Orakkuzhi/ஒரக்குழி- Vaanavan/வானவன்

Orakkuzhi/ஒரக்குழி- Vaanavan/வானவன்

Regular price Rs. 290.00
/

Only -13 items in stock!
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, வளர்ச்சி மற்றும் நவீனம் என்கிற பெயரில் இந்த மண்ணின் மீது நாம் செலுத்திய வன்முறைகள் அளவிலடங்கா. விளைவு இன்று நிலம், நீர், காற்றில் ஆரம்பித்து தாய்ப்பால் வரை விஷமாகிவிட்டது.
பல காரணிகளால் இது நடந்தாலும், நாம் கையிலெடுத்த நவீன வேளாண்மை, நமது விவசாயத்துக்கு பயன்பட்ட உரக்குழிகளை அழித்து, விவசாயிகளுக்கு உதவும் மண்புழு உட்பட்ட உயிரினங்களை அழித்தது. நாம் பயன்படுத்திய ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகள் பூமியின் உயிர்ச்சூழல் அழிய முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தகைய சூழலில் விவசாய வேலைகளுக்கு பயந்து நகரத்துக்கு ஓடிவரும் ஒருவன், ஆரோக்கியத்தை இழந்து, உடல்நலன் பாதிக்கப்பட்டு, அதற்கான காரணம் நாம் இழந்த இயற்கை விவசாயமும் மரபு பழக்கவழக்கங்களும்தான் என்பதை உணர்ந்து, மீண்டும் மரபு விவசாயம் செய்யலாம் என்று கிராமத்துக்குச் செல்லும்போது, அவனை ஏற்காத கிராமம் கிண்டலும் கேலியும் செய்கிறது.
அவன்முன் இரண்டு சவால்கள். இயற்கை விவசாயத்தில் சாதிக்கவேண்டும். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அதற்கு அவன் எடுக்கும் முயற்சிகள், எதிர்கொள்ளும் சவால்கள், கிடைக்கும் வெற்றி. அதுவே இந்த ஒரக்குழி நாவல்.