91 products
91 products
91 products
தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் (Tholaindhupona Siriya Alavilane Karuppu Nira Bible) - Sadhana
ZDP36
Regular price Rs. 120.00 Sale price Rs. 100.00 Save 17%“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.
இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.”
-சாரு நிவேதிதா
Author: Sadhana
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 98
Language: Tamil
முள்ளம்பன்றிகளின் விடுதி (Mullampandrigalin Viduthi) - Ayyanar Viswanath
ZDP120
Regular price Rs. 170.00 Sale price Rs. 145.00 Save 15%முள்ளம்பன்றிகளின் விடுதி-அய்யனார் விஸ்வநாத்/ ayyanar -short stories
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.
சாரு நிவேதிதா
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 148
Language: Tamil
சேராக் காதலில் சேர வந்தவன் (Sera Kathalil Sera Vandhavan) - Aathmaarthi
ZDP108
Regular price Rs. 120.00 Sale price Rs. 100.00 Save 17%கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
டைமண்ட் ராணி (Diamond Rani) - Aathmaarthi
ZDP35
Regular price Rs. 150.00 Sale price Rs. 130.00 Save 13%இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினு டனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்.
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) - Araathu
ZDP113
Regular price Rs. 325.00தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைக்கதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டி கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.
சாரு நிவேதிதா
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 252
Language: Tamil
பிரேக் அப் குறுங்கதைகள் (Break Up Kurungkathaigal) - Araathu
ZDP98
Regular price Rs. 180.00எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன.
பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 164
Language: Tamil
நள்ளிரவின் நடனங்கள் (Naliravin Nadanangal) - Araathu
ZDP38
Regular price Rs. 200.00இமயமலைப் பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்த போது மிரண்டு விட்டேன். Charles Bukowski-யின் கதைகளுக்கு நிகரான கதைகள் இவை. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகரைத் துன்புறுத்தாமல் கதை சொல்லத் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது. நான் வாசகர்களைச் சொல்லவில்லை.எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இந்த நிலையில் அராத்து எழுதிய இந்தச் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய இளைய சமுதாயத்தினர் இன்று அனுபவிக்கும் angst இந்தச் சிறுகதைகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அராத்துவுக்கு angst என்றால் என்ன என்று தெரியாது. தெரிய வேண்டியதில்லை.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 186
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more