78 products
Puviyiloridam/புவியிலோரிடம்-பா.ராகவன்/Pa.Raghavan
Regular price Rs. 200.00
Rusiyiyal/ருசியியல்--Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 220.00
Iraq plus Sadam minus Sadam/இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்-Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 250.00
Sarvadhigarathilirundhu Jananayagathuku/சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு-Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 150.00
Thoonilum Irupaan/தூணிலும் இருப்பான் -Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 180.00
Yanni /யானி -Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 160.00
ISIS -Kolaikaranpettai/கொலைகாரன்பேட்டை -Pa.Raghavan/பா.ராகவன்
Regular price Rs. 190.00
Adhiyile Nagaramum Naanum Irundhom/ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 200.00
சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது.
'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது' என்று பா. ராகவன் சொல்வதைச் சிறிது நுணுக்கமாகக் கவனித்தால் பிரமிப்புகளையும் வியப்புகளையும் தாண்டி, இந்நகரவாசம் ஒவ்வொரு தனி மனிதனையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காணலாம்.
Prabhakaran Vaazhvum Maranamum/பிரபாகரன் வாழ்வும் மரணமும்-Pa.Ragahavan/பா ராகவன்
Regular price Rs. 230.00
PAK Oru pudhirin saridam/பாக். ஒரு புதிரின் சரிதம்-Pa.Raghavan-பா ராகவன்
Regular price Rs. 220.00
Unavin Varalaaru/உணவின் வரலாறு-Pa Raghavan/பா ராகவன்
Regular price Rs. 290.00
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்?
பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்கள் சோம பானத்தைக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் பீரைப் போன்றதொரு பானம் இருந்திருக்கிறது. அதைப் பற்றித் தெரியுமா?
உணவின் கதை என்பது உயிரினங்களின் கதையைக் காட்டிலும் சுவாரசியமானது. புதிர்கள் நிறைந்தது. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. மனிதனின் கற்பனைத் திறன் உனவுக்கு ருசியைச் சேர்த்தது. ருசி சேரச் சேர அதற்குச் சிறகு முளைத்தது.
நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசையில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தோன்றி, வளர்ந்து உருக்கொண்ட வரலாற்றை திகைப்பூட்டக் கூடிய தகவல்களுடன் விவரிக்கிறார் பா. ராகவன். உணவு இயல் என்றாலே சமையல் குறிப்புகள்தான் என்றிருந்த தமிழ் வாசக மனப்பதிவை முற்றிலும் மாற்றியமைத்த நூல் இது.
En Peyar Escobar/என் பெயர் எஸ்கோபர்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 275.00
Poliga Poliga/பொலிக பொலிக-Pa. Raghavan/பா ராகவன்
Regular price Rs. 550.00
ISI- NIZHAL ARASIN NIJA MUGAM/நிழல் அரசின் நிஜ முகம் -PA.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 225.00
Nilamellam Ratham/நிலமெல்லாம் ரத்தம்-Pa Raghavan/பா .ராகவன்
203
Regular price Rs. 850.00இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்?
சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது?
ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்?
பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது. யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.
Dollar Desam/டாலர் தேசம்-Pa Raghavan/பா .ராகவன்
202
Regular price Rs. 1,000.00இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு.
அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும். நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் - அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்.
தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை. இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம்.
டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.
Hitler/ஹிட்லர்-Pa Raghavan/பா .ராகவன்
201
Regular price Rs. 225.00விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர். உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர்.
தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.
Poonaikathai/பூனைக்கதை-Pa.Raghavan/பா .ராகவன்
200
Regular price Rs. 400.00திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது.
திரைப்படம் - தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல்.
இந்தக் கதையை ஒரு பூனை சொல்கிறது. அது இன்று வாழும் பூனையல்ல. என்றும் வாழும் பூனை. மாய யதார்த்த எழுத்தின் வசீகர சாத்தியங்களை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் இந்நாவல் விவரிக்கும் கலையுலகம் அசலானது. அரிதாரங்கள் அற்றது. இருண்மையின் அடியாழங்களில் பூனையின் கண் பாய்ச்சும் வெளிச்சம் உக்கிரமானது.
மதிப்பீடுகளின் தடமாற்றத்துக்கு எதிராக யுத்தத்துக்கு நிற்கும் பூனை ஒரு கட்டத்தில் நீங்களாகத் தெரிவீர்கள்.
ஆனால் அது நீங்களல்ல. நீங்கள் மட்டுமல்ல.
Iravaan/இறவான்-Pa.Raghavan/பா .ராகவன்
199
Regular price Rs. 350.00இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது.
பா. ராகவனின் ‘இறவான்', மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு பெருங் கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை இதைவிடச் சிறப்பாக வேறெந்த நாவலும் படம் பிடித்ததில்லை.
Yathi/யதி-Pa.Raghavan/பா .ராகவன்
198
Regular price Rs. 1,000.00யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம்.
உலகில் ஒரு பாதமும் உணர்வின் உச்சத்தில் ஒரு பாதமும் பதித்து, உலகையும் உணர்வையும் கடந்து பிரபஞ்ச வெளியை நிறைக்கும் யோகிகளும் சித்தர்களும் நிறைந்த மாயப் பெருங்குகையின் கதவுகளை இந்நாவல் திறந்துவிடுகிறது.
இது நாம் அறியாததொரு உலகம். காலமற்றது. ஆனால் காலத்தை நிகர்த்த பிரம்மாண்டமானது. தகிப்பும் உக்கிரமும் நிறைந்தது.
யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டதொரு அசுர சாதனை.
Oil Regai-ஆயில் ரேகை-Pa.Raghavan/பா .ராகவன்
197
Regular price Rs. 250.00ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத் தீர்மானிப்பது யார்? பெட்ரோலியக் கச்சா எண்ணெய் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன விதங்களில் உபயோகமாகிறது என்பது தெரிந்தால் இதன் பின்னால் நடைபெறும் அரசியல் முழுவதுமாகப் புரியும்.
பெட்ரோலியப் பொருளாதாரத்தின், அதனை ஆளும் அரசியலின் அடி ஆழம் வரை ஊடுருவிப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்நூல். தமிழில் இத்துறை சார்ந்து இன்னொரு நூல் இதுவரை வந்ததில்லை.
Alagila Vilayattu-அலகிலா விளையாட்டு-Pa.Raghavan/பா. ராகவன்
196
Regular price Rs. 200.00பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன?
2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.
Stay up-to-date about new collections, events, discounts and more