Nooru Pillaigal Petraval/நூறு பிள்ளைகள் பெற்றவள் -S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்

Nooru Pillaigal Petraval/நூறு பிள்ளைகள் பெற்றவள் -S.Senthilkumar/எஸ்.செந்தில்குமார்

Regular price Rs. 200.00
/

Only 398 items in stock!
"சோத்துக்கா அலையுறேன். எத்தன நாளைக்கு ஏம்புள்ளைகள பட்டினி போட்டிருக்கேன். ஏம்புருஷன் செத்து பதினேழு வருஷம் முடிஞ்சுப்போச்சு. அந்த மனுஷன் சாகுறப்ப பெரியவளுக்கு அஞ்சுவயசு. ஒருத்தி பால் குடிக்கிறா. இன்னொருத்தி தோள்ல தூங்குறா. இவளுக எவளுக்காச்சும் அந்தாளு மூஞ்சியத் தெரியுமா. அப்பா இல்லாத கவலயோடவா வளத்தேன். உடம்புலயிருக்கிற ரத்தமெல்லாம் தண்ணியா கொட்டும். அம்புட்டு வேலை. வேலைன்னா ஒருநா, ரெண்டுநா வேலையா. வருஷம் முன்னூறு நாளும் வேலை. நாத்து நட்டேன், பருத்தி எடுத்தேன், சானி செமந்தேன், வெறகா வெட்டுறதுக்குப் போனேன். அடீ ஆத்தீ எம்புட்டு வேலை. எல்லாம் எதுக்குடீ புள்ளைகக் கேட்டதும் இல்லைன்னு சொல்லாமே வாங்கிக் கொடுக்கணுமுங்கிற வைராக்கியம். நாலு தோசைய சுட்டு நானும் ஏம்புருஷனும் ஆளுக்கு ரெவ்வண்டு தின்னுட்டு, அரை வவுறும் காவவுறுமா பொழைச்சுக்கிடந்தோம்,  அந்த மந்தையில. ஒருத்தன் வந்து என்னான்னு கேட்டிருப்பானா இல்ல பாத்திருப்பானா. இன்னைக்கு ஏம்புள்ளக குமரிகளாகி லெட்சணமா தளதளன்னு கண்ணுக்குத் தெரியவும் ஆளு மாத்தி ஆளு வந்துட்டுப் போறாங்ஙே நீட்டிக்கிட்டு"
'நூறு பிள்ளைகள் பெற்றவள்' கதையிலிருந்து...