Anbu Oru Pinnaveenathuvavaathiyin Maruseeraivu Manu/அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு - Charu Nivedita/சாரு நிவேதிதா

Anbu Oru Pinnaveenathuvavaathiyin Maruseeraivu Manu/அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு - Charu Nivedita/சாரு நிவேதிதா

Regular price Rs. 340.00
/

Only -385 items in stock!

இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான்.  கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸைக் கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸைப் படுக்க வைத்து, கீழே விறகை மூட்டித் தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என்னுடைய ஒரு பக்கம் நன்றாக வெந்து விட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று சொன்னார் லாரன்ஸ். இப்படியான முயற்சிதான் சாருவின் இந்த நாவல்.

இந்த நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும்.

வளன் அரசு