Icecream Bootham/ஐஸ்க்ரீம் பூதம்-Pa.Raghavan/பா.ராகவன்
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம்.
எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது?
விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல். கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கதை.