Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் -Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்
Regular price Rs. 230.00
/
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் இந்நூற்றாண்டின் மாபெரும் மனித வதையின் அடிப்படைகளைத் துல்லியமாய் ஆராய்கின்றன. ஆட்சியாளர்களின் கோர முகத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கின்றன. மெட்ராஸ் பேப்பர் டாட்காம் இணைய வார இதழில் இவை வெளிவந்தன.
இலங்கையின் தெற்கே வெலிகாமம் என்ற ஊரில் பிறந்து, கொழும்பில் வசித்து வரும் ஸஃபார் அஹ்மத், எரோநாட்டிகல் இன்ஃபார்மேஷன் மேனேஜ்மென்ட் ஆபிஸராக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிகிறார். சர்வதேச அரசியல் சார்ந்து தொடர்ச்சியாக மெட்ராஸ் பேப்பரில் எழுதி வருகிறார்.