86 products
86 products
86 products
Kodeeswara Ulagam/கோடீஸ்வர உலகம் -A.Pandiyarajan/அ.பாண்டியராஜன்
Regular price Rs. 270.00
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு கடந்து விடுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த பத்து பேருடைய வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி நின்று பார்த்து அவர்கள் என்ன செய்ததால் இந்த உயரத்தை அடைந்தார்கள்? எந்த சக்தி இவர்களை செலுத்தியது? எது இவர்களை செல்வந்தர்களாக்கியது என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சிதான் இந்த நூல்.
Thorkaadhaval/தோற்காதவள்-Gayathri Y/காயத்ரி ஒய்
Regular price Rs. 220.00
Vaan/வான்-Rumman/ரும்மான்
Regular price Rs. 160.00
Thirakka Mudiyaadha Kottai/திறக்க முடியாத கோட்டை- Vinula/வினுலா
Regular price Rs. 250.00
இது ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ரஷ்யா. ஜார் மன்னர்களிடமிருந்து விடுதலை அடைந்த காலத்திலிருந்தே அவர்களது இலக்கு இதுவே. முன்னேறிய உலக நாடுகளுக்கு முன், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கம்யூனிசத்தின் வழியே நிரூபிக்கப் போராடினார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அதிபரும் இதையே முயற்சி செய்தனர். ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்தனர். இவற்றின் வெற்றி தோல்விகள் அவ்வப்போது மக்கள் புரட்சியில் முடிந்தது. மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தாலும் தங்கள் இலக்கை விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டை மேம்படுத்த அதிபரும், மக்களுமாக மேற்கொண்ட பயணமே இந்தப் புத்தகம்.
அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்று ரஷ்யா. அத்தகைய வலிமையை அவர்களாகவே வளர்த்துக் கொண்டவர்கள். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உருவான புத்தகம் இது. ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்து, தற்போது புத்தகமாகியிருக்கிறது.
Siru Thuli Perum Panam/சிறு துளி பெரும் பணம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 140.00
Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy
Regular price Rs. 180.00
கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள்.
அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்டுமே ஒரே வழி. இதற்கான உத்திகளைச் சொல்லித்தருவதே ‘கத்தியின்றி ரத்தமின்றி.’
ஒரு கதை. அதன் கருவாய் ஒரு சைபர் க்ரைம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்னும் விளக்கம். அக்குற்றத்தில் சிக்காமலிருக்கும் வழிமுறைகள். இவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது கத்தியின்றி ரத்தமின்றியின் ஒவ்வொரு அத்தியாயமும்.
அவ்வளவாய் அறியப்பட்டிராத ஆனால் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விதவிதமான சைபர் குற்றங்களை விவரிக்கிறது கத்தியின்றி ரத்தமின்றி.
Nalam Tharum Vitamingal/நலம் தரும் வைட்டமின்கள்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 210.00
நம்முடைய உடலுக்கு நன்மைகளை அள்ளித் தந்து சிறப்பாகச் செயல்படவைக்கும் வைட்டமின்களைப் பற்றிய விரிவான, விளக்கமான, தெளிவான அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல். எதைச் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், அதனால் என்ன நன்மை, நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மற்ற குறிப்புகள் என்னென்ன என்று உங்களுடைய உணவுப் பழக்கத்தைச் செம்மையாக்குவதற்கான சிறந்த கையேடு இது.
Salman Rushdie/சல்மான் ரஷ்டி-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 130.00
இலக்கியமும் சிக்கல்களும் சரிக்குச் சரியாகக் கலந்த வாழ்க்கை சல்மான் ரஷ்டியுடையது. ஒரு புத்தகத்துக்காக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதில் சில பக்கங்களுக்காகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர் அவர். அதன்பிறகும் பல தொல்லைகள் அவரைத் தொடர்ந்து துரத்திவந்தன. இத்தனைக்கு நடுவிலும் அவர் படைப்பூக்கத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் பெரிய செய்தி, பாடம்.
இந்தியாவைக் கதைகளின் வழியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ரஷ்டியின் பரபரப்பான வாழ்க்கைக் கதை இது, அவருடைய இலக்கியம் தொடங்கிய ஊற்றுக்கண்ணையும், வளர்ச்சியையும், அவர் உண்டாக்கிய தாக்கங்களையும் துல்லியமாக விவரிக்கிறது.
Unnaipol Oruvar/உன்னைப்போல் ஒருவர்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை.
இன்னொருபக்கம், இவற்றில் சில முக்கியமான பாடங்களும் இருக்கலாம், சாதனையாளர்களின் சிறுவயதுப் பண்புகள் அவர்களுடைய ஆளுமையில் எப்படிப் பிரதிபலித்தன என்று நாம் தெரிந்துகொள்ளலாம், முயன்றால் யாரும் பெரிய அளவில் வளரலாம், சாதிக்கலாம் என்பதும் புரியும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள பிரபலங்களின் சிறுவயது நிகழ்வுகளைச் சிறுவர்கள் விரும்பிப் படிப்பீர்கள், இவர்களைப்போல் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
Inikkum Tamil/இனிக்கும் தமிழ்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின்றன.
இந்நூல் சில சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றை விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது, அவற்றின் எழிலையும், அவற்றுள் பொதிந்திருக்கிற தகவல்களையும் எடுத்துக்காட்டி மகிழ்வூட்டுகிறது, மேலும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
ChatGPT Saritham/சாட்ஜிபிடி சரிதம்-Cybersimman/சைபர்சிம்மன்
Regular price Rs. 350.00
சாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. அதோடு, சாட்ஜிபிடியை மையமாக கொண்டு பொதுவாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகிறது. ஏஐ விவாதத்தில் அதன் அடிப்படை அம்சங்கள் தொடர்பான புரிதல் அவசியம் எனும் வகையில், ஏஐ நுட்பங்களை விளக்க முற்பட்டுள்ளதோடு, ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த சிக்கல்களையும், கேள்விகளையும் அலசுகிறது. செயற்கை தரவுகள், பொய் ஆக்கங்கள் உள்ளிட்ட நவீன பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஏஐ பரப்பில் இந்த நூல் தொட்டுக்காட்டும் புள்ளிகள் அநேகம். இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் பதிப்பு மற்றும் தமிழ் யுவர்ஸ்டோரியில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.
Ulagam Naadu Veedu panam/உலகம் நாடு வீடு பணம்/Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 220.00
அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றால் விளைந்த தொழில்புரட்சி, அதன் மூலம் பெரு பொருளாதார வளர்ச்சி, அதன்பின் அந்த வீச்சை அதிகரித்த தகவல் தொழில்நுட்பம், இன்டர்நெட். அதெல்லாம் போதாது என்று இப்போது, ‘இது உதவியா ஆபத்தா?' என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிற, செயற்கை நுண்ணறிவு என்கிற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். AI.
சாதாரண சம்பளங்கள் போதாது. அடிக்கடி மேம்பாடு காணும் சில பத்தாயிரம் ரூபாய்களுக்கான விலையில் ஆண்ட்ராய்டு போன்கள்: லூனா மொப்பெட் எல்லாம் போய் சில லட்சங்களில் மோட்டார் சைக்கிள் விலைகள். வாஷிங் மெஷின், ஏசி போன்றவை தாண்டி, சில கோடி ரூபாய்களுக்கு கார்கள். முழு இடமும் கிடையாது. வீடு அல்ல. வெறும் பிளாட் என்பதே பல கோடி ரூபாய்கள்.
ஆக, பணம் இல்லாமல் முடியாது. செலவு செய்ய மட்டுமல்ல. சம்பாதிக்கவும் 100 வழிகள். கடின உழைப்பு அல்ல. திறமையான அணுகுமுறை இருந்தால் போதும். பணம் கொட்டும்.
‘மண்ணுல போடு அல்லது. பொன்னுல போடு’ என்கிற காலம் இல்லை. முதலீட்டிலும் பாண்டுகள், பரசுர நதிகள், கோல்ட் பீஸ், கிரிப்டோ என பல புது வகைகள். இப்படிப்பட்ட தினம் தினம் மாறிக்கொண்டிருக்கிற பணம் இல்லாதவர்களுக்கு இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிற உலகத்தில் வாழ, பணத்தை உண்டாக்க பாதுகாக்க முதல் முக்கிய தேவை பணம் குறித்த புரிதல். அந்த முக்கியமான தேவையைக் கடந்த மூன்று தசமங்களாக தமிழ் மக்களுக்கு எளிமையான வழிகளில் பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் புத்தகங்கள் வழியாகவும் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோம வள்ளியப்பன். தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய சோம வள்ளியப்பன் எழுதிய, புதிய புத்தகம், ‘உலகம்-நாடு-வீடு-பணம்’.
Veetu Kanakku/வீட்டுக் கணக்கு-Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 150.00
வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதையும், வீட்டுச்செலவை குறைக்கும் பல்வேறு செயல்படுத்தக்கூடிய பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிற 20-க்கும் மேற்பட்ட நிதி தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர், சோம வள்ளியப்பன்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு நிதி மேலாண்மை அணுகுமுறைகளை வீட்டு பட்ஜெட் போடுவதிலும் செலவை குறைப்பதிலும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளுடன் அழகாக விளக்குகிறார்.
'பாருங்கள் ஆனால் வாங்க வேண்டிய அவசியம் இல்லை' என்கிற நோஷனல் பர்ச்சேஸ்; பிரச்னைகளில் மாட்டிவிடும் ரொட்டீன் மற்றும் இம்பெல்சிவ் பர்ச்சேஸ்: தேவையில்லாதவற்றை வாங்கத் தூண்டும் பர்சப்ஷன் என்ற கோளாறு; வழக்கம் போல என்று வாங்காமல், வாங்க வேண்டிய பொருட்களை ஸீரோ பேஸ்ட் ஆக பார்ப்பதால் கிடைக்கும் அனுகூலம்; பிரயாரைஸ்டேஷன்; வீட்டுச் செலவுகளின் செய்யக்கூடிய ப்ரொடக்டிவிட்டி மற்றும் காஸ்ட் பெனிஃபிட் அலசல்; எதையும் தேவையா என்று கேள்வி கேட்கும் சேலஞ்ச் தி ஸ்டேட்டஸ் கோ; கவனித்து உறுதி செய்ய வேண்டிய லாங் டர்ம் பெனிஃபிட்ஸ் என்று -
வீட்டு பட்ஜெட் போடுவதை மிகப் புதிய முறையில் சுவாரஸ்யமாக விளக்குகிறார் 80 புத்தகங்களின் ஆசிரியரும், ஒன்றரை லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்ற அள்ள அள்ளப் பணம் புத்தகத்தின் புத்தகத்தை எழுதியவருமான, மேனேஜ்மென்ட் குரு சோம வள்ளியப்பன்.
Mana Azhutham Virattalaam/மன அழுத்தம் விரட்டலாம் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 90.00
இரண்டு மூன்று வயது குழந்தைகளுக்கு கூட, அவை நினைத்தது நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கையில் இருப்பதை தரையில் எறிகிறது.
பள்ளி மாணவர்கள் டென்ஷனாக இருக்கிறது என்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் ஸ்டிரஸ் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரி குறித்து கேட்கவே வேண்டாம். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் குறித்து ஏகப்பட்ட வருத்தங்கள் கோபங்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். உலகம், போட்டி, பொறாமை, ஆற்றாமை, வருத்தம் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கிறது.
பொது தேர்வுகள், போட்டித் தேர்வுகள், பதவி உயர்வுகள், மணவாழ்க்கை, வியாபாரத்தில் வெற்றி என மக்கள் சந்திக்கும், தேடும் பலவும் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. செயல்பாடுகள் குறைந்து, வெற்றிகளை தள்ளி போவதற்கு காரணம், மன அழுத்தம்தான்.
அது என்ன? எதனால் வருகிறது? அதை எப்படி குறைப்பது? போன்றவை குறித்து எளிமையான விளக்கம் தரும் ஒரு புத்தகம்.
Engumiruppavar/எங்குமிருப்பவர் - Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்/சிறு கதைகள்
Regular price Rs. 90.00
வாழும் காலத்தில் மத நல்லிணக்கத்தைப் போகும் இடமெல்லாம் மலரச் செய்தவரான பாபா, இன்றைய நவநாகரிக யுகத்தின் பொருள்முதல் வாதத்தின் பக்க விளைவுகளை முன்கூட்டியே கணித்தவர். எளிமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். ஜீவகாருண்யத்தைப் பறைசாற்றியவர். பல இடங்களுக்கு பிரயாணப் பட்டவர்.
அவர் ஜீவசமாதி அடைந்து ஒரு நூற்றாண்டைக் கடந்து, இன்றைய கணினி யுகத்திலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் கர்த்தாவாகக் கருதப்படுவது ஏன்? பொருளாதாரப் பின்புலம், படிப்பு, மதம் சார்ந்த நம்பிக்கை போன்ற பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து, இவ்வளவு பெரிய மக்கள் திரளை அவர்பால் ஈர்க்கும் விசை எது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியில் சோம வள்ளியப்பன்.
மேலாண் கலை பயிற்றுனர், பங்குச்சந்தை ஆலோசகர், உணர்வுகளையும் மனித உறவுகளை யும் பேணுவது பற்றிப் பயிற்சி கொடுப்பவர் போன்ற தன் தொழிற்துறை அடையாளங்களை சாய்பாபாவின் வாயிலிலே கழற்றி வைத்துவிட்டு, ஒரு பக்தனாகத் தன் அனுபவங்களை, தாம் கண்டு, கேட்டு, பார்த்த விஷயங்களைச் சிறு சிறு கதைகளாகப் பதிவு செய்துள்ளார்.
TNPSC Thervu Vazhikaati/TNPSC தேர்வு வழிகாட்டி-SRIDEVI KANNAN/ஸ்ரீதேவி கண்ணன்
Regular price Rs. 150.00
Pachai Mittai Sivappu Mittai/பச்சை மிட்டாய் சிவப்பு மிட்டாய் -N. Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 100.00
Uyar 102/உயர் 102-N. Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 140.00
Maanavarkalukkaana Tamil - Part 5/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 5-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 350.00
Maanavarkalukkaana Tamil - Part 4/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 4-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 330.00
Nidhi Semippu Mudhaleedu Vari/நிதி சேமிப்பு முதலீடு வரி-Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 220.00
Velinaadugalil MBBS/வெளிநாடுகளில் MBBS-Prabhu Bala/பிரபு பாலா
Regular price Rs. 150.00
AI ENUM EZHAM ARIVU/ AI எனும் ஏழாம் அறிவு-ஹரிஹரசுதன் தங்கவேலு/Hariharasuthan Thangavelu
Regular price Rs. 230.00
K. BALACHANDAR/கே. பாலசந்தர்-Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
Regular price Rs. 200.00
Gandhi Yaar/காந்தி யார்?-N Chokkan/என் சொக்கன்
Regular price Rs. 220.00
Pennaal Mudiyum/பெண்ணால் முடியும்-Naseema Razak/நஸீமா ரஸாக்
Regular price Rs. 180.00
Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்-N Chokkan/என் சொக்கன்
Regular price Rs. 160.00
America Ullum Puramum/அமெரிக்கா உள்ளும் புறமும் -Padma Arvind/பத்மா அர்விந்த்
Regular price Rs. 310.00
Stay up-to-date about new collections, events, discounts and more