Veg Paleo /வெஜ்பேலியோ -Pa. Raghavan/பா. ராகவன்

Veg Paleo /வெஜ்பேலியோ -Pa. Raghavan/பா. ராகவன்

Regular price Rs. 120.00
/

Only 340 items in stock!
பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான்.

பேலியோவின் இலக்கணச் சட்டங்களுக்கு உட்பட்டும், சமயத்தில் சற்றே விலகியும் தனிப்பட்ட முறையில் நான் மேற்கொண்ட பரீட்சைகள், பயிற்சிகள் எனக்கு உடற்கூறு இயலைக் குறித்தும், உணவு என்பது உடலுடன் மேற்கொள்ளும் நல்லுறவு அல்லது கெட்ட உறவின் தன்மை குறித்தும் தரிசனம் போல் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தன.

சைவ உணவின் குறைந்தபட்ச சாத்தியங்களை வைத்துக்கொண்டு ருசி கெடாமல் பேலியோவில் உண்பதற்கும் எடைக் குறைப்புக்கும் சில வியாதி சொஸ்தங்களுக்கும் எனக்கு வழிகள் அகப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் இந்நூலில் விவரித்திருக்கிறேன்.

-பா. ராகவன்