573 products
Zen Kolai Vazhakku/ஜென் கொலை வழக்கு- Pa.Raghavan/பா ராகவன்- PREBOOK
Regular price Rs. 200.00
நவீன நாசகார ஜென் கதைகள்
சில குறிப்புகள்
நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக் குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.
பா. ராகவனின் இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென் கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே.
மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு.
அதிகபட்சம் முந்நூறு சொற்களுக்கு மிகாத இக்கதைகள் கட்டியெழுப்பும் உலகில் நமக்குத் தெரிந்த பலபேர் மாறுவேடத்தில் நடமாடுகிறார்கள். சில கதைகளில் நாமே வாழ்கிறோம். சிலவற்றில் நம்மோடு பாராவும் உடன் வருகிறார். யார், எங்கே, எந்தக் கட்டங்களில் நிரம்பிப் புதிர்களை உருவாக்குகிறார்கள் என்று கட்டவிழ்க்கும் பணியை ஆசிரியர் நம்மிடம் தந்துவிட்டு விலகிவிடுகிறார்.
அவ்வகையில் இத்தொகுப்பு ஒரு கதை வடிவ crossword puzzle ஆகிவிடுகிறது.
இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் டேவி. சாம் ஆசீர் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு கோட்டுச் சித்திரங்கள் தீட்டியிருக்கிறார். அவை பா. ராகவன் சித்திரிக்கும் கதையுலகின் இன்னொரு பரிமாணத்தைத் துலக்கிக் காட்டுகின்றன.
—
ஜென் கொலை வழக்கு
நவீன நாசகார ஜென் கதைகள்
ஆசிரியர்: பா. ராகவன்
முகப்பு வடிவமைப்பு: விஜயன்
AI கோட்டோவியங்கள்: டேவி. சாம் ஆசீர்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
ஆகஸ்ட் 2024 வெளியீடு
Oothuvathi Pul/ஊதுவத்திப் புல் - C.S.Sellapa/ சி.சு.செல்லப்பா
Regular price Rs. 380.00
இந்த நூலில் பிச்சமூர்த்தியின் ‘தரிசனப் பார்வை’ வெளிக் காட்டுவதில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். அவரது பார்வை தமிழ்ச் சமூகம், பாரத சமூகம் இரண்டுக்கும் மேலாக பிரபஞ்சீய சமூகத்துப் பார்வையானது. அத்தகைய பார்வை கொண்டது தான் ‘மகா' படைப்புகள். அவற்றைப் படைப்பவர்கள்தாம் மகாகவிகள், பிரபஞ்சீய கவிகள் (யூனிவர்சல்). வ.வே. சுப்ரமணிய அய்யர் ‘தன் கவிதை' என்ற கட்டுரையில் ‘பேருண்மை, பேரனுபவம்' என்று குறிப்பிட்டு, இவற்றை உணர்த்துபவர்கள் உலக மகா கவிகள் என்று சொல்லி ஹோமர், வால்மீகி, வியாசர், ஷேக்ஸ்பியர், காளிதாசன், கம்பர் என்று பெயர்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். வ.ரா, பாரதியை அந்த வரிசையில் சேர்த்து ‘மகாகவி' என்று கணித்திருக்கிறார். பிச்சமூர்த்தியை அந்த வரிசையில் சேரத்தக்கவர் என்பது அவரது கவிதை சாதனையை வைத்து என் கணிப்பு மதிப்பீடு.
மேலே குறிப்பிட்ட அத்தனை கவிகளும் காவிய இயல் (கிளாஸிஸம்) கொள்கையாளர்கள். நவரசங்களையும் திறன்படக் கையாள்வது கிளாஸிஸத்தின் தலைசிறந்த லட்சணம். தற்காலத்தில் பாரதியும், பிச்சமூர்த்தியும் நவரசங்களையும் கையாண்டு இருப்பதோடு காவிய இயல் இதர லட்சணங்களையும் பொருத்தி இருக்கிறார்கள்.
- சி.சு. செல்லப்பா
Kaanuru Malar/கானுறு மலர்- Savitha/சவிதா
Regular price Rs. 160.00
இந்தக் கதைகளின் பெண்கள் மந்தையிலிருந்து விலகியவர்களோ மாற்றங்களை உருவாக்குபவர்களோ கிடையாது. வாழ்வு பெண்களின் மீது நிகழ்த்தும் எல்லா வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு தாழ்பணிந்து போகிறவர்கள். அன்பின் மற்றும் சமூக ஒழுங்குகளின் நிமித்தமாக தங்களை வழமைக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள். பிறகு இழந்தவைகளின் அழுத்தம் தாளாது மெல்ல ஊன்றி மேலெழுந்து நின்று, வஞ்சிக்கப்பட்டதற்கான புகார்கள் இல்லாமல் தனக்கான இன்னொன்றை சுயமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். மடந்தையிலிருந்து பேரிளம்பெண் வரைக்குமான வெவ்வேறு பருவங்களில் பெண் வாழ்வு மினுங்கலாகவும் துலக்கமாகவும் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றது. வெளிப்படைத் தன்மையும் ரகசியமும் வெளிப்பாட்டு மொழியில் கதையின் தேவைக்கேற்ப வெளிப்படுகிறது. சவிதாவின் மொழி, இயல்பும் சரளமும் கொண்டதாக இருப்பது இந்தக் கதைகளின் வழி பயணிக்க உதவியாக இருக்கிறது. இந்தக் கதைகள்
எழுதப்பட வேண்டியவை மட்டுமல்ல, பரவலாக வாசிக்கப்பட வேண்டியவையும் கூட.
- அய்யனார் விஸ்வநாத்
Veyil Anindhavan/வெயில் அணிந்தவன்-Balajothi Ramachnadran/பாலஜோதி ராமச்சந்திரன்
Regular price Rs. 260.00
எழுதுகிறவன் செயல்படும்போது, அவன் அறியாமலே தன் போக்கில் சில முன் திட்டமிடாத கதவுகளைத் திறப்பான், அதை மூடாமலே விட்டு விட்டு இன்னொரு கதவைத் திறக்கப் போய்விடுவான். பாலஜோதியின் ஒரு கதையின் கண்ணி இன்னுமொரு கதையின் கண்ணியில் கோக்கப்படுகிறது. இதில் வரும் மனிதர் அதில் நடமாடுகிறார். உங்களை அந்தக் கதையில் பார்த்தேனே, அவர்தானே நீங்கள்? என்று கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் நகர்ந்துவிடுகிறார்கள்.
ஒரு கதை வெயிலை அணிந்தால் இன்னொரு கதை அதைக் களைந்து வைக்கிறது. ஒரு தீனதயாளன் இன்னொரு கதையில் நடமாடுகிறார். ஒரு ஜெயராம் சார் பரோட்டா வாத்தியார் கதையில் ஜே. ஆர். சார் ஆகி சந்திரபாபு பாட்டுப் பாடுகிறார். மருதநாயகம் உட்கார்ந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் சுப்பு அண்ணா உட்கார்ந்திருக்கிறார். சூர்யா ஒரு திருநங்கை என்றால் மகாதேவியும் அப்படித்தான்.
- கல்யாணி.சி
Ezhuper/ஏழுபேர்-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்
Regular price Rs. 140.00
க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இவரது இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு இவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.
Kallam/கள்ளம்-Thanjai Parkash/தஞ்சை பிரகாஷ்/நாவல்
Regular price Rs. 290.00
‘கள்ளம்' இன்றைய கலைஞன் ஒருவனின் கள்ளம். வாழும் தந்திரம். கனவல்ல நிஜம்! தஞ்சாவூர் என்ற பழைய தலைநகரைச் சுற்றிலும் இதுபோன்ற பழைய கனவுகள் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. இதை நம்ப இலக்கியவாதி கொஞ்சம் சஞ்சலப்படுவான் என்பது எனக்குத் தெரியும். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை செய்கிற சாதாரண (Craft) தொழில் கலைஞனும்கூட. இடிந்து நொறுங்கும் வாழ்விலிருந்து நீந்திப் புதிய முட்டையை உடைத்துச் சிறகடித்து மேலே உயரும் மனிதர்களை, அவர்களின் கள்ளத்தை அவை இரண்டையும் ஒரே நேரத்தில் நிரூபணம் செய்கிறது இந்த நாவல். ‘தஞ்சாவூர் சித்திரப்படம்’ என்ற பெயரில் நலிந்து நாசமாகிய பழைய வரலாற்றை நான் எனது நாவலில் சொல்ல வரவில்லை. அந்த சோகத்தைப் பேசவில்லை என்ற என் நண்பனுக்கு எனது பதில் ‘கள்ளம்' என்பதே! இத்தகைய வாழ்க்கையை இப்படிக் காண்பது என்பது இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். வரலாற்றில்கூட ஏன் விஞ்ஞானத்தில்கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தப் படைப்பு சாத்தியம் ஆகும்.
- தஞ்சை ப்ரகாஷ்
Uyirkaadu/உயிர்க்காடு-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்/கு. பத்மநாபன் /கட்டுரைகள்
Regular price Rs. 210.00
ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை. அதன் அடிமரமும் பட்டையும் நிறமும் வைரமும் வேறானவை. பூமிக்குள் புதைந்திருக்கும் பின்னலும் நீர் தேடிச்சென்ற அதன் நாக்குகளும் வேறானவை.
- சு. வேணுகோபால்
வாழப் பிறந்தும், வாழ முடியாத சோகத்தைப் பேசுவதுதான் தி.ஜா.வின் கதை உலகம். ஆனால், அது தீவாந்தரத் தனிமையின் கசந்த உலகம் இல்லை. தாயார்கள், அண்ணிகள், தகப்பனார்கள், சகோதரர்கள், காதலர்கள், குழந்தைகள், பிற ஒத்துணர்வுள்ளவர்கள் என எல்லோரும் நிறைந்த ஓர் உயிர்ப்பின் உலகமே அது. ஆனால், அந்த இயல்புலகிற்குள்ளும், ஒவ்வொருவருக்குமேயான ஓர் அந்தரங்க உள்ளுலகமும் இருக்கத்தான் செய்கிறது. ‘பெரிய பர்வதத்தின் அடியில் நிற்கும்' பேரனுபவத்தைப் பெற விழைவோர், மீண்டும் மீண்டும், தி.ஜானகிராமனைத் தவறாமல் வாசிப்பார்கள்.
- கல்யாணராமன்
தி. ஜா. மனித அகத்தின் ஆழங்களை அவற்றை இயக்கும் ஆதி விசைகளான காமம், குரோதம், பொறாமை, வஞ்சம் ஆகியவற்றையும், ஒளி மிக்க பகுதிகளான தேர்ந்த ரசிகத்தன்மை, அழகுணர்ச்சி, இசை, தன்முனைப்பு, தியாகம் ஆகியவற்றையும் நெய்து அளித்தவர். அவரது படைப்புகளில் இரண்டும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் துலாக்கோல் தன்மையை முயல்வனவாக அமைந்திருக்கும்.
- ஜா. ராஜகோபாலன்
சாக்த வழிபாட்டில் தன் ஆன்மீக வாழ்வைத் துவங்கி, அத்வைதத்தில் கனிந்து, இறுதியில் நவீன வேதாந்தத்துக்கு வெகு அருகில் காமேஸ்வரன் வந்து சேர்வதை நளபாகம் நாவல் வழி அறியமுடிகிறது.
- கு. பத்மநாபன்
Bharathi Thondriya Kaalam/பாரதி தோன்றிய காலம்-Ka. Naa. Subramanyam/க. நா. சுப்ரமண்யம்/துரை. லட்சுமிபதி/கட்டுரைகள்
Regular price Rs. 220.00
க.நா.சு. வாழ்ந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய இலக்கிய எதிரிகள் மட்டுமல்லாமல், இலக்கிய நண்பர்களும் அவர்மீது தொடர்ந்து புகார் கூறியுள்ளனர். அப்படி அவருடைய இலக்கிய நண்பர் ஒருவர் கூறிய புகார், ‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை, சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை’ என்பது.
இவ்வரிகளில் உண்மை சிறிதும் இல்லை என்பதை இந்நூல் ஐயமற நிரூபிக்கிறது. இதுவரை நூல்வடிவம் பெறாத அரிய கட்டுரைகளைத் தேடியெடுத்து, காலவரிசையில் அமைத்து, நேர்த்தியான தொகுப்பைத் தந்திருக்கிறார் துரை. லட்சுமிபதி. க.நா.சு.வின் ஆழமும் தெளிவும் கூடிய விமர்சனப் பார்வை பாரதி நிகழ்த்திய சாதனைகளின் மகத்துவத்தைப் புலப்படுத்துகிறது. பாரதியியல் பனுவல்களில் கவனிக்கவேண்டிய முக்கியமான புதுவரவு இத்தொகுப்பு.
Moondru Viral/மூன்று விரல்- Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 460.00
இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.
‘அவனா... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞசல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்...' என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சுபோய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டுக் கிடக்கானாம்... நல்லா வேணும்' என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே!
*
இதுவரை 12 நாவல்கள் எழுதிய இரா.முருகனின் முதல் நாவல் இது. கம்ப்யூட்டர் மென்பொருளாளர் பற்றித் தமிழில் வந்த முதல் நாவலும் இதுவே.
Nandu Maram/நண்டு மரம் -Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 370.00
கம்ப்யூட்டர் கம்பெனியில், அதுவும் உலகப் பிரசித்தியான நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பது மாதிரித் தொல்லை பிடித்த சமாச்சாரம் வேறு எதுவும் இல்லை. தலைக்கு மேலே உட்கார்ந்து முதலாளி வர்க்கம் ‘இருபது மில்லியன் டாலர் பிசினஸ் இந்த வருடம் பிடித்துக்கொண்டு வராவிட்டால் வயிற்றுக்குக் கீழே ஆப்பரேஷன் செய்து நீக்கிவிடுவோம்’ என்று உத்தரவு போட்டுக் கத்தரிக்கோலோடு காத்திருப்பார்கள். வாரம் ஏழு நாள் இருபத்து நாலு மணி நேரம் வெள்ளைக்காரத் துரைகளின் கழிப்பறையைக் கழுவி, கால் பிடித்து விட்டு சிஷ்ருஷை செய்தாலும் ஒரு டாலர் அதிகமாக பிசினஸ் பெயராது என்பது அவர்களுக்கும் தெரியும். இருப்பதும் கைநழுவிப் போகாமல் காப்பதற்காக மேற்படி கஸ்டமர் துரை, துரைசாணிகளுக்கு உள்ளாடை துவைத்துப் போடுகிறது தவிர மற்ற சகலமான குற்றேவலும் செய்யத்தான் என்னை சீனியர் மேனேஜராக்கிக் கண்ணாடிக் கூண்டில் அடைத்து பெரிய ஹாலில் ஐநூறு புரோகிராமர்கள், பிராஜக்ட் லீடர், பிராஜக்ட் மேனேஜர் வர்க்கங்களுக்கு நடுவே உட்கார்த்தியிருக்கிறார்கள்.
Sigarangalukku Appal/சிகரங்களுக்கு அப்பால்-Dr. Kumaran Rasappan/டாக்டர் குமரன் ராசப்பன்
Regular price Rs. 650.00
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல், சிச்சுவானின் பனிமலைகளுக்கும், பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம் வரை இருபதுக்கும் மேற்பட்ட சிகரங்களை நோக்கிய வாழ்நாள் பயணத்தைத் தொடங்கச் செய்தது.
டாக்டர் குமரன் ராசப்பன், பாதுகாப்பாக இருந்த ஒரு சிங்கப்பூர் மாணவனாக இருந்து, பிறகு ஒரு சாகசக்காரராக, மருத்துவராக, மக்கள் நலப் பணியாளராக உருவான அசாதாரணமான பயணத்தின் கதையை விவரித்துச் சொல்கிறார். அந்தப் பாதையில், அவர் மரணங்களைப் பார்க்கிறார், பனிப்புயல்களைச் சந்திக்கிறார், நிலநடுக்கங்களில் தப்பிப் பிழைக்கிறார், இவற்றின் வழியே மனிதர்களின் மன உறுதி, வெற்றி தோல்வி ஆகியவற்றின் இயல்பு, வெவ்வேறு கலாச்சாரங்களின் அழகு ஆகியவற்றைப் பற்றி வியப்பூட்டும் விவரங்களைக் கண்டடைகிறார். அவருடைய பயணம் அவருக்குக் கற்றுக்கொடுத்த மிகப் பெரிய பாடம் என்னவெனில் ஒருவரின் வெற்றி, தோல்வியை மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது என்பதே. நாம் ஒவ்வொருவரும் ஏறுவதற்கு நமக்கென்று மலைகள் உண்டு.
***
“மலையேற்றச் சாதனைகள் பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பு, ஆனால் அதற்கும் மேலாக, இளைஞர்கள் தங்கள் மனத்தையும் எண்ணங்களையும் ஒரு விஷயத்தில் தீவிரமாகச் செலுத்தினால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் ஒரு உண்மை நிகழ்வு இது.”
- இந்திராணி ராஜா
அமைச்சர், பிரதம மந்திரியின் அமைச்சகம்
நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர்
சிண்டா அமைப்பின் தலைவர்
சிங்கப்பூர்
Era.Murugan kathaigal/ இரா.முருகன் கதைகள்-Era.Murugan/இரா.முருகன்
Regular price Rs. 940.00
‘மாடியிலே கடை போடலாமா?’ ரங்கம்மா அப்படிச் சொன்ன அடுத்து விநாடி மாடியில் ஏதோ தடதடவென்று தரையில் உருளும் சத்தம். ரங்கம்மா கலவரப்பட்டுப் போனாள்.
‘என்ன சத்தங்க அது?' ‘ஒண்ணுமில்லே... நீ சொன்னது பெரியாத்தாவுக்கு பிடிக்கலே.' சென்னகேசவன் சாதாரணமாகச் சொன்னபடி மாடியைப் பார்த்தான். ‘அது ஏதோ சின்னப்புள்ளே தெரியாமச் சொல்லிடுத்து. நீ எதுக்குக் கெடந்து குதிக்கறே. பேசாம இரேன்.' உரக்கச் சொல்லிவிட்டுத் தலையைத் திருப்பி ரங்கம்மாவைப் பார்த்துச் சிரித்தான் அவன். ‘மாடியிலே யாருங்க?' ரங்கம்மா உடம்பு முழுக்கப் பயம் கவிந்துவர, சென்னகேசவனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
‘ஒண்ணுமில்லே, சொல்றேன். நீ உட்காரு.' அவளைத் தரையில் உட்கார வைத்துவிட்டு வாசலுக்குப் போய் எலுமிச்சம்பழ மிட்டாய் எடுத்து வந்து கொடுத்தான். அவள் தலையை வருடிக்கொண்டே சொன்னான்: ‘பெரியாத்தா ரொம்ப வருசமா இங்ககேயேதான் இருக்கு. எங்க முப்பாட்டன் சம்சாரம். தாத்தாவோட அப்பாவுக்கு அம்மா.'
‘இத்தினி நாளு எப்படி உசிரோட இருக்காங்க?' ரங்கம்மா புரியாமல் பார்த்தாள்.
Araathu Books Complete collection offer
Regular price Rs. 3,605.00 Sale price Rs. 2,523.00 Save 30%
Araathu books-Complete collection 16 titles
En Paadhangalil Padarum Kadal/என் பாதங்களில் படரும் கடல்- Dhamayanthi/தமயந்தி
Regular price Rs. 90.00
Vamsa Virutsham/வம்ச விருட்சம்-S.L.Bhyrappa/எஸ். எல். பைரப்பா
Regular price Rs. 600.00 Sale price Rs. 480.00 Save 20%
Vaidheeswaran Kathaigal/வைதீஸ்வரன் கதைகள்-Vaidheeswaran/வைதீஸ்வரன்
Regular price Rs. 340.00
Kaanbor Vaasippugal/காண்போர் வாசிப்புகள்- A Ramasamy/அ ராமசாமி
Regular price Rs. 340.00
Panpaattu Vaasippugal/பண்பாட்டு வாசிப்புகள் - A Ramasamy/அ ராமசாமி
Regular price Rs. 290.00
Aroo Ariviyal Sirukathaigal 4/அரூ அறிவியல் சிறுகதைகள் 4
Regular price Rs. 390.00
Girish Karnad M.S. Moorthy Nadaganagal-/கிரீஷ் கர்னாட் -எம். எஸ். மூர்த்தி நாடகங்கள்
Regular price Rs. 170.00
Bharathi Pudhu Yugathai Adayaalam Kanda Mahakavi/பாரதி புது யுகத்தை அடையாளம் கண்ட மகாகவி -A.Marx /அ. மார்க்ஸ்
Regular price Rs. 140.00
Neermul/நீர்மூள்-Senthilkumar Natarajan/செந்தில்குமார் நடராஜன்
Regular price Rs. 160.00
Oviyam Pondra Ezhuthukkalaal Varayappatta Kottoviyam/ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்-Vasto/வாஸ்தோ
Regular price Rs. 170.00
Ruskin Bond Sirukathaigal - 1/ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-1
Regular price Rs. 660.00
Jelly Meengal Karaiyodhungum Kadal/ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 210.00
Penniya Vaasippugal/பெண்ணிய வாசிப்புகள்-A. Ramasamy/அ. ராமசாமி
Regular price Rs. 300.00
Novel Ezhudhum Kalai/நாவல் எழுதும் கலை-R.Abilash/ஆர். அபிலாஷ்
Regular price Rs. 400.00
Stay up-to-date about new collections, events, discounts and more