792 products
Aravaan/அறவான்- Soumya/சௌம்யா
Regular price Rs. 220.00
இவை அன்பு வயப்பட்ட கதைகள், அதே சமயம் அறத்தின் பாற்பட்ட கதைகள். காதல், கல்யாணம், கள்ளம் என மும்முனையிலும் முயங்கி இயங்கும் ஆண் - பெண் உறவுச் சிடுக்குகள், பட்டு வஸ்திரம் ஒன்றைத் தறியில் நூல் நூலாகக் கோத்து நெசவு செய்து எடுப்பது போல் இந்தப் புனைவாக்கங்களில் நேர்த்தியாகச் சேகரமாகி இருக்கின்றன. நல்லதுக்கும் அல்லதுக்குமான தீராச் சமர் அவற்றில் ஊடுபாவாக இழையோடுகிறது. எப்போதும் தீமையின் கண் கூசும் வெளிச்சம் விட்டில் பூச்சிகள் விரும்பி விழுமளவு வசீகரமானதுதான். ஆனால் அறத்தின் சிற்றொளியே மானுடத்தை வழிநடத்துகிறது. அதை அணையாது உள்ளங்கைக்குள் பொத்திக் காக்க எத்தனிக்கின்றன இக்கதைகள்.
Idhuvum Adhuvum Udhavum/இதுவும் அதுவும் உதவும் - Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 160.00
சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக்கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டுவிடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து நாலு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டான் என்பது போன்ற சிரமமான வாக்கியங்களை இந்தியில் கற்றுக் கொள்வதால் கன்னையாலாலுக்குக் கொல்லைக்குப் போகுமே தவிர இவர்களுக்கு குறிப்பிட்ட பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மும்பையில் வேலை கிடைத்துப் போனால்? போனால் என்ன? அங்கே பெட்டிக் கடையில் வாழைப்பழத்தைக் காட்டிக் கேட்டால் எடுத்துக் கொடுக்க மாட்டானா? என்னத்துக்கு கன்னையாவை இழுக்கணும்?
IIT Dreams- Prabhu Bala
Regular price Rs. 120.00
“Dreaming of joining an IIT? This book is your step-by-step guide to cracking the JEE exams.
Although fewer than 500 students from Tamil Nadu make it to IITs each year, success isn’t about privilege—it’s about persistence. With practical tips and proven strategies, this book shows how anyone can achieve their IIT dream.”
A Stone Full of Wait(Hardcover) - Earthling
Regular price Rs. 250.00
A Book illustrated by Earthling
A Stone Full of Wait(Paperback)- Earthling
Regular price Rs. 200.00
A Book illustrated by Earthling
Edinburgh Kuripppugal/எடின்பரோ குறிப்புகள்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 140.00 Sale price Rs. 125.00 Save 11%
எடின்பரோ - ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண்ணூறு சதவிகிதம் பங்களாதேஷ்காரர்கள்.
வைக்கோல் சந்தை பகுதியில் (ஹே மார்க்கெட்) டால்ரி தெருவில் நீள நடந்தால், ‘வெராந்தா’ என்று ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே கிளிண்ட் ஈஸ்ட்வுட் புகைப்படம். இங்கே பலதடவை வந்து பிரியாணி சாப்பிட்டுப் போயிருக்கிறாராம் அவர். ஸ்காட்லாந்துக்காரரான ‘ஜேம்ஸ்பாண்ட்’ புகழ் ஷான் கானரி வந்து சப்பாத்தி சாப்பிட்டிருக்கிறாரா என்று விசாரித்தேன். முன்னொரு காலத்தில் எடின்பரோவில் சாமானியமான பால்காரராக இருந்து அப்புறம் சூப்பர் ஸ்டாராக மாறிய ஷான் கானரி ஸ்காட்லாந்தில் தங்குவதே அபூர்வமாம்,
வெராந்தா ஓட்டல் மெனு கார்டில் பத்தாவது ஐட்டம் ‘மதராஸ் சாம்பார்’. படுகுஷியாக ஆர்டர் செய்தால் திட பதார்த்தமாக ஒரு வஸ்து சுடச்சுட மேசைக்கு வந்து சேர்ந்தது. ஓட்டல் சமையல்காரர்கள் முன்னே பின்னே மதராஸையும் பார்த்ததில்லை, சாம்பாரையும் பார்த்ததில்லை என்பதால் உத்தேசமாகச் செய்து ஒப்பேற்றிய சமாச்சாரம் அந்த சாம்பார். அது வயிற்றுக்குள் ரொம்ப நேரம் அமர் சோனார் பங்க்ளா என்று பெங்காலியில் உரக்கப் பாடிக்கொண்டிருந்தது.
Edho Oru Pakkam/ஏதோ ஒரு பக்கம்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 200.00 Sale price Rs. 180.00 Save 10%
Vaadhavooran Parigal/வாதவூரான் பரிகள்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 100.00 Sale price Rs. 90.00 Save 10%
ஓரான் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.
எனக்கு அங்கே கொறிக்க காகித அல்வா கிடைத்தது. காகிதத்தைப் போட்டு அல்வா கிண்டித் தின்ன முடியுமா? அல்லது, நம்ம கோழிக்கோடு மிட்டாய்த்தெரு இனிப்புப் பலகாரக் கடைகளில் கோழிக்குஞ்சு எசென்ஸ் ஊற்றிக் கலந்து கோழி அல்வா செய்து பரபரப்பான விற்பனையில் இருப்பது மாதிரியா இந்த அரேபிய இனிப்பு?
பேப்பர் அல்வா என்பது மெல்லிய தகடுகளாக அல்வாத்துண்டைச் சீவி இரண்டு தகடுகளுக்கு நடுவே இனிப்பு மாவாவோ உலர்திராட்சை, பாதாம்பருப்போ இட்டுத் தருவது என்று ஒரு சாரார் சொல்ல, அது வேபர் அல்வா, எனில், பொறுபொறுவென்று வறுவல் மாதிரியான பிஸ்கட்டுக்கு நடுவே அல்வா வைத்துத் தின்னத் தருவது என்று இன்னொரு குழுவினர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
Yakutsk Kaidhi/ யகுட்ஸ்க் கைதி - Shreyas Bave/ஷ்ரேயாஸ் பவே
Regular price Rs. 520.00
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் இறந்தாரா, மறைந்துபோனாரா? அவரைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் காணாமல் போனதில் ஏதேனும் செய்தி இருக்கிறதா? சர்வதேச போலீஸிலிருந்து ரஷ்ய உளவுத்துறைவரை இந்த விவகாரத்தில் செய்த திரைமறைவு வேலைகள் என்னென்ன? உலகின் பல்வேறு நாடுகள் இதைத் தோண்டித் துருவுவதன் பின்னணி என்ன?
இன்னும் எத்தனை எத்தனையோ திகிலூட்டும் கேள்விகளுக்கான பதில்களை இந்த நாவல் ஒன்றோடொன்று பின்னி, எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்கிற விறுவிறு நடையில் சொல்கிறது. ஒரு நாட்டின் மாபெரும் தலைவரின் முடிவு மர்மமாக நீடிப்பதை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்தப் புத்தகம். உங்கள் அறிவைச் சீண்டியபடியே எதிர்பாராத சம்பவங்களைக் கோத்து விவரிக்கும் இந்நூல் ஒரு முடிவை நோக்கி உங்களை நகர்த்துகிறது.
Thalapathy Vs Thalapathy/தளபதி Vs தளபதி - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 290.00
இந்நூல் சமகால அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஸ்டாலின், திருமா, விஜய் என மும்முனைகளைப் பற்றிப் பேசுறது. அது போக, சாதி அரசியல், இட ஒதுக்கீடு, கலப்பு மணங்கள், நீட் தேர்வு போன்ற முக்கியப் பிரச்சனைகளை விரிவாக விவாதிக்கிறது
இந்நூலின் தலைப்பான தளபதி Vs தளபதி என்பது இரு வேறு நபர்களையும் குறிக்கலாம் அல்லது விஜய் தன் போதாமைகளுடன் மோதி ஜெயித்து மேலேறுவது பற்றியதாகவும் கருத இடமுண்டு. இந்நூல் ஒரு கட்சிக்கு ஆதரவான அல்லது இன்னொரு கட்சிக்கு எதிரான பரப்புரை முயற்சி அல்ல. இதில் சாய்வுகள் இருந்தால் அது சமரசமில்லாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என்ன என என் தர்க்கத்தில் வந்தடைந்தது மட்டுமே.
Jeyamogam/ஜெயமோகம் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 230.00
ஜெயமோகன் என் வாழ்நாள் ஆதர்சம். எழுத்திலும் வாழ்விலும். இது வரை படைப்பில் என்னை ஏமாற்றாத ஒரே எழுத்தாளுமை அவர்தான். அவரைப் பற்றி எழுதித் தீராது.
இந்தக் கட்டுரைகள் அவரது இலக்கியப் பங்களிப்பைச் சொல்வதோடு அவர் மீதான அவதூறுகளுக்கும் பதிலிறுக்கின்றன. அது ஒரு கண்மூடித்தன ஆதரவாக அல்லாமல் ஆய்ந்து, தரவு மற்றும் தர்க்கம் சார்ந்து அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றன. அதில் பதற்றமற்ற ஒரு கூறாய்வுத்தன்மை வெளிப்படுகிறது. வெறுமனே அவரை விதந்தோதுவதாக அல்லாமல், அவசியமான இடங்களில் மறுத்தும் எதிர்த்தும் எழுதி இருக்கிறேன். அதை மீறி ஒரு விசிலடிக்கும் ரசிகன் தென்பட்டால் அது அவர் ஆகிருதி!
Manimegalai Part 2/மணிமேகலை பாகம் 2 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 290.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Oliyin Mugam/Face of Light-Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 130.00
“ஒளியின் முகம்”, குட்டி ரேவதியின் இருமொழி நூல். லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், எத்திராஜ் அகிலன், விவேக் நாராயணன் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் குட்டி ரேவதியின் வெவ்வேறு எழுத்துக்காலகட்டத்தில் அவரின் உடல்மொழி இலக்கிய மொழி குன்றாது மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு. தமிழ் & ஆங்கிலம் இரு மொழியிலும் பயணிக்கும் புதிய அனுபவத்தைத் தரும்படியாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. மொழிச்சுவை, கவிச்சுவை போற்றும் படியான ஈடுபாட்டை, உழைப்பை இம்மொழிபெயர்ப்பாளர்கள் தந்துள்ளனர் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உயரிய சான்று.
Revathi's anthology ‘Oliyin Mugam’ (Face of Light) features poems from various phases of her career. Translated by Lakshmi Holmstrom, a critic and translator of eminence, Vivek Narayanan, a poet of repute and erstwhile co-editor of the popular Indian Literary Journal, Almost Island, and Ethiraj Akilan, a freelancer, these translations capture Revathi’s literary flair and the unique language of the female body and psyche. This bilingual anthology allows readers to experience the richness of two languages simultaneously.
Nizhal Bommai/நிழல் பொம்மை - R.Abilash/ஆர். அபிலாஷ்
Regular price Rs. 540.00
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் தளத்தில் சிறைக் கொட்டடியிலோ காவல்துறையினரின் துப்பாக்கி முனையிலோ அதிகார மட்டத்திலோ நிகழ்வதல்ல, அது நமது அன்றாட வாழ்வினுள், அந்தரங்க நடத்தையில், சிந்தனையில் நுணுக்கமாகச் செயல்படுவது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. அன்பின், காதலின், கசப்பின், சுரண்டலின் அரசியலைப் பேசுகிறது. அரசியலையும் அதிகாரத்தையும் தத்துவத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து பாலியல் ஒழுக்கத்தை விசாரிப்பதன் வழியாகத் தமிழில் வெளிவந்த நாவல்களில் தனித்துவமானதாகிறது.
Katharkal/காதற்கள்-Sowmya/சௌம்யா
Regular price Rs. 280.00
காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழங்குகிறது. எத்தனை பேசினாலும் காதல் பற்றிய விஷயங்கள் மட்டும் நீர்த்துப் போவதோ தீர்ந்து போவதோ இல்லை. காதலை வியந்துகொண்டோ வெறுத்துக்கொண்டோதான் மனிதன் வாழ முடியும் - இரண்டுக்கும் மத்தியில் எளிதில் கடக்க முடியாது. அதையே இக்கதைகள் அடிக்கோடிடுகின்றன.
Appammai/அப்பாம்மை - Gayathri R/காயத்ரி ஆர்.
Regular price Rs. 120.00
சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ.
உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம்
வாழும் நிலம்/இடம், அது சார்ந்திருக்கும் வர்க்கம் போன்றவற்றையும் அடையாளப் படுத்தக் கூடியது.
இந்தப் பின்னணியில் காயத்ரியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில்
உள்ள இரண்டு சிறுகதைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.
அக்கதைகளில் இடம் பெறும் உரையாடல்களின் மூலம் சென்ற தலைமுறையின் பேச்சு வழக்கு இலக்கியத் தகுதியைப் பெறுவதோடு
அல்லாமல் அத்தலைமுறையின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டு
விடுகிறது. நான் உதாரணங்கள் தரப் போவதில்லை. அதை வாசகரே
படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதால்.
Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா- Naseema Razak/நஸீமா ரஸாக்
Regular price Rs. 140.00
வெற்றியாளர்களாக இருப்பது அனைவருக்கும் ஒரு கனவு. ஆனால் அதை அடைவது எளிதல்ல. அது ஒரு முறை நடந்து முடியும் சம்பவமும் அல்ல. உண்மையான வெற்றி பெறச் சரியான பாதை தெரிய வேண்டும். வெற்றி பிரமாண்டமானது.ஆனால் அதன் பாதை சிறுசிறு வலிமையான தொடர் பழக்கங்களால் ஆனது. இந்நூல் ஓர் ஆசானைப் போல் ஒவ்வொரு கட்டத்திலும் எதைச் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று மட்டுமில்லாமல் தொடர்ச்சியாகச் செய்யும் திடத்தையும் சொல்லிக் கொடுத்துவிடும்.
இந்தப் புத்தகம் உங்களிடம் முழுதாக ஒப்புவிக்க எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான். வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் சிந்தனை மட்டுமே. ஒரு முறையல்ல நீங்கள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் - Padma Arvind/பத்மா அர்விந்த்
Regular price Rs. 280.00
எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. யாராவது ஒருவர் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டும் ஏன் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது?
2024ஆம் ஆண்டு முழுதும் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரங்களின் தொடக்கப் புள்ளியிலிருந்து, டிரம்ப்பின் வெற்றி வரை நடந்த சம்பவங்கள் ஒன்றையும் விடாமல் அலசி ஆராய்கிறது இந்நூல்.
நவீன உலகின் தலையெழுத்தில் அமெரிக்கா செய்யும் திருத்தங்கள் அநேகம். அமெரிக்காவின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவரை அம்மக்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது இந்நூல்.
டிரம்ப்பின் வெற்றி, இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளிலும் உண்டாக்கவிருக்கும் தாக்கங்களைப் புரிய வைப்பதுடன், அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடுகிறார் பத்மா அர்விந்த்.
இன்றைய அமெரிக்காவைப் புரிந்துகொள்ள இந்நூல் ஒரு சரியான நுழைவாயில்.
Vilaiyaada Vandha Endhira Boodham/விளையாட வந்த எந்திர பூதம் - Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 120.00
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள்.
- ஹரி இராஜலெட்சுமி
Manimegalai Part 1/மணிமேகலை பாகம் 1 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 420.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Nallaangu/நல்லாங்கு - Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 300.00
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்
Manpuzhuvin Naangavadhu Idhayam/மண்புழுவின் நான்காவது இதயம்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 140.00
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி மண்புழுபோல் படிந்து
ஊர்கிறது. இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த
நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின்
வாழ்வுமுறைகள் சாட்சியமாகின்றன.
கவிதை என்பது ஒரு தனித்த துறையல்ல. பல்வேறு துறை சார்ந்த வாசிப்பு
அனுபவங்களிலிருந்து இவர் தமிழ் கவிதைகளுக்கான புதிய கலைச்
சொற்களை உருவாக்குகிறார். அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ்
நவீன கவிதையின் விஸ்தரிப்பு.
- செல்மா பிரியதர்ஸன்
Isai Ilaiyaraaja/இசை இளையராஜா-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 240.00
இளையராஜா எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். அந்த அளவுக்கு அவரது கலையுச்சம் பற்றியும் படைப்பூக்கம் பற்றியும் பிரமிப்பு உண்டு. அவரைக் கேளாது, குறைந்தபட்சம் அவரை எண்ணாது எந்நாளும் தீர்வதில்லை எனக்கு. இரண்டுமே செய்த போது இந்தக் கட்டுரைகள் முகிழ்த்தன. நான் இசை தெரிந்தவன் அல்லன். ஆக, தீவிர ரசிகனாகவும் கூரான பொறியாளனாகவுமே பாடல்களை அணுகி எழுதினேன். எனவே இவற்றில் ஒரு மெல்லிய தர்க்கமும் அதை மீறிய உணர்ச்சிகரக் கொண்டாட்டமும் வெளிப்படக்கூடும். இளையராஜா இதைப் படித்தால் ரசிக்க மாட்டார். ஆனால் சக ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
இளையராஜாவின் Symphony No.1-ஐ வரவேற்கும் விதமாக இப்புத்தகம் வெளியாகிறது!
Makkalaagiya Naam/மக்களாகிய நாம்-Nirmal/நிர்மல்
Regular price Rs. 200.00
Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்
Regular price Rs. 310.00
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன
Bro/ ப்ரோ- Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்
Regular price Rs. 170.00
கம்யூனிசம், சோஷலிசம், பாசிசம், ரொமன்டிசம் என்று நீளும் இசங்களின் வரிசையில் ராஜபக்சேயிசத்தையும் சேர்த்துவிடலாம். 1970ம் ஆண்டு ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராய் அரசியலில் பிரவேசம் கண்டு, படிப்படியாய் பருத்து, அதிபராகி உச்சம் தொட்ட மகிந்த ராஜபக்சே, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் பெரும்பான்மைச் சிங்கள மக்களால் கடவுள் நிலைமைக்குப் பூஜிக்கப்பட்டார். கூடவே அவரின் சகோதரர்களும், புத்திரர்களும், சிறுதெய்வ அந்தஸ்துப் பெற்றார்கள்.
கடவுளர்களின் அமுதவாக்குகளிலும், அற்புத அறிக்கைகளிலும் லயித்து இருந்த மக்களுக்கு ஒரு கட்டத்தில் பக்தியை விட பசிதான் பெரிது என்று ஆனது. பொருளாதாரப் பேரழிவு வாட்டி எடுத்தது. கடவுளர்களால் எந்தவொரு திடீர் வரத்தையும் வழங்கி மக்களைச் சாந்தப்படுத்த முடியவில்லை.
சுதந்திரத்திற்கு முன்னைய காலப்பகுதியில் இருந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்சே குடும்பம் அண்மையில் சரிந்து முற்றாய் நிர்மூலமான பின்புலத்தை 'ப்ரோ ' விபரிக்கிறது. கடந்த வருடம் மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் 'ப்ரோ' தொடர்ச்சியாய் வெளிவந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியின் சமகால சாட்சியாய் அமைந்த 'குற்றவாளிகளின் தேசம்' எழுத்தாளர் ஸஃபார் அஹ்மதின் இரண்டாவது புத்தகம் இது.ஸஃபார் அஹ்மத் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் ஏரோநாட்டிகல் மெனேஜ்மென்ட் பிரிவில் அசிஸ்டன்ட் மேனேஜராய் பணிபுரிபவர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ச்சியாய் அபுனைவுக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
Pinthodarthal/பின்தொடர்தல் - Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Regular price Rs. 150.00
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கும் மனுஷா ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. கதைகளை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது.
- ந. முருகேசபாண்டியன்
Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் - Kokila/கோகிலா
Regular price Rs. 280.00
பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி, பஞ்சத்தால் மரணமடைந்தனர் மக்கள். ராணுவ ஆட்சிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை. இதன் காரணங்களை ஆராய்ந்து, மக்களாட்சிக்கான பங்களாதேஷிகளின் போராட்டத்தை, அவர்களின் கோணத்தை முதன்மையாக வைத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.
நூலாசிரியர் கோகிலா, மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஒரு மனிதன் ஒரு நகரம், உலரா உதிரம், தொழில்நுட்பம் அறிவோம், தடை அதை உதை உள்ளிட்ட இவருடைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய நூல்கள் அமேசான் கின்டிலிலும் உள்ளன.
Stay up-to-date about new collections, events, discounts and more