Releasing Soon

12% Off

கலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா

 180.00  160.00

கலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா.

என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை எண்ணி நான் பரவசமடைகிறேன். சம்மதத்தின் சப்தம் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாகவும் எல்லா உலகங்களின் ஊடாகவும் பொங்கிப் பிரவகித்து மாயாஜால நதியாய் ஓடுகிறது. அந்த அற்புதம் நம் இதயங்களை நிரப்புகிறது. வாழ்வின் கொண்டாட்டமும் குதுாகலமும் ஒரு அற்புதமான மின்னல்வெட்டைப் போல் ஒருக்கணம் நம் இதயங்களை நிரப்பும்.
– மைக்கேல் ஜாக்ஸன்

7% Off

viralgal/விரல்கள் -குட்டி ரேவதி/kutti Revathy-short stories

 150.00  140.00

viralgal/விரல்கள் -குட்டி ரேவதி/kutti Revathy-short stories published by zero degree publishing

யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள்.

11% Off

King Lear/லியர் அரசன் -William Shakespeare- Translated by Justice Dr.S.Maharajan

 420.00  375.00

தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.
லீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்
சொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.
இத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.

– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்

7% Off

சினிமா எனும் பூதம் -R .P .ராஜநாயஹம்

 375.00  350.00

இந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான்.

எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே
கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை
இந்த நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

பிங்க் நிறக் கடல் -தனசக்தி

 80.00

என்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே.

பிங்க் நிறக் கடல் என்று தலைப்பு அறிவித்ததும் இந்தோனேசியாவில் பிங்க் கடற்கரை இருப்பதாக நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
ஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாயத்தை நம்பத் தொடங்கியிருந்தேன்.

உரையாடலில் பெரும் மழை -அய்யப்பமாதவன்

 100.00

எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே
இக்கவிதைகள்.

– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்

8% Off

மனக்குகைச் சித்திரங்கள் -ஆத்மார்த்தி

 270.00  250.00

 

பகிர்வதற்கு ஒரு துணையில்லாத ரசனை ஆளில்லாக் காட்டில் அலையும் பேய் போன்றது.

9% Off

சேராக் காதலில் சேர வந்தவன் -ஆத்மார்த்தி

 120.00  110.00

கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்

பொய்யாய் பறத்தல் -ஆத்மார்த்தி

 100.00

வேட்டை மறந்தாலும் சூது மறக்காது

10% Off

boundless and bare- A.Madhavan

 155.00  140.00

boundless and bare- A.Madhavan

 155.00  140.00

From the entrance of the Padmanabhaswamy temple in Trivandrum, Kerala one could clearly see the market spread across like a mini Trivandrum extending as far as one could see like a thick carpet.Each of the shops  and the people in the market carried a story within them.The author has lived,and breathed ,the bazzar as the back of his hand.It is only fitting that the author has conceived this book keeping the bazzar as the heart with each character and story unique.His imagination brings out the interesting characteristics of each of the players depicted in the stories.With intricate descriptions woven in to the story, the author lets the imagination of the reader flow freely like a river.These stories talk about the bitterness,the wants,the dreams,ego,lust and everything else that the bazzar flows with, These stories bring out the volatility that depicts the very human nature in its most naked form.

We've got a sale! 10% Off! Dismiss