333 products
333 products
333 products
Manimegalai Part 2/மணிமேகலை பாகம் 2 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 290.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Oliyin Mugam/Face of Light-Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 130.00
“ஒளியின் முகம்”, குட்டி ரேவதியின் இருமொழி நூல். லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், எத்திராஜ் அகிலன், விவேக் நாராயணன் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் குட்டி ரேவதியின் வெவ்வேறு எழுத்துக்காலகட்டத்தில் அவரின் உடல்மொழி இலக்கிய மொழி குன்றாது மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு. தமிழ் & ஆங்கிலம் இரு மொழியிலும் பயணிக்கும் புதிய அனுபவத்தைத் தரும்படியாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. மொழிச்சுவை, கவிச்சுவை போற்றும் படியான ஈடுபாட்டை, உழைப்பை இம்மொழிபெயர்ப்பாளர்கள் தந்துள்ளனர் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உயரிய சான்று.
Revathi's anthology ‘Oliyin Mugam’ (Face of Light) features poems from various phases of her career. Translated by Lakshmi Holmstrom, a critic and translator of eminence, Vivek Narayanan, a poet of repute and erstwhile co-editor of the popular Indian Literary Journal, Almost Island, and Ethiraj Akilan, a freelancer, these translations capture Revathi’s literary flair and the unique language of the female body and psyche. This bilingual anthology allows readers to experience the richness of two languages simultaneously.
Nizhal Bommai/நிழல் பொம்மை - R.Abilash/ஆர். அபிலாஷ்
Regular price Rs. 540.00
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் தளத்தில் சிறைக் கொட்டடியிலோ காவல்துறையினரின் துப்பாக்கி முனையிலோ அதிகார மட்டத்திலோ நிகழ்வதல்ல, அது நமது அன்றாட வாழ்வினுள், அந்தரங்க நடத்தையில், சிந்தனையில் நுணுக்கமாகச் செயல்படுவது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. அன்பின், காதலின், கசப்பின், சுரண்டலின் அரசியலைப் பேசுகிறது. அரசியலையும் அதிகாரத்தையும் தத்துவத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து பாலியல் ஒழுக்கத்தை விசாரிப்பதன் வழியாகத் தமிழில் வெளிவந்த நாவல்களில் தனித்துவமானதாகிறது.
Vilaiyaada Vandha Endhira Boodham/விளையாட வந்த எந்திர பூதம் - Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 120.00
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள்.
- ஹரி இராஜலெட்சுமி
Manimegalai Part 1/மணிமேகலை பாகம் 1 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 420.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Nallaangu/நல்லாங்கு - Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 300.00
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்
Manpuzhuvin Naangavadhu Idhayam/மண்புழுவின் நான்காவது இதயம்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 140.00
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி மண்புழுபோல் படிந்து
ஊர்கிறது. இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த
நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின்
வாழ்வுமுறைகள் சாட்சியமாகின்றன.
கவிதை என்பது ஒரு தனித்த துறையல்ல. பல்வேறு துறை சார்ந்த வாசிப்பு
அனுபவங்களிலிருந்து இவர் தமிழ் கவிதைகளுக்கான புதிய கலைச்
சொற்களை உருவாக்குகிறார். அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ்
நவீன கவிதையின் விஸ்தரிப்பு.
- செல்மா பிரியதர்ஸன்
Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்
Regular price Rs. 310.00
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன
Pinthodarthal/பின்தொடர்தல் - Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Regular price Rs. 150.00
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கும் மனுஷா ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. கதைகளை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது.
- ந. முருகேசபாண்டியன்
Kazhi Odham/கழி ஓதம்- Ramya Arun Rayen/ரம்யா அருண் ராயன்
Regular price Rs. 170.00
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்குள் உருவாகியுள்ள பன்னிரு உலகங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் வாசித்துமுடிக்கும்போது உங்களுக்குள்ளும் அதுபோல நிகழ்ந்தால்... உங்களுக்குள் உருவாக்கும் உலகங்களும், எனக்குள் உருவாகும் உலகங்களும் என்றாவது சந்திக்க நேரலாம். அன்று நாம் நம் உணர்வுகளால் ஒருவரையொருவர் தரிசிப்போம்!
- ரம்யா அருண் ராயன்
Gethsemane/கெத்சமனி-Primya Crosswin/ப்ரிம்யா க்ராஸ்வின்
Regular price Rs. 190.00
கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்லாருடைய வாழ்விலும் இந்த கெத்சமனி பொழுதுகள் வந்து வந்துதான் செல்லும். ஒருவன் கெத்சமனிக்குள் பிரவேசிக்க அஞ்சினால் அவனுக்கு வாழ்தலும், மீட்பும் இல்லை. இப்புத்தகத்தின் கதை மாந்தர்கள் உங்களைத் தம் கெத்சமனித் தருணத்தினுள் அழைத்துச்செல்வர். எவர் மீதும் தீர்ப்பிடாமல், பிலாத்துவைப் போல, உங்களால் அவர்களைக் கைகழுவிவிட முடிந்தால் நலம்.
Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2
Regular price Rs. 560.00
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
Aaru Tharagaigal/ஆறு தாரகைகள்- Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 450.00
ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.
இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆறு பெண் கலைஞர்களைப் பற்றியது.
முதலாவது நாவல் ‘கானல் நதி’ வாழ்க்கை வரலாறுபோல அமைந்தது. இரண்டாவது நாவலின் வடிவம், முழு நேர்காணல். இந்த நாவல், தனித் தனிக் குறுநாவல்களின் தொகுப்புபோல அமைந்திருக்கிறது. ஒன்றிலொன்று பிணைந்த குறுநாவல்கள்.
இசை பற்றிய எண்ணங்களும், இசை வழங்கும் அனுபவங்களும், அதில் ஈடுபட்ட தனிமனங்களின் அல்லாட்டமும் நிஜம்போன்றே விவரிக்கப்படும் புனைவு. அந்த அளவில், முந்தைய நாவல்களை நினைவூட்டும் உள்ளோட்டமும், இடம்பெறும் அனைவருமே பெண்கள் என்பதால் தனித்துவமான உள்ளடக்கமும் கொண்டது.
Valliname Melliname/வல்லினமே மெல்லினமே-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 310.00
சென்னையில் பத்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று நான் பிறந்து வளர்ந்த ஊரான பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது எனது பிள்ளைப் பிராயத்து நினைவுகளில் பதிந்திருந்த அமைதி நிறைந்த பெங்களூர் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எனக்குத் தெரிந்த ஊராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட அன்னியமாக நான் உணர்ந்த சமயத்தில் பெங்களூரின் புதிய ஆளுமை என்னை சுவாரஸ்யப்படுத்திற்று.
நான் பெங்களூர் வந்த பிறகு இங்கு நதி நீர் பிரச்சினையால் நிகழ்ந்த கலவரங்களையும், பயங்கரவாத குண்டுவெடிப்பு நிகழ்வுகளையும் கண்டபிறகு இந்தக் கேள்விகள் என்னைத் துன்புறுத்தின. என்னுடைய நண்பரும், எனது சில படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருபவருமான திரு கல்யாணராமன், நான் இளைய தலைமுறையினரைப் பற்றி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஒரு நாவல் எழுதவேண்டும் என்று சொன்னார். ஏற்கெனவே என் மனத்தில் தோன்றிவிட்ட வித்துக்கு அது உரமளித்ததுபோலத் தோன்றிற்று. இங்கு நான் சந்தித்த இளைஞர்கள், அவர்களிடம் நான் தெரிந்துகொண்ட, அவர்களது சூழலைப் பற்றின தகவல்கள், வல்லினமே மெல்லினமே நாவல் உருவாக உதவின. எதிர் காலத்தைப் பற்றின நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அவர்களிலிருந்து உருவான கதாபாத்திரங்கள்தான் நாவலின் கதைமாந்தர்களாக வரும் பிரபு, குமரன், ஓமார், தீபா, மாலதி மற்றும் ஊர்மிளா. அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி.
- வாஸந்தி
Therndhedutha Sirukathaigal/தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
Nirka Nizhal Vendum/நிற்க நிழல் வேண்டும்-Vaasanthi/வாஸந்தி
Regular price Rs. 290.00
வாஸந்தி, குண்டுச்சட்டியில் குதிரையோட்டுகிற ரகமல்ல. இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அவர் எதையும் எழுதிவிடவில்லை. ‘மௌனப்புயல்' உருவாகும் முன் அவர் பஞ்சாபுக்குச் சென்றார். பொற்கோயிலில் ராணுவம் புகுந்திருந்த தருணம் அது. உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த சமயம். ஆயினும் அவர் துணிவுடன் பல இடங்களுக்குச் சென்று, பலரைப் பார்த்துப் பேசி, பிரச்சினைகளை மட்டுமின்றி அவற்றுக்குக் காரணமான உள்ளங்களையும் படித்தறிந்தார். பிறகு தான் எழுதினார். “நிற்க நிழல் வேண்டும்” என்ற இந்த நாவலை எழுதுவதற்கு முன்னரும் அவர் இலங்கைக்குச் சென்றார். கொழும்பில் அதிகார வர்க்கத்தினரை மட்டுமின்றி, இந்தியத் தூதரையும் பார்த்துப் பேசினார். வடக்கு-கிழக்கு பகுதிகளில் போராளிகளின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். பிற நாடுகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவாளர்களைத் தேடிச் சென்று அளவளாவினார். சராசரி ஈழத் தமிழரையும், அடைக்கலம் என்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அகதிகளையும் கண்டு, அவர்களுடைய உருக்கமான கதைகளைக் கேட்டறிந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக உதவிய தில்லி அதிகாரிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இவற்றிலிருந்து அவருக்குக் கிடைத்த மலைபோன்ற தகவல்களை வடிகட்டி முக்கியமான எதையும் விட்டுவிடாமல் நாவலில் பயன்படுத்தி இருக்கிறார்.
- கி. இராஜேந்திரன், ஆசிரியர், கல்கி
Bayam Kollalagathu/பயம் கொள்ளலாகாது-Jayathi Karthik/ஜெயந்தி கார்த்திக்
Regular price Rs. 270.00
உடல்மொழிப் புரிதலின் அடிப்படையிலேதான் வாழ்வியல் நகர்கிறது. அந்த வாழ்வியலின் ஒவ்வொரு பக்கமும் பக்குவமாக நகர்த்தப்படும் பட்சத்தில், பிற்காலத்தில் அந்த வாழ்வியல் அர்த்தமுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பக்குவம் எவற்றிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று யோசிக்கும்போது, அது நமது உடலிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இத்தெளிவு கிடைத்துவிடும் பட்சத்தில், அந்த உடலைச் சுமந்து வாழும் பாலினத்தையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், பழக வேண்டும், முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவும் புரிதலும் கிட்டிவிடும்.
இக்கருத்தை மையமாக வைத்தே இந்த ‘பயம் கொள்ளலாகாது’ நாவல் படைக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் படிக்கும் கார்முகில் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கலை முன்னிறுத்தி அதனூடே அவளின் குடும்பம், உறவு நிலைகள், குழந்தைகளுக்கே உண்டான மனநிலைகள், அவர்களின் அன்றாடப் பாடுகள், மகிழ்வுகள் எனப் பல தகவல்கள் அவற்றினூடே விரிகின்றன. பாலியல் என்ற பாடுபொருளைச் சொல்லவோ பேசவோ தயங்கக் கூடாது. எந்தவொரு தோல்விக்குப் பின்னாலும் வாழ்க்கை இருக்கிறது. அந்தத் தோல்வி பணமோ, பொருளோ, நகையோ, நட்போ, வேலையோ, படிப்போ, காதலோ உடலியல் சீண்டலோ அஃது எதுவாயினும் அதற்குப் பிறகான வாழ்க்கை இருக்கிறது. பதின்பருவம் மட்டுமல்ல, அதன் பிறகான பருவத்திலும் உடல்மொழியில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் கையாண்டு வாழ முடியும் என்பதே இந்த நாவலின் வழி புலப்படுகிறது.
Neruppu Odu/நெருப்பு ஓடு-Devilingam/தேவிலிங்கம்
Regular price Rs. 240.00
Celyon Pediyan/சிலோன் பெடியன்-N. Jeyarupalingam/ந. ஜெயரூபலிங்கம்
Regular price Rs. 240.00
Ceylon Parotta/சிலோன் பரோட்டா-N.R.பிரபாகரன்/N.R.Prabhakaran
Regular price Rs. 290.00
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ்யங்களையும், அதனூடே இலங்கையின் சமகால வாழ்வியலையும் பேசும் இந்த நாவல், போகிறபோக்கில் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதன் தலைவரைப் பற்றியும் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களை தொட்டுச் செல்கிறது.
Urakkam Thelindha Unmai/உறக்கம் தெளிந்த உண்மை-B. Hemamalini/பா. ஹேமமாலினி
Regular price Rs. 230.00
Ilaithavan/இளைத்தவன்-Abul Kalaam Azad/அபுல் கலாம் ஆசாத்
Regular price Rs. 250.00
“உன்னையும் மற்றவர்களைப் போலத்தானே வளர்த்தேன் என் ஈரற்குலையே, சலாவுத்தீன்! பாழாய்ப்போன விபத்து...” என்பார்.
உணர்ச்சிவசப்படும் நேரங்களில் அம்மா பேசும் உருது இனிமையானது. சென்னையில் இயல்பாகப் பேசப்படும் உருதுவக்கு முற்றிலும் மாறானது. உணர்ச்சிவசப்படும் நேரங்களில் மட்டும் என்னுடைய அண்ணனையும் அக்காவையும் என்னையும் ‘ஈரற்குலையே' என்றுதான் அழைப்பார். ‘ஜிகர், ஜான், பியார்' என்று தொடர்ந்து உயிரே, அன்பே என உருகுவார். என் ஒல்லியான தோற்றத்தைப் பற்றிக் குறைபட்டுக்கொள்ளும்போது வழக்கமான பாசம் முன்னிலும் இறுக்கமாகி ஒலிக்கும். அந்த நேரத்தில் எப்போது அழுகையின் கேவல் ஒலி அவரிடமிருந்து வெளிப்படுமோ எனும் அச்சத்தில் நான் இருப்பேன்.
ஒல்லியாக இருக்கும் அவன் மீது பாசத்தைக்கொட்டி வளர்க்கும் தாய் ஒருபுறமும், பள்ளிக்கூடத்தில் ஒல்லிக்குச்சி பல்லி கோழிக்கால் என உருவகேலி செய்யும் மாணவர்கள் மறுபுறமும் நின்று சலாவுத்தீனின் பொழுதுகளை நிறைக்கின்றனர்.
உருவகேலியை ஏற்கப் பக்குவப்படும் அவனுடைய மனம் தன்னுடைய அப்பாவின் கறிக்கடைத் தொழில் கேலி செய்யப்படுவதை ஏற்கவில்லை. பொங்க நினைக்கிறான், பிரச்சனை வளர்ந்துவிடுமோ என்னும் அச்சத்தில் அமைதி காக்கிறான். கோபம் மட்டும் ஆறாத நெருப்பாக அவனுள் வளர்ந்துகொண்டிருக்கிறது.
அவன் என்ன முடிவெடுக்கிறான்?
Ayyanarin Mouna Veli/ஐயனாரின் மௌன வெளி-Ananth Ravi/அனந்த் ரவி
Regular price Rs. 260.00
Athini/ அத்தினி-Chitra Sivan/சித்ரா சிவன்
Regular price Rs. 280.00
Iruppu Padhai Manithargal/இருப்புப் பாதை மனிதர்கள்-Latha Saravanan/லதா சரவணன்
Regular price Rs. 280.00
Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 180.00
‘ஆதித் தாயை
இன்றும் காட்டும் யானைக் கூட்டம்
அப்பத்தாக்களின் பின்னால்
வரிசையிடும்'
யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள்.
மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து நிற்கிறான். யானை என்ற வன நாயகன் மூலமாக மனிதனுக்குச் சில உண்மைகளைக் கவிஞர் கனிவோடும் கண்டிப்போடும் சொல்ல விழைகிறார்.
அந்த விழைவின் விளைச்சலே ‘இரண்டு கிராம் யானை’.
புத்தகத்தின் பெயர்தான் ‘இரண்டு கிராம் யானை'யே தவிர கருத்தாலும், வளத்தாலும் கற்பனையாலும் ஆயிரம் பொன் யானை இது என வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
- சிற்பி பாலசுப்பிரமணியம்
Rasavaadham/ரசவாதம்-Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 300.00
Durogan/துரோகன்-Kesananthan Agaran/கேசநந்தன் அகரன்
Regular price Rs. 160.00
அகரனுடைய எழுத்தின் சிறப்புகளாக சிலவற்றைச் சொல்லலாம்:
தனித்துவமான சொற்கள்; நூதனமான உவமைகள்; விசித்திரமான, கறுப்பு நகைச்சுவை. ஆரம்ப எழுத்தாளர் என்ற தடயமேயற்ற முதிர்ந்த நடை.
போர்ச்சூழல் கதைகள், உளவியல் ஆழம் கொண்டவை, அறிவியல் புனைவு என பல்வேறு வகைமைகள்.
வேளையின் புதிர்களைப் பேசும் கையறுநிலைக் கதைகள். வெளிப்படையாக அரசியலை முன்னிறுத்தாதவை. சொந்த மண்ணில் நிகழ்பவையும் சரி, அந்நிய தேசத்தில் நடப்பவையும் சரி, தீனர்களின் வாதையைப் பேசுகிறவை.
சித்திரங்களின் நுட்பம்வழி நகரும் கதைகள் சில. உணர்ச்சிகளைக் கிளர்த்தி நகர்கிறவை சில. அபுனைவின் சாயல் கொண்டவை ஓரிரண்டு.
சில கதைகள், வாசிக்கும் மனத்தில் பதற்றமூட்டுபவை; அதனாலேயே நிறைவையும் அளிப்பவை. கலையில் பெருகும் துயரம்தான் வாசக மனத்துக்கு எத்தகைய ஆசுவாசத்தை, இன்பத்தை அளிக்கிறது...!
புலம்பெயர் இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத பெயர்களில் ஒன்றாக கேசநந்தன் அகரன் உருவெடுக்கும் காலத்தை முன்னுணர்த்தும் தொகுப்பு இது...
- யுவன் சந்திரசேகர்
Stay up-to-date about new collections, events, discounts and more