Ilaithavan/இளைத்தவன்-Abul Kalaam Azad/அபுல் கலாம் ஆசாத்
Regular price Rs. 250.00
“உன்னையும் மற்றவர்களைப் போலத்தானே வளர்த்தேன் என் ஈரற்குலையே, சலாவுத்தீன்! பாழாய்ப்போன விபத்து...” என்பார்.
உணர்ச்சிவசப்படும் நேரங்களில் அம்மா பேசும் உருது இனிமையானது. சென்னையில் இயல்பாகப் பேசப்படும் உருதுவக்கு முற்றிலும் மாறானது. உணர்ச்சிவசப்படும் நேரங்களில் மட்டும் என்னுடைய அண்ணனையும் அக்காவையும் என்னையும் ‘ஈரற்குலையே' என்றுதான் அழைப்பார். ‘ஜிகர், ஜான், பியார்' என்று தொடர்ந்து உயிரே, அன்பே என உருகுவார். என் ஒல்லியான தோற்றத்தைப் பற்றிக் குறைபட்டுக்கொள்ளும்போது வழக்கமான பாசம் முன்னிலும் இறுக்கமாகி ஒலிக்கும். அந்த நேரத்தில் எப்போது அழுகையின் கேவல் ஒலி அவரிடமிருந்து வெளிப்படுமோ எனும் அச்சத்தில் நான் இருப்பேன்.
ஒல்லியாக இருக்கும் அவன் மீது பாசத்தைக்கொட்டி வளர்க்கும் தாய் ஒருபுறமும், பள்ளிக்கூடத்தில் ஒல்லிக்குச்சி பல்லி கோழிக்கால் என உருவகேலி செய்யும் மாணவர்கள் மறுபுறமும் நின்று சலாவுத்தீனின் பொழுதுகளை நிறைக்கின்றனர்.
உருவகேலியை ஏற்கப் பக்குவப்படும் அவனுடைய மனம் தன்னுடைய அப்பாவின் கறிக்கடைத் தொழில் கேலி செய்யப்படுவதை ஏற்கவில்லை. பொங்க நினைக்கிறான், பிரச்சனை வளர்ந்துவிடுமோ என்னும் அச்சத்தில் அமைதி காக்கிறான். கோபம் மட்டும் ஆறாத நெருப்பாக அவனுள் வளர்ந்துகொண்டிருக்கிறது.
அவன் என்ன முடிவெடுக்கிறான்?