத்தகம் ஒரு முன்மாதிரி.
G Indri Amaiyaadhu Ulagu/G இன்றி அமையாது உலகு- Sivaraman Ganesan/சிவராமன் கணேசன்
Regular price Rs. 210.00
எலான் மஸ்க் ‘நான் பார்த்து பயங்கொள்ளும் ஒரே கார்பரேட் நிறுவனம் கூகுள் மட்டும்தான்’ என்று சொல்லியிருக்கிறார். ஜெஃப் பேசோஸ், ‘கூகுள் என்பது ஒரு மலை போன்றது, அதில் ஏற முயற்சி செய்யலாம், ஆனால் அதை நகர்த்துவது என்பதெல்லாம் குதிரைக்கொம்பு’ என்கிறார். மார்க் ஸூகர்பெர்க், கூகுள் நிறுவனத்தில்தான் உலகின் தலைசிறந்த மூளைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றையாவது என்னுடைய நிறுவனத்திற்குக் கடத்திக்கொண்டு போய்விடவேண்டும் என்று எப்போதும் நினைக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பேட்டி கொடுக்கிறார்.
கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல. இன்று உலகின் சர்வ டிஜிடல் காரியங்களிலும் ஏறி அமர்ந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது கூகுள். நானின்றி அசைவதில்லை அகிலம் என்று அமைதியாகவும், பூடகமாகவும் சில நேரங்களில் பூதாகாரமாகவும் வெளிப்படுகிறது. இந்த அதி நவீன டிஜிடல் காலத்தில் கூகுளை ‘நீயின்றி அமையாது உலகு’ என்று சொல்வதில் ஆழ்ந்த பொருளுள்ளது. அது வளர்ந்து, வேர்கொண்டு இன்று செழித்து நிலைத்திருக்கும் கதையை விரிவாகச் சொல்கிறது இப்புத்தகம்.
சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 வருடக் கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். கணினி, நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலானவற்றைப் பற்றித் தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
Thirakka Mudiyaadha Kottai/திறக்க முடியாத கோட்டை- Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இது ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ரஷ்யா. ஜார் மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்த காலத்திலிருந்தே அவர்களது இலக்கு இதுவே. முன்னேறிய உலக நாடுகளுக்கு முன், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கம்யூனிசத்தின் வழியே நிரூபிக்கப் போராடினார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அதிபரும் இதையே முயற்சி செய்தனர். ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்தனர். இவற்றின் வெற்றி தோல்விகள் அவ்வப்போது மக்கள் புரட்சியில் முடிந்தது. மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தாலும் தங்கள் இலக்கை விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டை மேம்படுத்த அதிபரும், மக்களுமாக மேற்கொண்ட பயணமே இந்தப் புத்தகம்.
அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்று ரஷ்யா. அத்தகைய வலிமையை அவர்களாகவே வளர்த்துக் கொண்டவர்கள். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உருவான புத்தகம் இது. ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்து, தற்போது புத்தகமாகியிருக்கிறது.
Siru Thuli Perum Panam/சிறு துளி பெரும் பணம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 140.00
Vada Korea Private Limited/வட கொரியா பிரைவேட் லிமிடெட்- Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 650.00
சர்வாதிகாரம். பஞ்சம்.
பட்டினிச் சாவு. மிரட்டல். கடத்தல். அரசியல் கொலைகள். அணு ஆயுதங்கள். ஏவுகணைகள். பேரழிவு. இவற்றைத் தவிர
வட கொரியாவில் ஒன்றுமில்லை. வதந்திகள், ஊகங்கள், கிசுகிசுக்களை
முற்றிலும் விலக்கி, வட கொரியாவின்
அத்தனைக் குற்றச் செயல்பாடுகளின் பின்னணியையும் ஆதாரபூர்வமாக
ஆராய்கிறது இந்நூல்.
கிம் ஜாங் உன் என்கிற மனிதர் எப்படி உருவானார்? அவரது தாத்தாவும் தந்தையும் வகுத்த
சர்வாதிகாரப் பாதையை
எவ்வாறு அவர் நவீனமாக்கினார்?
எப்படி அவரால் அமெரிக்காவின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிவைக்க முடிகிறது?
சோற்றுக்கே வழியில்லாத ஒரு நாடு
எப்படி அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது? ஏவுகணைகளைச் செலுத்துகிறது?
இது ஒரு மர்ம தேசத்தின் சோக வரலாறல்ல. எழுபத்தாறு ஆண்டுகளில் ஒரு நிலமே இறுகி
வெடி குண்டாக உருமாறியிருக்கும்
அபாயத்தின் சரித்திரம்.
Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy
Regular price Rs. 180.00
கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள்.
அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்டுமே ஒரே வழி. இதற்கான உத்திகளைச் சொல்லித்தருவதே ‘கத்தியின்றி ரத்தமின்றி.’
ஒரு கதை. அதன் கருவாய் ஒரு சைபர் க்ரைம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்னும் விளக்கம். அக்குற்றத்தில் சிக்காமலிருக்கும் வழிமுறைகள். இவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது கத்தியின்றி ரத்தமின்றியின் ஒவ்வொரு அத்தியாயமும்.
அவ்வளவாய் அறியப்பட்டிராத ஆனால் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விதவிதமான சைபர் குற்றங்களை விவரிக்கிறது கத்தியின்றி ரத்தமின்றி.
AI Or Eliya Arimugam/ஏஐ ஓர் எளிய அறிமுகம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 370.00
ஏஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு, மனித அறிவாற்றலுடன் ஒப்பிடப்பட்டாலும், மனித சிந்தனை போலவே இந்த நுட்பத்தை நோக்குவது சரியல்ல. மனிதர்கள் சிந்திக்கும் முறைக்கும், கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் மனித வழிகாட்டலில் உலகை நோக்குவதிலும், செயல்படுவதிலும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்று நோக்கில் விவரிப்பதோடு, அதன் அடிப்படை அம்சங்களையும் விளக்கும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது.
செயற்கை நுண்ணறிவு கல்வித்துறை துவங்கி காவல்துறை, சட்டம், உளவியல், அகழ்வு, வங்கிச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி பயன்படுகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. துறை தோறும் ஏஐ நுட்பத்தை விவரிப்பதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை வரலாற்று நோக்கிலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது. இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் இதழ் மற்றும் தினமலர் பட்டம் இதழில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Stay up-to-date about new collections, events, discounts and more