Antonin Artaud-Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 120.00 Sale price Rs. 84.00 Save 30%
/
நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். ஆனாலும் ஏன் இந்த நிலத்திலிருந்து கிளம்புகிறோம்? இந்த நிலம் தன் ஆன்மாவை இழந்து விட்டது. ஆன்மாவின் மரணம்தான் எங்களின் வீழ்ச்சி. இயற்கைக்கு மரணம் நேர்ந்து விட்டது. காடுகளை வெட்டி வீழ்த்தி விட்டீர்கள். உணவுப் பயிர்களை அழித்து விட்டு போதைச் செடிகளைப் பயிரிட்டீர்கள். எங்களுக்கு வாழ்க்கையே போதை. ஓடுவது போதை. இசை போதை. ஆனால் நீங்களோ போதையை மாத்திரைகளிலும் ஊசிகளிலும் தேடுகிறீர்கள். இயற்கைதான் ருராமுரி. இயற்கை மரணித்த பிறகு ருராமுரி இங்கே எப்படி வாழ்வான்? மழை பொய்த்ததும் இந்தக் காரணத்தினால்தான்.
நாடகத்திலிருந்து...
நாடகத்திலிருந்து...