Buddharin Perasai pal/புத்தரின் பேரசைப் பல் -Neyveli Bharathikumar /நெய்வேலி பாரதிக்குமார்
தொடர்வண்டியில் எல்லா கவலைகளையும் மறந்து பயணித்திருப்போம் ஆனால் அதனை இயக்குபவர்களுக்கு என்று நாமறியாத வலிகள் பல இருக்கும், அந்த வலிகளைப் பதிவு செய்துள்ளது இதிலுள்ள உயிரின் ஒலி என்னும் சிறுகதை. அது போலவே திரைக்குப் பின்னே உழைக்கும் ஒலிக் கலைஞர்கள், இந்தியாவின் சாலை எங்கும் பயணிக்கும் சரக்குந்து ஓட்டுனர்கள், சங்கு குளிப்பவர்களின் துயர வாழ்வு, சமையல் கலைஞர்களின் அறியப்படாத பணிச்சூழல் என்று பல்வேறு நுட்பமான மன உணர்வுகளைப் பதிவு செய்துள்ள அடர்த்தியான சிறுகதைகள் இடம் பெற்ற தொகுப்பு இது. இந்த நூலில் வெவ்வேறு போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்ற சிறந்த கதைகள் இருக்கின்றன. இன்னும் சொல்வதாயின் எல்லா கதைகளுமே ஏதோ ஒரு போட்டியில் ஏதோ ஒரு பரிசினைப் பெற்ற கதைகள்தான். மனித உணர்வுகளை இலக்கிய மொழியில் உணரவைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.