8 products
8 products
8 products
yahadha gagami/யஹதா காகமி -S.Senthil Kumar/எஸ். செந்தில் குமார்
Regular price Rs. 225.00
Nooru Pillaigal Petraval/நூறு பிள்ளைகள் பெற்றவள் -S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்
Regular price Rs. 200.00
Marukkai/மருக்கை-S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்
Regular price Rs. 290.00 Sale price Rs. 245.00 Save 16%
மஞ்சள் நிறப் பைத்தியங்கள் (Manjal Nira Paithiyangal) - S. Senthilkumar
ZDP168
Regular price Rs. 190.00 Sale price Rs. 160.00 Save 16%காலமும் வெளியும் தன்னை அந்தரங்கமாக விசிறியைப் போல ஒன்றையொன்று மறைத்துக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த காலத்தின் இருப்பிடம் ஓர் ஸ்தூலமாகவே அமைந்திருப்பதற்குப் பதிலாக வரைபடம் போல கதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு வகையில் அதன் சிறப்பம்சமே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
விலகிச் செல்லும் பருவம் (Vilagi Sellum Paruvam) - S. Senthil Kumar
ZDP167
Regular price Rs. 190.00 Sale price Rs. 160.00 Save 16%செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சியின்போது அவை கசியவிடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைக்குள்ளாகிப் பெற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்துவிடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்துகொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெதுவெதுப்பான சொற்களால் வாசிப்பனுபவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) - S. Senthil Kumar
ZDP166
Regular price Rs. 200.00 Sale price Rs. 170.00 Save 15%சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை.
நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலுக்குரிய தோற்றத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இக்கதைகளின் கதாபாத்திரங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தையும் காலத்தையும் கூடவே அதன் தன்மைகளையும் பிரதிபலிக்கின்றன.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil
கழுதைப்பாதை (Kazhudhai Pathai) - S. Senthil Kumar
ZDP107
Regular price Rs. 375.00 Sale price Rs. 320.00 Save 15%கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்திப் புண்ணை அறுத்தது. புண்ணிற்குப் பக்கத்திலும் புண்ணின் மேலும் கயிறு அறுத்த தடம் விழுந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கழுதையின் புட்டத்தில் கயிறுகட்டு அழுத்தி அழுத்தி வேதனையை உண்டாக்கியது. வலியை பொறுத்துக் கொண்ட கழுதைகள், மேடேறும் தோரணை அலாதியானது. கம்பீரமானது. அதே சமயம் சோகமானது; வேதனையானது. மூவண்ணா சொல்லியது உண்மைதான். ‘மனுஷ வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்றுதான். மனுஷனைப்போலத் தான் கழுதையும்’.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 324
Language: Tamil
சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (Sirukathai - Sirukathia Kuritha Katturaigal) - S. Senthil Kumar
ZDP152
Regular price Rs. 330.00 Sale price Rs. 280.00 Save 15%ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களைத் தருகிறது. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது.
தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரை அடங்கிய நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்து, பிறகு, சிறுகதைகளை வாசிப்பவர்கள் ‘சிறுகதையை ஏன் வாசிக்க வேண்டும்?’ என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.
Author: S. Senthilkumar
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 296
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more