9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி-பா.ராகவன் -Pa.Raghavan

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி-பா.ராகவன் -Pa.Raghavan

Regular price Rs. 320.00
/

Only 371 items in stock!
செப்டெம்பர் 11, 2011 அன்று அமெரிக்கா மீது அல் காயிதா நிகழ்த்திய தாக்குதலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆப்கன் யுத்தமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் எத்தகையவை என்பதை உணர்த்துவன.
இன்றைக்கு அல் காயிதா அத்தனை வலிமையான இயக்கமாக இல்லை. அதன் இடத்தை ஐ.எஸ். பிடித்துக்கொண்டது. ஒசாமா இல்லை, முல்லா ஓமர் இல்லை, பழைய பெருந்தலைகள் யாரும் இல்லை. ஆனால் தீவிரவாதம் அப்படியேதான் இருக்கிறது.
பெயர்கள் மாறுகின்றன. உத்திகள் மாறுகின்றன. நோக்கங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நவீன உலகில் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துக்கும் அல் காயிதா அன்று நிகழ்த்திய தாக்குதலே சூத்திர நூல்.
பிரம்மாண்டமான தாக்குதல்களை வடிவமைப்பது எப்படி என்று அதனை முன்வைத்தே பயில்கிறார்கள்.
இந்நூல், செப்டெம்பர் 11 தாக்குதல் குறித்து விசாரிக்க அன்றைய அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட கமிஷனின் அறிக்கை அடிப்படையில் எழுதப்பட்டது. அல் காயிதா இத்தாக்குதலை எவ்வாறு திட்டமிட்டது என்பது தொடங்கி அமெரிக்கப் பாதுகாப்பு ஓட்டைகள் வரை எதையும் விடாமல் அலசி ஆராய்கிறது.