Therndhedutha Sirukathaigal/தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
/
வாஸந்தியின் கதைக்களம் பரந்துபட்டு உள்ளது. கிராமம், நகரம் என்று மாறுபடுகிறது. பெண்கள், ஆண்கள் அவர்களில் பலதரப்பட்ட வயதினர், உத்தியோகஸ்தர்கள், பல தொழில் புரிவோர் வருகிறார்கள். அதைச் சார்ந்த பேச்சு, வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அதற்குள்ளே அடங்காத இன்னொரு வாழ்க்கை கதையின் மையமாக வந்து கதைக்கு அர்த்தமும் அழகும் கொடுக்கிறது. அதுவும் பெண்களாக இருக்கிறார்கள் என்கிறபோது கூடுதலான கவனம் பெறுகிறது. அதாவது நுட்பமாக அறிந்துகொள்ளத்தக்கது பெண் சிசுக்கொலை பற்றி ஆதங்கம் ஒரு பெண் என்பதாலா என்றால் - ஒரு எழுத்தாளர் என்பதால்தான் என்று சொல்ல முடியுமா? சமூக இழிவு, அறியாமையின் உச்சம், கயமைத்தனம் என்பதற்காக என்றுதான் கதையின் வழியாகவே அறியமுடிகிறது. அதுவே ஆண் குழந்தையைக் கொன்று, ஆணின் ஆணவத்தையும் அடக்கவும் செய்கிறது. கல்வி கற்ற பெண்கள்தான் என்று இல்லை. களத்து மேட்டிலும் வீட்டிலும் வேலையும் செய்யும் பெண்கள் தங்களின் ஆளுமையைத் துடிப்போடு காட்டுகிறார்கள். ஆண்கள் எல்லாம் மௌனம் காக்கும் இடத்தில் தாத்தாவிடம் ஒரு பெண் தைரியமாக ‘புள்ளையைப் பெத்துப் போடற மெஷினா நாங்கங்கறாங்க' என்று பேசுகிறாள். அது அவளின் தனிக்குரல், சொந்த விருப்பம் இல்லை அது பொதுக் குரல்; அவள் முதலில் துணிந்து கேட்கிறாள். அவள் வேலை செய்யும் பெண். உழைப்பே அவளுக்கு தெம்பையும், தைரியத்தையும் கொடுக்கிறது. அதோடு அவள் நவீன காலத்தின் குறியீடு. அவள் பழையது எல்லாம், வெள்ளத்தின் அடைத்துக்கொண்டு போக ஒரு புதிய நம்பிக்கை. ஈடுபாடு. எழுதும் பாணி, கருத்துகளைக் கதையாகச் சொல்லும் நேர்த்திக்கு எடுத்துக்காட்டாக உள்ளதோடு சிறப்பாகத் தொகுதியாகவும் அமைந்திருக்கிறது
- சா.கந்தசாமி
- சா.கந்தசாமி