Mellinam/மெல்லினம்-பா.ராகவன் -Pa.Raghavan
Regular price Rs. 220.00
/
குழந்தைகளின் மாய உலகுக்குள் பெரியவர்களால் எட்டிப் பார்க்க முடியுமே தவிர அதன் பூரணத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்நாவலில் பாரா விவரிக்கும் இரு குழந்தைகளின் ஒற்றை உலகம் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டிலும் கண் கூசச் செய்யும் பேரொளி பொருந்தியது. அவர்களால் ஒரே சமயத்தில் அப்பேருலகிலும் இந்நிகழ் உலகிலும் சகஜமாக நடமாட முடியும். பறவைகள் சில அடி தூரம் நடக்கவும் செய்யும் என்பதைப் போல.
நாம் பறப்பதைக் குறித்த கனவுகளின் இடையே நடப்பதையும் ஏதோ ஒரு கணத்தில் தொலைத்துவிட்டுப் பிறகு வாழ்வெல்லாம் வருந்துகின்றோம். அப்போதுதான் நினைத்துக்கொள்கிறோம், 'குழந்தையாகவே இருந்திருக்கலாம்.'
இந்நாவலின் ஒரே ஒரு பத்தி அல்லது ஒரு வரி அல்லது ஒரு சொல்லிலாவது நீங்கள் உங்களைப் பார்த்துவிடுவீர்கள். நீங்கள் ஆக விரும்பிய உங்களையாவது.