இப்போது ஐந்து நிமிடம் முன்னர் ஒரு குறுநாவலைப் படித்தேன். அட அடா.... என்ன ஒரு அற்புதமான அனுபவம். அசந்து விட்டேன். படித்துப் பாருங்கள். உங்களையும் உலுக்கக்கூடிய குறுநாவல். இந்தக் குறுநாவலை யாருமே நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அப்படியான கதை. எனக்கு ஜெகனை முப்பது ஆண்டுகளாகத் தெரியும்; லத்தீன் அமெரிக்கக் கதைகளை மிக அழகாக மொழிபெயர்ப்பவராக. பிறகு ஏதோ அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்களுக்கெல்லாம் அவர்தான் வசனம். அதெல்லாம் எனக்குத் தெரியாத உலகம். அப்படி வசனம் எழுதிய முதல் ஆள் அவராகத்தான் இருக்கமுடியும். டிவி. தமிழ் நாட்டுக்குள் வந்தவுடன் எழுதிய முதல் வசனகர்த்தாவாக இருக்கவேண்டும். அதெல்லாம் முக்கியம் அல்ல. இந்தக் குறுநாவல் முக்கியம். ஜெகனை அதற்குப்பிறகு நான் பாலகுமாரனோடு பார்த்ததாக ஞாபகம். அவருக்குள் இப்படி ஒரு அசுர இலக்கியவாதி இருப்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். - சாரு நிவேதிதா, ஜனவரி.03. 2021
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more