153 products
தாந்தேயின் சிறுத்தை (Danteyin Siruthai) - Charu Nivedita
ZDP63
Regular price Rs. 340.00கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 282
Language: Tamil
மலாவி என்றொரு தேசம்(Malawi Endroru Desam) - Charu Nivedita
ZDP64
Regular price Rs. 340.00அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 312
Language: Tamil
ஒழுங்கின்மையின் வெறியாட்டம் (Ozhuginmayin Veriyattam) - Charu Nivedita
ZDP87
Regular price Rs. 200.00சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசாங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளைப் பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 152
Language: Tamil
கடவுளும் நானும் (Kadavulum Naanum) - Charu Nivedita
ZDP88
Regular price Rs. 120.00ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 94
Language: Tamil
வரம்பு மீறிய பிரதிகள் ( Varambu Meeriya Pirathigal) - Charu Nivedita
ZDP90
Regular price Rs. 300.00பிறகு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். தடிக்கம்புகளால் என்னுடைய முதுகு, புட்டம், பின்னங்கால், தொடை, கணுக்கால், பாதம் என்று பல இடங்களில் சீராகவும், ஒருவித லயத்தோடும் அடித்தார்கள். முதலில் வலி பயங்கரமாக இருந்தது. பிறகு தாங்க முடியாததாக மாறியது. கடைசியில், அந்த இடங்களில் உணர்வே இல்லாமல் போனது. ஆனால் அடியை நிறுத்தியதும் வலி திரும்பியது. இது போதாதென்று காயங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த என் சட்டையைக் கிழித்தெறிந்துவிட்டு சதையில் மின்கம்பியை வைத்து ஷாக் கொடுத்தார்கள். இது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. சமயங்களில் இரண்டையும் சேர்த்தே செய்தார்கள்.
தண்டனை கொடுக்காத நேரங்களில் அவர்கள் என்னை ஒரு கொக்கியில் மாட்டித் தொங்க விடுவார்கள்.
சமயங்களில் என்னைச் சித்ரவதை மேஜையில் கிடத்தி கைகளிலும் கால்களிலும் இரண்டு மெஷின்களைப் பொருத்தி எதிரெதிர்த் திசைகளில் இழுப்பார்கள். என் கண்கள் எப்போதும் கட்டப்பட்டிருக்கும் என்பதால் அந்த மெஷின் எப்படியிருக்கும் என்று நான்
பார்த்ததில்லை. ஆனால் அந்த மெஷின் என்னைப் பிய்த்துப் போடப் போவது போல் படுபயங்கரமாக இழுக்கும்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 266
Language: Tamil
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் (Kananvu Cappucino Koncham Chatting) - Charu Nivedita
ZDP77
Regular price Rs. 300.001922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது!
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 236
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள் (Pazhupu Nira Pakkangal) part 1 - Charu Nivedita
ZDP78
Regular price Rs. 400.00ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர் கூடத் தெரியவில்லை.
உவேசா, கு. அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், திருவிக என்று தொடங்கி தமிழ் படைப்புலகின் போக்கைத் தீர்மானித்த சில முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.
தினமணி இணையப் பதிப்பில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 332
Language: Tamil
மனம் கொத்திப் பறவை (Manam Kothi Paravai) - Charu Nivedita
ZDP133
Regular price Rs. 250.00சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 200
Language: Tamil
ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) - Charu Nivedita
ZDP139
Regular price Rs. 350.00தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
ராஸலீலா (Rasaleela) - Charu Nivedita
ZDP141
Regular price Rs. 900.00அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 644
Language: Tamil
எழுதிச் செல்லும் கரங்கள் (Ezhudhi Sellum Karangal) - Aathmaarthi
ZDP52
Regular price Rs. 200.00 Sale price Rs. 170.00 Save 15%எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்..?முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது?இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சி தான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமானது.
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 136
Language: Tamil
தீராக்கடல் (Theerakadal) - Aathmaarthi
ZDP47
Regular price Rs. 150.00 Sale price Rs. 125.00 Save 17%கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்.மொழியின் உச்சபட்சக் கலை வடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை. அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது, தன்னையே மறுதலிக்கிறது
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் (Pattangal Vaytha Sattai Anindaval) - Aathmaarthi
ZDP46
Regular price Rs. 150.00 Sale price Rs. 125.00 Save 17%புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 132
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more