Thaagam/தாகம் -Vaasanthi/வாஸந்தி

Thaagam/தாகம் -Vaasanthi/வாஸந்தி

Regular price Rs. 350.00
/

Only -3 items in stock!
சமீபத்தில் நான் ஃபீஜித் தீவுக்குச் சென்றிருந்தபோது இந்த நாவல் என் மனதில் உருவானது. அங்கு நிகழ்ந்த கதையானதால் ஃபீஜி இந்தியரின் சரித்திரப் பின்புலத்தில் இது விரிகிறது.
ஃபீஜித் தீவுகள் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது. தனது வியாபாரப் பெருக்கத்துக்காக அங்கிருந்த கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை செய்ய நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பல ஏழைகளை - அத்தீவுகள் எத்தனை தொலைவு என்கிற பூகோள அறிவில்லாத எளிய மக்களை - சாமர்த்தியமாக ஐந்து வருஷ ஒப்பந்தத்தில் ஆங்கிலேயக் கம்பெனி அழைத்துச் சென்றது. அங்கு சென்ற இந்தியர்கள் பட்ட கஷ்டமும் பிறகு அங்கேயே தங்கிக் கிளை பரப்பியதும் கடும் உழைப்பினால் எட்டிய உன்னதமும் ஒரு வீர சரித்திரம்....
இது ஒரு சரித்திரக் கதை இல்லை. சரித்திரம் படைத்த ஒரு சமூகப் பின்புலத்தில் நிகழும் ஓர் அப்பாவிப் பெண்ணின் அதிசயக் கதை. கதாநாயகியின் வாய்மொழியிலும், மூன்றாம் நபரின் பார்வையிலுமாக இந்தக் கதை மாறி மாறிப் பின்னிக்கொண்டு போகிறது.
இந்தக் கதையைக் கேட்டபோது எனக்குள் ஏற்பட்ட வியப்பும் - குழப்பமும் - கேள்விகளும் படித்து முடித்தபின் உங்களுக்குள்ளும் ஜனிக்கலாம். விடைகளைத் தேடிப் போவது வியர்த்தமானது என்று தோன்றுகிறது. நமக்கெல்லாம் ஒவ்வொன்றுக்கும் விடை கிடைத்தால்தான் திருப்தி. ஆனால், அந்த விடைகளெல்லாம் நமது சமாதானத்துக்காக. உண்மையில் எந்தக் கேள்விக்கும் விடை கிடையாது, பிரக்ருதியின் இயக்கத்தில்-
- வாஸந்தி