Nilamellam Ratham/நிலமெல்லாம் ரத்தம்-Pa Raghavan/பா .ராகவன்

Nilamellam Ratham/நிலமெல்லாம் ரத்தம்-Pa Raghavan/பா .ராகவன்

203

Regular price Rs. 850.00
/

Only 333 items in stock!

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்?

சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது?

ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்?

பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல்  செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது. யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.