Mind Maps/மைண்ட் மேப்ஸ்- N.Chokkan/என்.சொக்கன்

Mind Maps/மைண்ட் மேப்ஸ்- N.Chokkan/என்.சொக்கன்

Regular price Rs. 60.00
/

Only 367 items in stock!
மைண்ட் மேப்ஸ் (Mind Maps) எனப்படும் எளிய வரைபடங்களை உலகெங்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், அலுவலர்கள், ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகளைச் சரியாகப் பதிவு செய்யவும், முறையாகத் திரும்பப்பெற்றுப் புரிந்து கொள்ளவும் உதவுகிற மிகச் சிறந்த உத்தி இது.
அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ள வெற்றி உத்தியாகிய மைண்ட் மேப்ஸைக் கதைவடிவில் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிற இந்த நூலைப் படியுங்கள், பக்கத்தில் ஒரு பேனா, ஒரு வெள்ளைத் தாளை வைத்துக்கொள்ளுங்கள், ஒரு மணிநேரத்துக்குள் நீங்கள் உங்களுடைய முதல் மைண்ட் மேப்பை வரைந்திருப்பீர்கள், அதன்பிறகு, எதைப் படித்தாலும், எதைக் கேட்டாலும் மைண்ட் மேப்பாக மாற்ற முனைவீர்கள்.
ஏனெனில், மைண்ட் மேப் என்பது எங்கோ ஓர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உத்தி இல்லை, நம்முடைய மனம் சிந்திக்கும் முறையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதனால் தான் நாம் அதை உடனடியாகப் பற்றிக்கொள்கிறோம், பயன்படுத்திப் பலன் பெறுகிறோம்.