C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Filter
சி. சரவணகார்த்திகேயன்
கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் கற்று, தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். பிறப்பு 1984. ஊர் கோவை மற்றும் ஈரோடு. புனைவு, அபுனைவு, கட்டுரை, கவிதை வெளிகளில் 14 வயது முதல் இயங்கி வரும் இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட‌ நூல்களை (அச்சு மற்றும் மின் வடிவ‌ம்) எழுதியிருக்கிறார்.
2017ல் உயிர்மை வழங்கும் சுஜாதா விருது (இணையம்), 2019ல் திருப்பூர் இலக்கிய விருது (ஆப்பிளுக்கு முன் நாவலுக்காக), 2009ல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது (முதல் நூலான சந்திரயானுக்காக‌) பெற்றவர். 2016ல் அகம் - பிரதிலிபி நடத்திய ‘ஞயம் பட வரை’ கட்டுரைப்போட்டியில் முதல் பரிசும், 2018ல் தினமணி- சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் (பெட்டை) பெற்றார். 2007ல் குங்குமம் இதழில் வைரமுத்து இவரது ‘ஒருத்தி நினைக்கையிலே…’வை முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். 2014ல் சுகன்யா தேவி கோவை பாரதியார் பல்கலை.யில் செய்த முனைவர் ஆய்வுக்கு எடுத்த நூல்களில் இவரது ‘பரத்தை கூற்று’ம் ஒன்று. 2015ல் அந்திமழை இதழ் ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’ பட்டியலில் இடம் பெற்றார். 2019ல் சிங்கப்பூரில் சிறுகதைப் பட்டறை நடத்தி இருக்கிறார் (2019). இவரது ‘மதுமிதா - சில குறிப்புகள்’ கதை குறும்படமானது.
குங்குமம் இதழில் ச்சீய் பக்கங்கள் (2012), ஆகாயம் கனவு அப்துல் கலாம் (2015), விகடன் தளத்தில் ஹலோ… ப்ளூடிக் நண்பா! (2019), அம்ருதா இதழில் நொபேல் பரிசுகள் (2011) தொடர்களை எழுதினார். உயிர்மை, விகடன் தடம், ஆனந்த விகடன், குமுதம், தினமணி கதிர், காமதேனு, ஆழம், அகநாழிகை இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. 2015 முதல் ‘தமிழ்’ என்ற மின்னிதழை நடத்துகிறார். அதில் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன் மூவரையும் நீண்ட நேர்காணல் செய்துள்ளார். திருக்குறள் காமத்துப் பாலுக்கு ஏற்கெனவே குறுங்கவிதை வடிவில் உரையெழுதியுள்ள‌ இவர் தற்போது கம்பராமாயணத்துக்கு தினமும் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார்.

7 products

7 products