Pugai Naduvil/புகை நடுவில் -Kiruthika/கிருத்திகா
Regular price Rs. 350.00 Sale price Rs. 315.00 Save 10%
/
நம் சமுதாயத்தில் இப்போது குமையும் புரட்சிகளை, ஒரு திரையாக வைத்துக்கொண்டு இக்கதாசிரியர், சில நூதன பாத்திரங்களை சிருஷ்டித்திருக்கிறார். நம்முடைய நிலைமையை நமக்கு நிலைக் கண்ணாடிபோல் விளக்கிக்காட்ட, மென்மையான மனோபாவங்கள் படைத்த இப்பாத்திரங்களே தகுந்த கருவிகளாகின்றன. டில்லி சமூக வாழ்க்கை இதில் ரஸமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. கதையின் நடை எளிதாகவும் சுவையுடனும் பொருந்தி இருக்கிறது. இதில் தோன்றும் கூரிய ஏளனமும், ஹாஸ்யமும் அநுதாபத்துடன் அமைந்திருக்கின்றன. சந்திராவதியின் உள்ளத் துடிப்பு, அன்புக்காக அவள் கொள்ளும் பசி, விதர்பனின் பற்றில்லாமை, பிறகு கடைசியில் அவர்கள் ஒருவரைக்கொருவர் புரிந்துகொள்வது, இப்படி வாழ்க்கை மலரை நமக்கு வெகுவாகப் பிரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்: சத்தியனின் உயர்தர தியாகத்தைக் கேட்டு நம் உணர்ச்சி உன்னதமான நிலையை அடைகிறது. விதர்பனுடைய வேதாந்தம் நம் மனதை எட்டாத உயரத்திற்கு எடுத்துச் செல்லுகிறது. தூண்டிவிடப்பட்ட, நாம் சமூகத்தின் இதர இன்னல்களை நன்கு ஆராயத் தொடங்குகிறோம். 'கிருத்திகா' மேலே என்ன செய்தால் நாம் சுகமாக வாழலாமென்பதைப் பற்றி ஒரு பெரிய ப்ரச்சனையைக் கிளப்பிவிடுகிறார்.