Viswaroopam/விஸ்வரூபம்-Era.Murugan/இரா.முருகன்
Regular price Rs. 1,150.00
/
நேற்று விடிகாலை காசர்கோட்டில் இருந்து கிளம்பி அங்கங்கே கொஞ்சம் நின்று இந்தக் காளைவண்டி நகர்ந்தபடி இருக்கிறது. பூர்வீகர்கள் எப்போதும் போல் வண்டிக்கு முன்னால் ஆவி ரூபமாக நகர்ந்து வழிநடத்திப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மகாதேவனுடைய அம்மா விசாலாட்சியும் பிரம்புக் கூடையில் இரண்டு எலும்பாக மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். கொல்லூரில் அவளுக்கு ஒரு பிரார்த்தனை பாக்கி இருக்கிறது.