Rasavaadham/ரசவாதம்-Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

Rasavaadham/ரசவாதம்-Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

Regular price Rs. 300.00
/

Only -2 items in stock!
....தொடர்ச்சியாக யுவனின் கதைகளில் ஒரு தன்மையைக் காண முடியும். நினைவில் எழும் ஒரு முகம் தன்னோடு சேர்ந்து வேறு சில நினைவுகளைக் கொண்டு வரும்; அந்த நினைவுகள் வேறு சில முகங்களை மேற்பரப்பிற்கு கொணரும். நினைவுச் சங்கிலி அசல் அனுபவங்களாலும் கற்பனைகளாலும் வாசித்தவைகளாலும் கட்டமைக்கப்பட்டது. இவை பிரித்தறிய முடியாத அளவிற்கு ஒன்றோடு ஒன்று முயங்கிக் கிடப்பவை. இவருடைய ஒரு கதையில் கதாபாத்திரம்  எழுதும் கடிதத்தில், “வாலிபத்தின், முன்வயோதிகத்தின், சொற்சேகரிப்பைக் கால்வாயாகக் கொண்டு பாய்வது பால்யத்தின் சுனைதான்” என எழுதுகிறார். யுவனுடைய கதைகள் கடந்த காலத்தின் நினைவுகளை உருமாற்றி எழுத்தாக்க முயல்பவை. ஆனால் ஒருபோதும் அதில் நினைவேக்கத் தொனி இருந்ததில்லை. அவருடைய ஒரு கதையில் வரும் வாசகங்கள் இவை: “வாழ்க்கை பொன்மயமாக ஆவதற்கு அதிக நேரமொன்றும் பிடித்துவிடாது என்று நிஜமாகவே நம்பியவன் நான். தவிர, உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏதாவது இருக்கிறதா என்ன? நடந்தால்தான் உண்மையா? நடக்க சாத்தியம் இருந்தால் போதாதா? இதைவிடப் பெரிய புளுகர்களை கலைஞர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை? எல்லாவற்றுக்கும் மேல், சுவாரசியமாக இருக்கிறதா இல்லையா?”
சுனில் கிருஷ்ணன்