1 product
Mana Azhutham Virattalaam/மன அழுத்தம் விரட்டலாம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 90.00
இரண்டு மூன்று வயது குழந்தைகளுக்கு கூட, அவை நினைத்தது நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கையில் இருப்பதை தரையில் எறிகிறது.
பள்ளி மாணவர்கள் டென்ஷனாக இருக்கிறது என்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் ஸ்டிரஸ் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரி குறித்து கேட்கவே வேண்டாம். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் குறித்து ஏகப்பட்ட வருத்தங்கள் கோபங்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். உலகம், போட்டி, பொறாமை, ஆற்றாமை, வருத்தம் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கிறது.
பொது தேர்வுகள், போட்டித் தேர்வுகள், பதவி உயர்வுகள், மணவாழ்க்கை, வியாபாரத்தில் வெற்றி என மக்கள் சந்திக்கும், தேடும் பலவும் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. செயல்பாடுகள் குறைந்து, வெற்றிகளை தள்ளி போவதற்கு காரணம், மன அழுத்தம்தான்.
அது என்ன? எதனால் வருகிறது? அதை எப்படி குறைப்பது? போன்றவை குறித்து எளிமையான விளக்கம் தரும் ஒரு புத்தகம்.
Stay up-to-date about new collections, events, discounts and more