32 products
32 products
32 products
மனம் கொத்திப் பறவை (Manam Kothi Paravai) - Charu Nivedita
ZDP133
Regular price Rs. 250.00 Sale price Rs. 175.00 Save 30%சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 200
Language: Tamil
ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) - Charu Nivedita
ZDP139
Regular price Rs. 350.00 Sale price Rs. 245.00 Save 30%தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
ராஸலீலா (Rasaleela) - Charu Nivedita
ZDP141
Regular price Rs. 900.00 Sale price Rs. 630.00 Save 30%அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 644
Language: Tamil
Unfaithfully Yours - Charu Nivedita
ZDP26
Regular price Rs. 400.00 Sale price Rs. 280.00 Save 30%The ideal combination of satirical ammunition launched at political powers, vivid descriptions of travels in Paris, witty movie reviews, appreciation of dogs and the under-appreciation of the Tamil writer, Unfaithfully Yours, is the very essence of Charu Nivedita’s raw perception of this world. A collection of articles, essays, blogs and interviews, the book presents Charu’s bold and unapologetic take on various subjects, at a single glance to the reader.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 218
Language: English
Stay up-to-date about new collections, events, discounts and more