66 products
66 products
66 products
ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) - Charu Nivedita
ZDP139
Regular price Rs. 350.00தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
ராஸலீலா (Rasaleela) - Charu Nivedita
ZDP141
Regular price Rs. 900.00அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 644
Language: Tamil
ஊரின் மிக அழகான பெண் (Oorin Miga Azhagana Pen) - Charu Nivedita
ZDP164
Regular price Rs. 350.00ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப.சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால்கூட மூணு வரி தான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 302
Language: Tamil
ஸீரோ டிகிரி(Zero Degree) - Charu Nivedita
ZDP62
Regular price Rs. 400.00ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே lipo grammatic நாவல்.
கடைசிப் பக்கங்கள் (Kadaisi Pakkangal) - Charu Nivedita
ZDP50
Regular price Rs. 140.00நற்றிணையில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது வெட்கமாக இருக்கிறது” என்கிறாள். இப்படி ஒரு மரத்தைத் தன் சகோதரியாக நினைத்த சமூகம் இது. ஆனால் இன்று? மரங்களை இழந்தோம். மழையை இழந்தோம். நம் நேரத்தையெல்லாம் சினிமாவும், தொலைக்காட்சியும் இண்டர்நெட்டும் எடுத்துக் கொண்டது.
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil
நிலவு தேயாத தேசம் (Nilavu Theyadha Desam) - Charu Nivedita
ZDP37
Regular price Rs. 380.00“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”.
Author: Charu Nivedita
Genre: Travel and Holiday
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 282
Language: Tamil
Unfaithfully Yours - Charu Nivedita
ZDP26
Regular price Rs. 400.00The ideal combination of satirical ammunition launched at political powers, vivid descriptions of travels in Paris, witty movie reviews, appreciation of dogs and the under-appreciation of the Tamil writer, Unfaithfully Yours, is the very essence of Charu Nivedita’s raw perception of this world. A collection of articles, essays, blogs and interviews, the book presents Charu’s bold and unapologetic take on various subjects, at a single glance to the reader.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 218
Language: English
Towards A Third Cinema - Charu Nivedita
ZDP28
Regular price Rs. 200.00The on-screen offerings of Hollywood and Europe have coloured the popular perspective of cinema- what it is and what it should be- to such a great extent that the film contributions of Latin American directors remain largely uncharted. This book, with its compelling insights, intends to put the stylistically groundbreaking, exceedingly true to life and aesthetically mesmerizing Latin American cinema on the map and establish it as the “Third Cinema”.
Author: Charu Nivedita
Genre: Film/ Drama/ Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 112
Language: English
To Byzantium - Charu Nivedita
ZDP27
Regular price Rs. 600.00Zero Degree -Charu Nivedita
ZDP25
Regular price Rs. 550.00Stay up-to-date about new collections, events, discounts and more