இந்த உலகில் இரண்டு விஷயங்கள் வினோதமானவை. ஒன்று கடவுள். இன்னொன்று பிரியாணி. கடவுளைக் காணாதவனும் கடவுளைப் பற்றிப் பேசுவான். பிரியாணியின் ருசி அறியாதவனும் அதன் பெருமை அறிந்திருப்பான். ஓர் உணவுப் பொருள் உலகப் பொதுவானதாவது அவ்வளவு எளிதல்ல. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் மனிதர்களின் விருப்பங்கள் வேறுபடுகின்றன. ரசனைகள் மாறுபடுகின்றன. தேர்வுகள் வேறாகின்றன. ஆனால் எக்காலத்திலும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக் கூடியதாக பிரியாணி இருக்கிறது. எங்கிருந்து வந்தது இது? யார் கண்டுபிடித்த அற்புதம் இது? ஆதிகால பிரியாணியும் இன்று நாம் உண்ணும் பிரியாணியும் ஒன்றுதானா? மணமும் ருசியும் மிகுந்த பிரியாணியின் சரித்திரமும் மணமும் ருசியும் கொண்டதுதான். ருசிக்கலாமா?
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more