149 products
149 products
149 products
காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) - Charu Nivedita
ZDP83
Regular price Rs. 499.00 Sale price Rs. 349.00 Save 30%சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 440
Language: Tamil
ராஸலீலா (Rasaleela) - Charu Nivedita
ZDP141
Regular price Rs. 900.00 Sale price Rs. 630.00 Save 30%அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 644
Language: Tamil
ஸீரோ டிகிரி(Zero Degree) - Charu Nivedita
ZDP62
Regular price Rs. 400.00 Sale price Rs. 280.00 Save 30%ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே lipo grammatic நாவல்.
ரூஹ் (Rooh) - Lakshmi Saravanakumar
ZDP49
Regular price Rs. 250.00எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத்தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது.
-லஃபிஸ் ஷகித்
Author: Lakshmi Saravanakumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 190
Language: Tamil
The Final Solitude - S. Ramakrishnan
ZDP20
Regular price Rs. 400.00 Sale price Rs. 340.00 Save 15%With new possibilities in storytelling, The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangzeb’s rule in a fictional small kingdom in Eastern India, called Satgarh.
Interspersed with fantastical tales, this allegorical novel brings to light the torment and the trouble people faced during the lunatic king Pishada’s fascist regime.
Author: S. Ramakrishnan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 292
Language: English
Zero Degree -Charu Nivedita
ZDP25
Regular price Rs. 550.00 Sale price Rs. 385.00 Save 30%ஹிப்பி (Hippy) - Ayyanar Viswanath
ZDP92
Regular price Rs. 170.00 Sale price Rs. 145.00 Save 15%இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும் இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.
மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 122
Language: Tamil
தீக்கொன்றை மலரும் பருவம் (Theekondrai Malarum Paruvam) - Abubakar Adam Ibrahim
ZDP91
Regular price Rs. 499.00பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று நிகழப் போகிறதென்று உணர்ந்தாள். இருபத்தைந்து வயது ஹஸன் ’ரெஸா, ’ போதைப் பொருள் விற்பனை செய்பவன், உள்ளூர் ரவுடிகளின் தலைவன் , திருடும் பொருட்டு அவளது வீட்டின் வேலியைத் தாண்டிக் குதித்தபோது, அவள் இதயத்தில் தடம் பதிக்கப் போகிறான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அசாதாரண சூழலில் சந்தித்துக்கொண்ட இருவரும் ரகசிய உறவின் பயணத்தில் திளைத்திருக்கையில், பிந்த்தாவின் செல்வச்செழிப்புடைய மகன் அதை அறிய நேரும்போது, எதிர்பாராத வகையில் அவலமும் துயரமும் ஏற்படுகின்றன.
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.
Author: Abubakar Adam Ibrahim
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 404
Language: Tamil
பொண்டாட்டி (Pondatti) - Araathu
ZDP72
Regular price Rs. 400.00தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.
அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 368
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more