Veliaatkkal/வெளியாட்கள்-S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்
Regular price Rs. 250.00
வீட்டுக்கு வரும் வெளியாட்கள் தண்டபாணியிடம் கணக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு நேராக மாடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கண்ணாடியின் முன் நின்று தலை வாருவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறவர்களும் வாரத்திற்கு ஒரு நாள் வருகிறவர்களும் மாதத்திற்கு ஒரு தடவை வருகிறவர்களும் தலைசீவிக் கொள்ளாமல் சென்றதில்லை. அவர்கள் தலைசீவிக் கொள்வதற்காகவே வீட்டிற்கு வருகிறார்கள் என்று தோன்றும். நீலநிறச் சீப்பைக் கையில் பிடித்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பழைய ஞாபகம் ஒன்றைத் தங்களது தலைமுடியின் வழியாகப் பார்ப்பதைப் போல கூர்ந்து நோக்கிய படி தலைவாருவார்கள். யாராவது பெண் வந்து தனது வீட்டில் தலைவாருகிறாளா, ஜடை போட்டுக் கொள்கிறாளா, ஆண்கள் மட்டும் வீட்டிற்கு வருகிறார்கள் என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தனக்கும் தண்டபாணிக்கும் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டுந்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாள், அதுவும் அவள் கொண்டுவந்த சீப்பில் தலைவாரிக் கொண்டாள் என்பதை நினைத்தபோது அவளுக்கு வேதனையாக இருந்தது.