5 products
Rama/ராமன்
Regular price Rs. 90.00
Thirupati/ திருப்பதி
Regular price Rs. 99.00
கிருஷ்ண அவதாரத்துக்குப் பிறகு விஷ்ணு வைகுண்டம் திரும்பினார். பூலோகத்தைப் பற்றிய கவலை பிரம்மாவிற்கு வந்தது. விஷ்ணு இல்லாமல் குழப்பம் உருவாகும் என்று பயந்தார். அதனால் அவரும் அவர் மகனான நாரதரும் விஷ்ணுவை பூலோகத்துக்கு அனுப்ப திட்டமிட்டனர்.
பேசும் புற்று, கர்வம் கொண்ட முனிவர், கோபமான இடையன், அசுர அரசன் ராவணன் என்ற இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம், திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி கோயில் எப்படித் தோன்றியது என்ற இந்தக் கதைகளில்வலம் வருகின்றனர். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடேஸ்வரரின் கோயில் உலகத்தின் அழகான கோயில்களில் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு நளைக்கு 50000 மக்கள் தங்கள் பாவங்களைப் போக்க இங்கே வருவதாகக் கூறப்படுகிறது.
Mahabharatham/மஹாபாரதம்
Regular price Rs. 99.00
குடும்பத்தினுள் ஒரு சின்னப் பொறாமையால் ஆரம்பித்தது இக்காவியம்.
கௌரவர்கள் தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான பாண்டவர்களை சூழ்ச்சி செய்து ராஜ்ஜியத்தைவிட்டு வெளியில் அனுப்பினர். பகவான் கிருஷ்ணரால்
கூட அடுத்து வந்த பிரச்சனைகளைத் தடுக்க முடியவில்லை. வேத வியாசர்
இந்தக் காவியத்தைக் கவிதையாக எழுதியிருக்கிறார். இக்கவிதை
உலகிலேயே நீளமான கவிதையாகும். இக்காப்பியத்தின் மூலம் வேத வியாசர், மனித உறவுகள், பூசல்கள், லட்சியங்கள் மூலம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய விழைகிறார்.
Subash Chandra Bose/சுபாஷ் சந்திர போஸ்
Regular price Rs. 99.00
‘ஜெய் ஹிந்த்’ என்ற சுபாஷ் சந்திர போஸின் முழக்கம் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஜப்பானில் இருக்கும் இந்திய போர்க் கைதிகளும் இந்தியாவில் சுதந்திரத்தை நாடிய இளைஞர்களும் இவருடன் சேர்ந்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்த சுபாஷ் ஒரு நல்ல தலைவராக விளங்கினார்.
Kaakkaigalum Aandhaigalum/காக்கைகளும் ஆந்தைகளும்
Regular price Rs. 99.00
பண்டிட் விஷ்ணு ஷர்மா கற்றுக் கொடுக்க புது வழி ஒன்றைக் கண்டுபிடித்தார். அது பஞ்சதந்திரக் கதைகள். தன் மாணவர்களுக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கதைகளின் மூலம் கற்றுக் கொடுத்தார். இவை எல்லோரும் ரசித்துப் படிக்கும்படியும் அமைந்தன. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகும், பல்வேறு மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் இன்னும் இக்கதைகள் படிக்கப்பட்டு வருகின்றன. மனிதனின் முட்டாள்தனத்தையும் இரக்கமற்ற குணத்தையும் இக்கதைகள் வெளிச்சம்போட்டு காட்டுவது மட்டுமல்லாமல் ‘நண்பர்களைப் பார்த்துத தேர்ந்தெடு’ என்பது போன்ற சில அறிவுரைகளையும் வழங்குகிறது.
Stay up-to-date about new collections, events, discounts and more