All Books

பாலும் மீன்களும் -அய்யப்பமாதவன்

 100.00

அய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை.

அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்தையும் பேணிக்கொள்பவை.

அய்யப்பன் இப்பற்றின்மை மீதான தனது உற்று நோக்கலைக்கொண்டு காட்சியும் கதையுமாக அங்கே கவிந்திருக்கும் அன்பின் வலைப்பின்னலை நமக்கு உளவியலாகவும் கவித்துவமாகவும் தந்துவிடுகிறார். தானாக நிறையும் கிணற்றடி கதைகளில் துலங்கிய பெண் மனோபாவங்கள் தொட்டு இயற்கையும் பெண்ணுமாகிய உறவு நிலைகளில் இவ்வுலகை அனாயாசமாக துல்லிதமாக விவரிக்கும் இவ்வகை யதார்த்தம் நவீன பாடுபொருட்களில் நமது இடத்தையும் காலத்தையும் அளவிட்டுச் சொல்ல முயல்கின்றன.

-யவனிகா ஶ்ரீராம்

ஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்

 130.00

பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.

மொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன .
-நேசமித்ரன்

20% Off

தீக்கொன்றை மலரும் பருவம் -அபூபக்கர் ஆடம் இப்ராஹிம்

 499.00  400.00

பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும்  ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி-  கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது   தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று நிகழப் போகிறதென்று உணர்ந்தாள்.  இருபத்தைந்து வயது ஹஸன் ’ரெஸா, ’ போதைப் பொருள் விற்பனை செய்பவன், உள்ளூர் ரவுடிகளின் தலைவன் , திருடும் பொருட்டு அவளது வீட்டின் வேலியைத் தாண்டிக் குதித்தபோது, அவள் இதயத்தில் தடம் பதிக்கப்  போகிறான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அசாதாரண சூழலில் சந்தித்துக்கொண்ட இருவரும் ரகசிய உறவின் பயணத்தில் திளைத்திருக்கையில்,  பிந்த்தாவின் செல்வச்செழிப்புடைய மகன் அதை அறிய நேரும்போது, எதிர்பாராத வகையில் அவலமும் துயரமும் ஏற்படுகின்றன.

பழமைவாதமும், கட்டுப்பாடுகளும்  நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும்  வன்முறைகளைப் பின்புலமாகக்  கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.

5% Off

Ponniyin Selvan- Kalki

 630.00  600.00

Ponniyin Selvan- Kalki

 630.00  600.00

Ponniyin Selvan is Kalki R Krishnamurthy’s magnum opus, set in 10th century Tamil Nadu, exploring the early life of Emperor Rajaraja the 1st. It might have been written more than 60 years ago, but this saga is timeless, reeling in readers with a gripping plot interwoven with intrigue, conspiracies, mystery, romance and adventure. Fresh Floods is Book 1 of a total of five volumes.

Who is the rightful heir to the ancient Chozha throne? Will Madhuranthakar—son of the eldest son—or Aditha Karikalan—the grandson of the younger—wear the crown? And will justice prevail in this struggle for power?

Follow our young, enthusiastic hero Vallavarayan Vandhiyathevan on his fascinating journey, as this historical fiction based on real characters and incidents unfolds at a spell-binding pace, delving deep into human tendencies, desires, personal motives, political ambitions and the fight to gain power at all costs.

12% Off

ராஸ லீலா-முன்பதிவு

 900.00  800.00
அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா.  மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும்.  ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும்.  அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.  நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.  ஆரம்பமும் முடிவும் அற்ற இந்தப் பித்தவெளிப் பிரதேசம் ‘சைபர்’ உலகின் அபத்த நாடகங்களை பெரும் கேளிக்கையாகவும் கேலிச் சித்திரங்களாகவும் மாற்றுகிறது.  சர்வதேச இலக்கியப் பிரதிகளும் சினிமாவும் உப பிரதிகளாக ஊடுபாவும் உப பாதைகளில் பயணிக்கத் துவங்கும் ஒரு வாசகர் தன் வாழ்நாளுக்குள் வாசித்துத் தீர்க்க முடியாத ஒரு மகத்தான சவாலையும் இந்த நாவல் முன்வைக்கிறது.

                                                                  மே. அருணாச்சலம், மதுரை

10% Off

வரம்பு மீறிய பிரதிகள் -சாரு நிவேதிதா

 300.00  270.00

பிறகு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். தடிக்கம்புகளால் என்னுடைய முதுகு, புட்டம், பின்னங்கால், தொடை, கணுக்கால், பாதம் என்று பல இடங்களில் சீராகவும், ஒருவித லயத்தோடும் அடித்தார்கள். முதலில் வலி பயங்கரமாக இருந்தது. பிறகு தாங்க முடியாததாக மாறியது. கடைசியில், அந்த இடங்களில் உணர்வே இல்லாமல் போனது. ஆனால் அடியை நிறுத்தியதும் வலி திரும்பியது. இது போதாதென்று காயங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த என் சட்டையைக் கிழித்தெறிந்துவிட்டு சதையில் மின்கம்பியை வைத்து ஷாக் கொடுத்தார்கள். இது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. சமயங்களில் இரண்டையும் சேர்த்தே செய்தார்கள்.
தண்டனை கொடுக்காத நேரங்களில் அவர்கள் என்னை ஒரு கொக்கியில் மாட்டித் தொங்க விடுவார்கள்.
சமயங்களில் என்னைச் சித்ரவதை மேஜையில் கிடத்தி கைகளிலும் கால்களிலும் இரண்டு மெஷின்களைப் பொருத்தி எதிரெதிர்த் திசைகளில் இழுப்பார்கள். என் கண்கள் எப்போதும் கட்டப்பட்டிருக்கும் என்பதால் அந்த மெஷின் எப்படியிருக்கும் என்று நான்
பார்த்ததில்லை. ஆனால் அந்த மெஷின் என்னைப் பிய்த்துப் போடப் போவது போல் படுபயங்கரமாக இழுக்கும்.

10% Off

இதெப்படி இருக்கு ? – க்ரீன்ஸ்டோன் லோபோ

 400.00  360.00

2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா?
கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா?
கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா?
விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்
ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்
முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா? ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால்,
எதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள
முடியுமா?
அறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன
ஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று
உறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்
ஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்
கணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட
பலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.
ஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய
விளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,
உலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.
இந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்
பற்றி சொல்ல லோபோ ரெடி! கேட்க நீங்கள் ரெடியா?

OH!THOSE PARSIS- BERJIS DESAI

 500.00

In this A to Z on Parsis:

How Parsis convert the dirtiest swear words in to terms of endearment

pesi, who got the Pope himself to intercede to reduce the volume of bells rung at St.Joseph’s Church,Dadar

Maku Macbeth’s OCD which compelled her to change her undergarments five times a day

The inside story of famous Parsi murderers

Men who believe why have a wife when you have your Mummy

Parsi mediums communicating with the dead to obtain indigestion remedies

கடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா

 120.00

ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.

10% Off

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்-சாரு நிவேதிதா

 250.00  225.00

சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து அசோகமித்திரன் வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.

12% Off

மூடுபனிச் சாலை-சாரு நிவேதிதா

 260.00  230.00
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால்,
சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூகச் சித்திரங்கள் உருவாகின்றன.

கடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா

 130.00
சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை.
குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என
பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.
10% Off

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்-சாரு நிவேதிதா

 200.00  180.00

சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசாங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளைப் பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.

15% Off

அஸாதி அஸாதி அஸாதி- சாரு நிவேதிதா

 350.00  300.00
தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது
அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை.
தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.
இவற்றில் பல கட்டுரைகள் மலையாள
இதழ்களில் வெளிவந்தது தற்செயலான
ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
7% Off

சூரியகாந்தி -நா சிதம்பரசுப்ரமணியன்

 150.00  140.00
“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.”
சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந்த வார்த்தைகளுக்குத்
தன் எழுத்தின் மூலமாக உதாரணமாகத் திகழ்ந்தவர் ந. சிதம்பரசுப்பிரமணியன்.
11% Off

சக்கரவாகம் -நா சிதம்பரசுப்ரமணியன்

 190.00  170.00
பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெய்விக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது உண்டாகிறது. காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ, சிதம்பரம் கோயிலைப் போன்ற பேராலயத்தினுள் நுழையும்போதோ எத்தகைய சாந்தமும் தூய்மையும் மிகுந்த எண்ணங்கள் உண்டாகுமோ, அந்த எண்ணங்கள் உங்கள் கதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு உண்டாகிவிடுகின்றன.’
– ந.சிதம்பரசுப்பிரமணியனுக்கு நா. பார்த்தசாரதி 1957-ல் எழுதிய கடிதத்தில்…
9% Off

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி-சாரு நிவேதிதா

 120.00  110.00

சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கின்றன.

10% Off

சினிமா சினிமா-சாரு நிவேதிதா

 200.00  180.00

சாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா, சினிமாவின் அழகியல் மற்றும் அவை பேசும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.

10% Off

காமரூப கதைகள் – சாரு நிவேதிதா

 499.00  450.00

சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.

10% Off

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்-பாகம் 2- சாரு நிவேதிதா

 300.00  270.00

1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.  நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார்.  உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.  இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார்.   இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது.  ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது!

We've got a sale! 10% Off! Dismiss