Ramojium/ராமோஜியம்-Era.Murugan/இரா.முருகன்
Regular price Rs. 870.00 Sale price Rs. 610.00 Save 30%
/
வாரம் நாலு ராத்திரி, காக்கி நிஜாரும், அரைக்கை காக்கிச் சட்டையும், கையில் மூணு பேட்டரி அடைத்த டார்ச் லைட்டும், வாயில் ஊய்ய்ய்ய் என்று எதிரொலித்து ஒலிக்கும் விசிலும், இன்னும் முடிந்தால் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி சகிதம் தெருவை, பேட்டையை ரோந்து சுற்றி வர வேண்டும். எதிரி விமானம் வருவதாகத் தெரிந்தால் ஏஆர்பி சைரன் ஒலிக்குமில்லையோ. அப்போது, தெரு முனையில் தோண்டி வைத்த பாதுகாப்பு ஷெல்டர்களில் ஜனங்களை இடம் பெயர வைத்து பாதுகாப்பாக உட்காரச் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம் அரை மணியோ முக்கால் மணியோ கழிந்து எதிரி விமான அபாயம் இல்லாமல் போக, எல்லாம் சரியாச்சு என்ற ‘ஆல் க்ளியர்’ கூவலாக நீளமாக சைரன் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேணும். இப்படி ஏகப்பட்ட கௌரவமான வேலைகளோடு வார்டன் பதவி.