578 products
ஒழுங்கின்மையின் வெறியாட்டம் (Ozhuginmayin Veriyattam) - Charu Nivedita
ZDP87
Regular price Rs. 200.00சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசாங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளைப் பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 152
Language: Tamil
கடவுளும் நானும் (Kadavulum Naanum) - Charu Nivedita
ZDP88
Regular price Rs. 120.00ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 94
Language: Tamil
வரம்பு மீறிய பிரதிகள் ( Varambu Meeriya Pirathigal) - Charu Nivedita
ZDP90
Regular price Rs. 300.00பிறகு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். தடிக்கம்புகளால் என்னுடைய முதுகு, புட்டம், பின்னங்கால், தொடை, கணுக்கால், பாதம் என்று பல இடங்களில் சீராகவும், ஒருவித லயத்தோடும் அடித்தார்கள். முதலில் வலி பயங்கரமாக இருந்தது. பிறகு தாங்க முடியாததாக மாறியது. கடைசியில், அந்த இடங்களில் உணர்வே இல்லாமல் போனது. ஆனால் அடியை நிறுத்தியதும் வலி திரும்பியது. இது போதாதென்று காயங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த என் சட்டையைக் கிழித்தெறிந்துவிட்டு சதையில் மின்கம்பியை வைத்து ஷாக் கொடுத்தார்கள். இது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. சமயங்களில் இரண்டையும் சேர்த்தே செய்தார்கள்.
தண்டனை கொடுக்காத நேரங்களில் அவர்கள் என்னை ஒரு கொக்கியில் மாட்டித் தொங்க விடுவார்கள்.
சமயங்களில் என்னைச் சித்ரவதை மேஜையில் கிடத்தி கைகளிலும் கால்களிலும் இரண்டு மெஷின்களைப் பொருத்தி எதிரெதிர்த் திசைகளில் இழுப்பார்கள். என் கண்கள் எப்போதும் கட்டப்பட்டிருக்கும் என்பதால் அந்த மெஷின் எப்படியிருக்கும் என்று நான்
பார்த்ததில்லை. ஆனால் அந்த மெஷின் என்னைப் பிய்த்துப் போடப் போவது போல் படுபயங்கரமாக இழுக்கும்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 266
Language: Tamil
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் (Kananvu Cappucino Koncham Chatting) - Charu Nivedita
ZDP77
Regular price Rs. 300.001922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது!
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 236
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள் (Pazhupu Nira Pakkangal) part 1 - Charu Nivedita
ZDP78
Regular price Rs. 400.00ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர் கூடத் தெரியவில்லை.
உவேசா, கு. அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், திருவிக என்று தொடங்கி தமிழ் படைப்புலகின் போக்கைத் தீர்மானித்த சில முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.
தினமணி இணையப் பதிப்பில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 332
Language: Tamil
ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) - Charu Nivedita
ZDP69
Regular price Rs. 220.001974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என்ன ஆவது? முடியாது. அவரை சாக விட மாட்டேன். இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, பனியைத் தாங்கும் கடினமான புதிய ஷூவை அணிந்து கொண்டு ம்யூனிச் நகரிலிருந்து நடந்தே பாரிஸுக்குக் கிளம்புகிறார். நவம்பர் 23-ஆம் தேதி கிளம்பியவர் டிசம்பர் 14 அன்று பாரிஸ் வந்து சேர்ந்தார் ஹெர்ஸாக்.
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Film/ Drama/ Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 184
Language: Tamil
தேகம் (Dhegam) - Charu Nivedita
ZDP79
Regular price Rs. 250.00இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான்? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம்.
புத்தகத்திலிருந்து
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 180
Language: Tamil
காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) - Charu Nivedita
ZDP83
Regular price Rs. 499.00சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 440
Language: Tamil
ரஜினிகாந்தின் சூரிய மேடு (Rajinikanthin Sooriyamedu) - Charu Nivedita
ZDP93
Regular price Rs. 225.00ரஜினிகாந்தின் சூரிய மேடு எனும் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் ‘எனக்குக்
குழந்தைகளைப் பிடிக்காது’ என்ற தலைப்பில் 2008ல் வெளிவந்தவை.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 180
Language: Tamil
எங்கே உன் கடவுள் ( Enge Un Kadavul) - Charu Nivedita
ZDP102
Regular price Rs. 120.00கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே?
பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்துகொள்வதல்ல. சமரசம் என் ஆன்மாவில் படியும் கறை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. சொல்லப்போனால் துக்ளக்கில் எழுதியபோது எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதற்கும் நான் அஞ்சவில்லை. எனக்கு 9 வயதுச் சிறுமியிடமும் 90 வயது முதியவரிடமும் சொல்வதற்குச் செய்திகள் இருக்கின்றன. துக்ளக் கட்டுரையைப் படித்துவிட்டு ராமமூர்த்தி என்ற பெரியவர் எனக்கு ஃபோன் செய்தார். பார்த்தால் அவர் எனக்கு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். ஆசானாக இருந்தவர் என்னை ஆசான் என்று சொன்னபோது அழுதுவிட்டேன்.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 86
Language: Tamil
கலகம் காதல் இசை (Kalagam Kathal Isai) - Charu Nivedita
ZDP119
Regular price Rs. 180.00சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 156
Language: Tamil
சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் (Cinema Alainthu Thiripavanin Azakiyal ) - Charu Nivedita
ZDP122
Regular price Rs. 350.00சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 298
Language: Tamil
நரகத்திலிருந்து ஒரு குரல் (Naragathilirundi Oru Kural ) - Charu Nivedita
ZDP123
Regular price Rs. 280.00பலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி?
நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா? பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறது. நம்முடைய மூளை நம் சரீரத்திலிருந்து உருவாகும் ஓர் அற்புதம். நம் தேகமே நம் குரலாக உருவெடுக்கிறது. இந்த நட்சத்திர மண்டலத்திலேயே மிக அற்புதமாக சிருஷ்டி மனிதன்தான்.
– அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 246
Language: Tamil
கலையும் வாழ்க்கையும் (Kalayum Vazhkayum) - Charu Nivedita
ZDP128
Regular price Rs. 135.00சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிப்ராயங்களை, பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாகச்
சொல்லிக் கொண்டவையிலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பது அவரது சுதந்திரமான மனநிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மனநிலைக்கு ஒரு நிரூபணம்.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 116
Language: Tamil
கலையும் போலியும் (Kalaiyum Poliyum) - Charu Nivedita
ZDP130
Regular price Rs. 110.00தொடர்ந்து அமீர்களின் கொடுங்கோன்மைகளைப் பற்றி மிக விரிவான புனைகதைகளை எழுதினார் அய்னி. அதனால் அலிம்கானின் போலீஸால் கைது செய்யப்பட்ட
அய்னி, அர்க் என்ற ஊரில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருநாள் அவருக்கு 75 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. ஒரு மனிதன் 75
பிரம்படிகள் வாங்கினால் இறந்துவிடுவான். அய்னியும் அந்தப் பிரம்படிகளோடு இறந்திருக்க
வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் தஜிகிஸ்தான் தலைநகரம் சோவியத் படைகளிடம் வீழ்ச்சி அடைந்ததால் எல்லா கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள். 75
பிரம்படிகளை வாங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த அய்னியை சோவியத் வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றதால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. அன்றைய தினம் 1917, ஏப்ரல் 9-ஆம் தேதி.
– புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 84
Language: Tamil
மனம் கொத்திப் பறவை (Manam Kothi Paravai) - Charu Nivedita
ZDP133
Regular price Rs. 250.00சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 200
Language: Tamil
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் ( Existensialisamum Fancy Baniyanum) - Charu Nivedita
ZDP134
Regular price Rs. 230.00இந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலைப் போல் இருக்கிறது என்று எழுதினார்.
நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன் வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற நாவல்களையும் சேர்த்தே சொல்கிறேன். அந்த வகையில் இந்த நாவல் தனித்தன்மை கொண்டது.
-சாரு நிவேதிதா
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 176
Language: Tamil
நேநோ (Nano) - Charu Nivedita
ZDP135
Regular price Rs. 400.00இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு.
- சாரு நிவேதிதா
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 330
Language: Tamil
ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) - Charu Nivedita
ZDP139
Regular price Rs. 350.00தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
ராஸலீலா (Rasaleela) - Charu Nivedita
ZDP141
Regular price Rs. 900.00அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 644
Language: Tamil
ஊரின் மிக அழகான பெண் (Oorin Miga Azhagana Pen) - Charu Nivedita
ZDP164
Regular price Rs. 350.00ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப.சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால்கூட மூணு வரி தான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 302
Language: Tamil
ஸீரோ டிகிரி(Zero Degree) - Charu Nivedita
ZDP62
Regular price Rs. 400.00ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே lipo grammatic நாவல்.
குட்டிகோரா (Cutticora) - Therisai Siva
ZDP55
Regular price Rs. 200.00 Sale price Rs. 170.00 Save 15%எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கைதமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் வாழ்க்கையின் நிகழ்வுகைளை நிறுத்தியுள்ளேன். நான் என்பது யாரோ...
ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை
விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படேவா, கோபப்படேவா வைக்கலாம். இதில் எது நடந்தாலும் மகிழ்ச்சி.
-தெரிசை சிவா
Author: Therisai Siva
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 160
Language: Tamil
எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) - Tamilmagan
ZDP51
Regular price Rs. 170.00 Sale price Rs. 145.00 Save 15%புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட
அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை.
ராஜமார்த்தாண்டன்
Author: Tamilmagan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil
கடைசிப் பக்கங்கள் (Kadaisi Pakkangal) - Charu Nivedita
ZDP50
Regular price Rs. 140.00நற்றிணையில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது வெட்கமாக இருக்கிறது” என்கிறாள். இப்படி ஒரு மரத்தைத் தன் சகோதரியாக நினைத்த சமூகம் இது. ஆனால் இன்று? மரங்களை இழந்தோம். மழையை இழந்தோம். நம் நேரத்தையெல்லாம் சினிமாவும், தொலைக்காட்சியும் இண்டர்நெட்டும் எடுத்துக் கொண்டது.
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil
ரூஹ் (Rooh) - Lakshmi Saravanakumar
ZDP49
Regular price Rs. 250.00எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத்தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது.
-லஃபிஸ் ஷகித்
Author: Lakshmi Saravanakumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 190
Language: Tamil
தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் (Tholaindhupona Siriya Alavilane Karuppu Nira Bible) - Sadhana
ZDP36
Regular price Rs. 120.00 Sale price Rs. 100.00 Save 17%“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.
இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.”
-சாரு நிவேதிதா
Author: Sadhana
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 98
Language: Tamil
நிலவு தேயாத தேசம் (Nilavu Theyadha Desam) - Charu Nivedita
ZDP37
Regular price Rs. 380.00“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”.
Author: Charu Nivedita
Genre: Travel and Holiday
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 282
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more