சினிமா பற்றிய பல நூல்களைப் படித்தபோதுதான் நமது சினிமாவில் இடம் பெறுகின்ற காதல் காட்சிகளையும் விஞ்சக் கூடிய விதவிதமான காதல்கள்,எந்த சினிமாவிலும் இதுவரை துகிலுரித்துக் காட்டப்படாத துரோகங்கள்,நம்முடைய திரைப்படங்களில் இதுவரை இடம்பெறாத மோதல்கள்,நாள் முழுவதும் எண்ணி எண்ணி சிரிக்கக் கூடிய பல சுவையான சம்பவங்கள் என்று எல்லா உணர்ச்சிகளும் ஒரு சேர சங்கமிக்கின்ற கனவுப் பிரதேசமாக சினிமா உலகம் இருப்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவங்களின் ஒரு துளிதான்“நெஞ்சம் மறப்பதில்லை-முதல் பாகம்”என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம்.
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more